எனது கவிதைகள் கவலையை மட்டுமே வெளிப்படுத்துவதால் எனது வாழ்க்கை முழுவதும் கவலைகள் நிறைந்தது என்ற எண்ணம் வேண்டாம். அழும்போது எல்லாம் கண்ணீர் வருவது போல சிரிக்கும்போது வருவது இல்லை. எனது கவிதைகள் கண்ணீரை வெளிப்படுத்தும், எனது நிழற்படங்கள் எனது மகிழ்ச்சியை பிரதிபலிக்கும். ஒரு நாட்குறிப்பு முடிந்து அடுத்த நாட்குறிப்பில் சில பக்கங்களை எழுதிய என்னால் ஒரு பெட்டி நிறைய நிழற்படங்களை சேர்க்க முடிந்தது. இப்போதெல்லாம், அனைத்துமே கணிப்பொறிக்குள் அடக்கம். மௌனமாக எனது எழுத்துக்கள் மகிழ்ச்சிக்கும் இடம் கொடுக்க முயற்சி செய்கிறது.

எனது எண்ணங்களை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டுவர வாய்ப்பு அளித்த இணையதளத்திற்கு எனது முதல் நன்றி. தோளுக்கு மேல் உயர்ந்தால் தோழன் என்பதால், எனது பெற்றோரையும் தோழனாக்கி என் நட்புக்கும்... ஏன், நட்புக்கும் மேற்பட்ட உறவுகளுக்கும், எனது குடும்பத்திற்கும், எனது நன்றி.

குறிப்பு: உங்களுக்கு என்னைத் தெரியுமானால், இந்தப் பக்கத்தை முன்பின் தெரியாத ஒரு எழுத்தாளனின் புத்தகத்தைப் படிப்பதுபோலப் படிக்கவும். உங்கள் கருத்துக்களை contact@enpakkam.com தெரிவிக்கவும்.

பழையன


    அட்டவணை

    தலைப்பு தேதி தலைப்பு தேதி
  1. ஆரம்பம்
  2. 02-Oct-2009
  3. இறைவன்
  4. 06-Nov-2009

  5. புத்தருக்கே பூணூல் போடுவோம்
  6. 27-July-2023
  7. ..
  8. ஒரு நூறு டாலர்
  9. 31-May-2013
  10. கண்ணீர்த் துளிகள்
  11. 23-Apr-2013
  12. முதியோர் இல்லம்
  13. 17-Apr-2013
  14. கணவன்
  15. 19-May-2013
  16. வேர்
  17. 17-Feb-2013
  18. you and me
  19. 09-Nov-2012
  20. சாமி
  21. 14-Oct-2012
  22. மேலோர்
  23. 17-Jun-2011
  24. உயிருக்குக் காதல்
  25. 01-Apr-2011
  26. Happy Anniversary
  27. 23-Mar-2011 (11-Dec-2009)
  28. ஏனோ
  29. 16-Mar-2001
  30. காதல்
  31. 04-Mar-2011
  32. அன்றும், இன்றும்
  33. 21-Jan-2011
  34. ??சுதந்திரம்??
  35. 10-Dec-2010
  36. கோவில்
  37. 09-Nov-2010
  38. மனதிற்குள்
  39. 22-Sep-2010
  40. கதிரவன் ஒளி
  41. 29-Aug-2010
  42. சொல்லும், முகமும்
  43. 24-Aug-2010
  44. சமையல்
  45. 11-Aug-2010
  46. ஒன்றா பலவா
  47. 18-May-2010
  48. உணர்வு
  49. 18-May-2010
  50. மரணம்
  51. 17-May-2010
  52. அணை
  53. 13-May-2010
  54. மனைவி
  55. 23-Apr-2010
  56. அழுத்தம்
  57. 14-Apr-2010
  58. தென்னை
  59. 14-Apr-2010
  60. மொழி
  61. 14-Apr-2010
  62. வெறுக்க முடியாதது
  63. 13-Apr-2010
  64. எழுதாத பக்கங்கள்
  65. 25-Mar-2010
  66. அரிது அரிது விலங்கினமாய்
  67. 15-Mar-2010
  68. எதிர்காலம் தெளிவானதால்
  69. 11-Mar-2010
  70. கருத்தடையை மீறி
  71. 04-Mar-2010
  72. பிறந்த நாள் வாழ்த்து - 3
  73. 18-Dec-2009
  74. பிறந்த நாள் வாழ்த்து - 2
  75. 16-Dec-2009
  76. பிறந்த நாள் வாழ்த்து - 1
  77. 08-Dec-2009
  78. என் எழுத்துக்கள்
  79. 17-Dec-2009
  80. இணையதளம்
  81. 04-Dec-2009
  82. தேக்கம் - 3
  83. 12-Nov-2009
  84. உயிர்
  85. 11-Nov-2009
  86. ஹிந்தி பாடல்கள்
  87. 06-Nov-2009
  88. உறவு
  89. 04-Nov-2009
  90. பசி
  91. 29-Oct-2009
  92. கறை
  93. 29-Oct-2009
  94. விபூதி
  95. 29-Oct-2009
  96. என்றென்றும்
  97. 29-Oct-2009
  98. இரவீந்திரநாத் தாகூர்
  99. 29-Oct-2009
  100. தெளிவு
  101. 29-Oct-2009
  102. உண்மை
  103. 29-Oct-2009
  104. கோவில் மணி
  105. 26-Oct-2009
  106. தேக்கம் - 2
  107. 26-Oct-2009
  108. ஓரெழுத்துக் கவிதை
  109. 26-Oct-2009
  110. முழுமையை நோக்கி
  111. 28-Oct-2009
  112. மனம்
  113. 27-Oct-2009
  114. மரபு
  115. 23-Oct-2009
  116. தேர்வு
  117. 23-Oct-2009
  118. சுயநலம்
  119. 23-Oct-2009
  120. மறைவு
  121. 23-Oct-2009
  122. தேக்கம்
  123. 20-Oct-2009
  124. நீ
  125. 27-Sep-2009
  126. விமானத்தளத்தில்
  127. 17-Sep-2009
  128. நட்பு
  129. 13-Sep-2009
  130. வலி
  131. 10-Sep-2009
  132. வாழ்க்கை
  133. 08-Sep-2009
  134. பாகுபாடு
  135. 04-Sep-2009
  136. இலங்கை
  137. 24-Aug-2009
  138. விமானத்தில்
  139. 10-Aug-2009

    கடந்த காலத்தை நோக்கி

  140. காய்ந்த இலை
  141. முதல்
  142. நியதி
  143. வெண்ணிற மேகம்
  144. காட்டுப் பூ
  145. பயணம்
  146. காதல்
  147. பிறந்த நாள் வாழ்த்து
  148. பிறந்த நாள் வாழ்த்து
  149. தெய்வீகம்
  150. விண்மீன்
  151. பிரிவு
  152. இறைவன்
  153. மணமகள் தேவை
  154. கிணற்றின் ஓரம்
  155. இலக்கணம்
  156. உனக்காக
  157. என்னைப் பொறுத்தவரை
  158. தந்தையே
  159. உன் கண்ணோரப் பார்வை
  160. கடும் புயல் அடித்தாலும்
  161. கண்ணீர்த் துளிகள்
  162. குரலைக் கேட்கும் என்னால்
  163. நிலவே நீ எங்கே
  164. என்னால்
  165. பாசறை
  166. முற்றுப் புள்ளி
  167. மனம்
  168. காலடித் தடங்கள்
  169. எழுதுகோலை எடுத்து எழுத
  170. பூமிக்கு சூரியன் போன்று
  171. விடியலுக்கு காத்திருந்த விழிகள்
  172. மீண்டும் கனவுகள்
  173. நோக்குமிடமெலாம் இறைவன்
  174. தோள்களில் அமர்ந்த
  175. எனதுயிரின் ஜீவநாடி
  176. உனை நானும் தோள் சேர்க்க
  177. கடந்தவைகள் கண்ணீர்த் துளிகளில்
  178. என் புறமுதுகில்
  179. எண்ணங்கள் எழுத்துக்களாய்
  180. சமர்ப்பணம் செய்யப்பட்டது
  181. வெண்ணிற மேகம் - 2
  182. வெண்ணிற மேகம் - 1
  183. எழுதுகோலை காகிதம்
  184. அர்த்தமுள்ள அனர்த்தங்கள்
  185. துன்பங்கள் தூக்கில் போடுகின்றன
  186. உணர்வுகளெல்லாம் ஒடுங்கி
  187. கூவத்தின் கரையில்
  188. உன் வீட்டுக் கதவின்
  189. கட்டாயங்கள்
  190. வானத்தில் இருக்கும் வட்டநிலவை
  191. காதல்
  192. சிட்டுக் குருவி
  193. என் கண்கள் பார்ப்பதும்
  194. எரிமலைத் தாகம்
  195. கடந்த கால நினைவுகள்
  196. உறவுகளின் உண்மைகள்
  197. மறைந்த சூரியன் உதித்துவிட்டது
  198. புத்தம் புது உலகம்
  199. வாயினில் வார்த்தைகள்
  200. கடல்
  201. இரவுக்குப் பின்னே உதயம்
  202. மழலையைத் தேடி
  203. இன்று நான் விழித்த பயன்
  204. நீயிருந்தால்
  205. கண்ணே நில்லு
  206. சத்தியம் பேசுதடி
  207. உனது முத்தம் உள்ளங்கை வழியே
  208. எனது மழலையின் நிழல் வடிவம்
  209. நிலவின் வழியில் நான்
  210. அம்மா உந்தன் காலடி சேர
  211. சோகத்தைப் போக்கிவிடு
  212. சின்னச் சின்ன காலடி வைத்து
  213. உடலைத் தவிர்த்து
  214. மேகங்களே என்னை
  215. தத்தி தத்தி நடந்து வந்து
  216. மௌனம்
  217. காதலிக்கின்றேன்
  218. ஒவ்வொன்றாய்
  219. தொலைந்ததைத் தேடி
  220. கண்ணீர்ப் பூக்கள்
  221. நிழலும் நிஜமும்
  222. என்னால் முடிந்தது
  223. இன்று முதல்
  224. தேக்கம் - பழையன

  225. என்இனிய ஆதிமூலா
  226. தனிமையில் சிரித்தேன்
  227. பள்ளியிலே பயின்ற போது
  228. வேற்றுமை
  229. தனிமை
  230. குருவி
  231. கனவுகள் எனது ஊன்றுகோல்கள்
  232. என்னையும் நீ அறிவாய்
  233. தட்டுங்கள் திறக்கப்படும்
  234. நிலவே
  235. காதலியால் நான் கருவுற்றேன்
  236. நெஞ்சைக் கிழித்து
  237. எனது காதல்
  238. வாழ்க்கையினை வெறுத்தவன்
  239. துக்கங்கள் கண்களைக் கரைத்தது
  240. உனது நிஜங்கள் அகலலாம்
  241. ஒரு துளி
  242. சிறுமி
  243. மீண்டும் பிறந்த நாள்
  244. பிள்ளைப் பிராயத்திலே நிந்தன்
  245. காதலர்கள்
  246. பகலில் ஏற்றிய மெழுகுவர்த்தி
  247. காதல் ஆத்திச்சூடி
  248. கண்டவுடன்

ஆரம்பம்

சாம்பல் பூசியவனும், சுடுகாட்டில் வசிப்பவனும்
பாம்பில் படுத்தவனும், பக்தர்கள் காப்பவனும்
நான்முகனாய் சிந்தித்து மூவுலகை படைத்தவனும்,
ஆசைகள் துறந்து அன்பை வளர்த்தவனும்
சிலுவையை சுமந்து சிந்திக்க வைத்தவனும்
அனாதையாய் வளர்ந்து ஆண்டவன் ஆனவனும்
சொல்லாத கருத்தினை சொல்ல நினைக்கவில்லை
புதுமையாய் ஏதுமில்லை எளிமையை தவிர இங்கு

Hindu civilization contains many religious believes. Some of them are Saivam, Vaishnavam, Butham, and other major religions I know are Christ, and Muslim. Around twenty-two years ago, I saw all these religion symbols in one home. Praying the God needs no religion, it is just the believe.

இறைவன்

எங்கு நோக்கினும் இறைவன் என்றார்
எண்ணத்தில் நிறைந்து இருந்தால் - எங்கும்
நிறைந் திருப்பவர் எண்ணத்தில் இல்லையெனில்
நிலையானவன் இல்லை என்பார்

கல்லுக்குள்ளும் கருந் தேரைகுள்ளும்
வில்லுக்குள்ளும் அம்புக்குள்ளும் - பிரிந்த
உயிருக்குள்ளும் அசையும் அசையா பொருளுக்குள்ளும்
உணரத் தெளிவு வேண்டும் என்பார்

அன்பினால், உயர் சிந்தையினால் பெற்ற
அன்னையை, தந்தையை போற்றும் - பண்பினால்
கல்வியினால் தெளிந்த கருத்தினால், ஆழ்மனத்தினால்
புல்லிலும் புரியும் என்பார்

where ever you see god is there
if she is in thoughts – almighty
is nowhere to feel if she
is not in the heart

in stones, in toad
in the bow, and the arrow
in the soul, moving or stable things
almighty lives

with love, and clear thoughts
with the loving parents,
with knowledge, and loving heart
felt in small grass too

If there is a faith in God, there is a God, if no faith, then no God. If there is clarity in the mind, then God is everywhere, if not then nowhere.


புத்தருக்கே பூணூல் போடுவோம்

புத்தருக்கே பூணூல் போடுவோம்
தேவை என்றால் எதுவும் செய்வோம்

பாபாவுக்கே பட்டை போட்டு
எளிமையைப் போதித்தவருக்கு
தலையில் பாகை வைத்து
பட்டு உடுத்திக் கடவுள் ஆக்குவோம்

சிலை இருந்தால் போதும்
அவர் கடவுளாக்கப்பட்டு
காசாக்கப் பயன்படுவார்

எனக்கு சிலை வைப்பதில் சம்மதம் இல்லை
இருந்தும் எனக்கு சிலை வைத்தால்
எழுதுங்கள் அதன் கீழே

கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி
கடவுளை மற, மனிதனை நினை

இராமனும் கண்ணனும் மனிதனானால்
இறைவனும், யேசுவும் மனிதனானால்
அவர் வாழ்க்கையும் எட்டப்படும்

கண்ணனின் கருத்துக்களும்
புத்தனின் போதனைகளும்
யேசுவின் எண்ணங்களும்
சகமனித வாழ்க்கையிலும் எட்டப்படும்

அரசியல் இன்றி ஆட்சி அமையும்
எளியோரை வலியோர் மதிக்கும்
அனைத்தும் அனைவரும்
சமமென்னும் காலமும் கை கூடும்

Imagining myself as Periyar (E.V.Ramasamy) and sharing the thoughts.

I saw a picture of Budha with threads on the shoulder crossed.

In temple, the simple person Baba will be decorated with expensive materials.

Someone said, tell me the definition of God, then I'll tell exists or not.

Considering Raman, Krishnan, and Jesus as humans, then common person can also live like them. Do not make them as God, and make it uncommmon.

Equality in everything includes trees, and dirt is the final, and that day is not far away.


ஒரு நூறு டாலர்

பத்திரிக்கையைப் பிரித்தேன் அழகான படங்கள்
புகழ் பெற்ற மனிதருக்கு இரட்டைக் குழந்தையாம்
நிழற்படத்திற்கு ஒரு மில்லியன் டாலர்

இவர் இன்று இந்த நிறுவனத்தின் தலைவர்
இன்று முதல் இவர் சம்பளம்
மாதத்திற்கு ஒரு மில்லியன் டாலர்

பல நாள் போராடி விளையாட்டில் வெற்றி
பட்டம் கொடுத்தார்
பணமும் கொடுத்தார் ஒரு மில்லியன் டாலர்

வாடகைக்கு ஒர் அறை
மூன்று நட்சத்திர விடுதி
ஒரு நாளைக்குக் கேட்டார் ஒரு நூறு டாலர்

நேரம் ஆனதால் நானும் கிளம்பினேன்
நானும் வேலைக்குப் போனேன்
ஒரு மணி நேரத்திற்கு ஒரு நூறு டாலர்

மாலையில் செய்தி சாலையோர வேசி
இன்றும் சிலர் கைது
ஒரு மணி நேரத்திற்கு ஒரு நூறு டாலர்

opened the magazine
famous people delivered a twins
for a cover photo, a million dollars

he who become ceo
from today his salary
per month is a million dollars

after long matches, become a winner
got the trophy
and the prize money a million dollars

rented a room
in a three star hotel
per day, a hundred dollars

getting late, got ready
started for the work
per hour, a hundred dollars

evening news, roadside hooker
got arrested today too
per hour, a hundred dollars


கண்ணீர்த் துளிகள்

கோவிலில் எவற்கும் தெரியா வகையில்
சுவரில் எழுதினேன் கைவிரல் முனையில்
நான் உன்னைக் காதலிக்கவில்லை என்று
ஏனோ எனக்கும் அது தெரியாமல் போனது

வெறுக்க நினைத்தாலும் வெறுக்க முடியவில்லை
நான் அதற்குப் பெயரிட்டேன் காதல் என்பதை
கடவுளை வெறுத்தேன், முடியவில்லை
வாழ்க்கையை வெறுத்தேன், முடியவில்லை

உன்னை என்னிடமிருந்து ஒளித்துக் கொள்ள
உண்மையைச் சொன்னால் எதுவும் இல்லை
என்னை விட்டு நீ விலகிச் செல்ல
என்னிடம் என்றும் காரணம் இல்லை

காலம் சொல்லும் கடந்துசெல் என்று
நண்பர் சொல்வர் நல்லதற்கென்று
நதிகள் என்றால் கடந்து செல்லும்
கடலின் அலைகள் கரையை முட்டும்

விளக்கு இல்லா வெளிச்சம் கேட்டேன்
கதிரவன் காலையில் கருணை செய்தான்
எப்போதும் இதுபோல் வேண்டும் என்றேன்
கையை அசைத்து இரவைக் கொடுத்தான்

நாட்கள் என்றால் இரவும் பகலும்,
வாழ்க்கை என்றால் பிறப்பும் இறப்பும்
ஏனோ இன்றும் என் நகக்கண் முனையில்
எழுத்துக்கள் என்னும் கண்ணீர்த் துளிகள்


முதியோர் இல்லம்

பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்தாள் அன்னை
அன்புண்டு, பண்புண்டு
அளவோடு வசதி உண்டு
நானும் வளர்ந்தேன்
என்னோடு என் அன்னையும் வளர்ந்தாள்
உண்மையில் வயதானாள்

சிறுவனாய் இருந்தபோது நான் உணர்ந்தது இதுதான்
பாட்டியின் காலை நான் உதைப்பேன்
அவள் என்னைத் தொட்டுக் கும்பிடுவாள்
என் தந்தையும் இப்படித்தான்
என சொல்லி மகிழ்வாள்

மற்றொரு பாட்டியின் பற்களை உடைத்தேன்
மீண்டும் ஒருமுறை -
பல்லை அல்ல, பற்களை உடைத்தேன்
விடிந்ததும் என்னை
பொக்கைவாயுடன் அணைத்தாள்

தூங்கும் பாட்டியின் கண்களைப் பிரிப்பேன்
அன்புடன் என்னை அழைத்தாயா என்பாள்
தூங்கிவிட்டாயா? கேள்வி எழுப்பினேன்
இல்லை சும்மா கண்ணை மூடியிருந்தேன்
என்று கூறிக் கதையைத் தொடர்வாள்

ஒன்றல்ல இரண்டல்ல,
மூன்று பாட்டியுடன் வளர்ந்தேன்
ஒன்றைப் புதைத்தேன்
மற்றொன்றைத் தீயிலிட்டேன்
இளையவள் இறந்தபோது
தனிமையில் அழுதேன், கடல் கடந்திருந்ததால்

எனக்கும் இங்கு மனைவி உண்டு
குழந்தை உண்டு, நண்பர் உண்டு
பிறந்த மண்ணைப் பிரிந்த எனக்குத்
தனிமையில் என்றும் கண்ணீர் உண்டு

பெற்ற பிள்ளைக்குப் பாட்டி இல்லை
எட்டி இடறக் கால்கள் இல்லை
உடைக்க இங்குப் பற்கள் இல்லை
தூங்கும் கண்கள் பிரிக்க இல்லை
சுருங்கச் சொன்னால்
பாட்டி என்ற உறவே இல்லை

இன்றும் அழைத்தேன் என்றும் போல
அன்புடன் கேட்டாள் என் வயதான அன்னை
உணவு முடிந்ததா? ஒழுங்காகத் தூங்கினாயா?
வேலை எப்படி? உன் குடும்பம் எப்படி?

இன்றும் கேட்டேன் என்றும் போல
தனிமையில் இன்னும் எத்தனை நாள் இப்படி?
குளிர் தாங்காது, கோவில் குளமில்லை
வளர்ந்த இடத்தைப் பிரிவது கடினம்

பதில்கள் மட்டும் மாறி மாறி வரும்
முடிவு என்றும் முடியாது என்பதே
பெற்ற அன்னை முதியோர் இல்லத்தில்
பிறந்த குழந்தை அனாதையாய்த் தனிமையில்


கணவன்

தனியாய் நான் இருந்தேன் எனக்குள்ளே தனிமை பட்டேன்
எங்கிருந்தோ நீ வந்தாய், உன்னிடம் நான் வந்தேன்
என் வாழ்வில் நீயா, உன் வாழ்வில் நானா
எனத் தெரியாமலே, நம் வாழ்வில் நாமானோம்

பெத்தவங்க பண்ண முடியாத சேவையெல்லாம்
நான் கேட்காமலேயே பண்ணிப்புட்ட
என்ன நான் மாத்திக்க முடியாத நேரமெல்லாம்
என்ன நானவே நீயும் ஏத்துக்கிட்ட
காலம் கடந்தாலும், தூரம் போனாலும்
என் கிட்டயே இருப்பதுபோல்
மனசுக்குள்ள ஒட்டிக்கிட்ட

பெத்த புள்ள இரெண்டும் இங்க
பாயில் படுத்து உறங்கயில
என் கண்ணும் உறங்கலயே, மனசும் சேந்துதான்
வாழ்கை வளமாக, காசு பணம் சேர்க்க
நீ போனது தெரிஞ்சும் இந்த
பாவி மனம் தூங்கலயே, மனசும் சேந்துதான்

உன்னோட நானிருந்த இடமெல்லாம் சொல்லுதய்யா
சேர்ந்து இருந்ததயே புகைமறைவில் காட்டுதய்யா
காலம் கடந்தாலும், வயது ஆனலும்
என்றும் குறையாத பெத்த பாசம் ஊட்டுதய்யா

என்ன நான் தொலச்சிபுட்டு தேடும் நேரமெல்லாம்
எனக்காக என்கூட என்னை தேடினியே
உன்ன நான் பிரிந்துவிட்டு வாடும் காலமெல்லாம்
தொலைபேசி வழியாக ஆறுதல் காட்டினியே

ஆண்டுகள், நாட்கள் என காலம் ஆனாலும்
புதிதாய் பூத்த பூப்போல தெரியிரியே
இன்னும் பலவருடம் வாழ்வில் போனாலும்
பாட்டி தாத்த போல வாழணுமே


வேர்

என் நெஞ்சில் விதைத்தான் உன்னை
காலம் கடந்தது
பல கிளைகள், பல இலைகள்
மலர், காய், பழம் என பல்வகை
நிறங்களும், மணங்களும், காலங்களும்

சிறிது நிழல் கொடுத்தேன்
முடிந்தவரை உணவானேன்
இலைமறைவில், கிளை இடுக்கில்
பறவைகளுக்கு வீடானேன்

கடவுள் வந்தான்
என்ன எனத் தலையசைத்தான்
ஒரு பதில் வேண்டும் என்றேன்
சொல் என ஒரு பார்வை பார்த்தான்
விதை எங்கே என்றேன்

விதை வேர் ஆனது
வேரால் கண்ணுக்குத் தெரியும் பெரு உருவானது
வேர் இருக்கும்வரை நீ இருப்பாய்
உன்னால் முடிந்த விதை விதைப்பாய்

மீண்டும் ஒரு வசந்தகாலம்
பலப்பலப் பூக்கள், சில காய்ந்தது
சில காய்த்தது, சில பழமானது
அதில் சில விதையானது
வேர் என்னை வலிமை ஆக்கியது

he seeded you in me
time past
branches, leaves,
flowers, and fruits
colors, fragrance, and seasons

gave little shadow
serve a little food
behind the leaves,
between the branches
gave some nests

god came
what? he nodded
i need an answer
tell me – he gave a look
where is the seed

seed became root
'cause of root, got this shape
'cause of root, you'll be alive
plant as much as seed
as much as you can

one more spring
more and more flowers,
few became fruits,
few became seeds
root made me strong


you and me

i may not know when i know you
you may not know when you know me
but we may remember some moments
to show that we care for each other

maybe the days you came long way for me
or the day i signed a surety for you

maybe the day i hit someone for you
or the day you hit someone for me
maybe the day i hit you with a pipe
or the day you poke me with a pencil

maybe the day you searched me in dark crowded beach
or the day i travel long distance to find you

maybe the day you got a first gig for me
or the day i asked you to quit smoking
maybe the day we made fun in our street
or the last day i carried you to grave

maybe the day i need a shoulder to cry
or let my shoulder for you to cry

maybe the music can help to convey
the meaning of the words more than they can
maybe the friendship can help to say
the meaning of the relation more than they can

we remember some moments
to show that we take care of each other
some may say this is friendship
but we always say this is love

உன்ன எனக்கு தெரிஞ்ச நாள் நானும் அறியலயே
என்ன உனக்கு தெரிஞ்ச நாள் நீயும் அறியலயே
அங்க இங்க கடந்தகாலம் நமக்காக நாம் என்று
இலைமறை காய்மறைவாய் எடுத்து சொல்லுதுல்ல

என்ன நீ தேடி வெகுதூரம் வந்த நாளோ
உனக்கு நான் சாட்சி கையெழுத்து போட்ட நாளோ

உனக்காக நானும் தெருசண்ட போட்ட நாளோ
எனக்காக நீயும் கைநீட்டி அடிச்ச நாளோ
உன்ன நானும் இரும்புக் குழாயால் அடிச்ச நாளோ
என்ன நீ பென்சிலால் குத்தி இரத்தம் வந்த நாளோ

இருட்டு கடற்கரையில் என்ன நீ தேடி வந்த நாளோ
தீபாவளித் திருநாளில் உன் வீடு சென்ற நாளோ

எனக்காக முதல்வேலை நீ பிடித்துத் தந்த நாளோ
நீ சிகெரெட்டுப் பிடிப்பதற்குத் தடைவிதித்த அந்த நாளோ
நம் தெருவில் இன்பமாய் தின்னுத்திரிந்த நாளோ
உன் இறுதி ஊர்வலத்தில் உனைத்தீயில் இட்ட நாளோ

உன் தோளில் நான் சாய்ந்து புலம்பி அழுத நாளோ
என் தோளில் நீ கோர்த்து கண்ணீர் வடித்த நாளோ

இருக்குற வார்த்தையில வெளிவராத வருத்தமெல்லம்
இசையால வழிந்துவந்து மனச தொடுவதுபோல்
நட்பு எனும் வார்த்தை சொல்லாத பொருளையெல்லாம்
நமக்குள்ள உறவுமுற பொங்கி பொழியுதுல்ல

அங்க இங்க கடந்தகாலம் நமக்காக நாம் என்று
இலைமறை காய்மறைவாய் எடுத்து சொல்லுதுல்ல
வெறுக்க முடியாத நமக்குள்ள உள்ள நட்பு
கொஞ்சமாய் வளந்து வந்து காதலாய் ஆனதுல்ல


சாமி

கண்ணு பாக்குறதெல்லாம் மூள(ளை) பாக்குறதில்ல
மனச(சை) பாக்குறதுக்கு கண்ணு (இ)ரெண்டும் தேவ(வை)யில்ல(லை)

கால கருக்கலிலே கண்மணியே உன்னப் பாத்தேன்
மால வேளையிலே மல்லியப்பூ பாதம் பாத்தேன்
படுக்கப் போகுமுன்னே பால்நிலா மொகத்தப் பாத்தேன்
கண்மூடி கனவுக்குள்ளே காலமெல்லாம் உன்னப் பாத்தேன்

பொறக்குறபோது இங்க யாரும் தெரியாது புள்ள
இறக்கும்போது கூட யாரும் வருவதில்ல
வாழும்போது உன்ன பாத்தேன், கடவுள பாத்ததில்ல
போகும்போதும் உன் நினப்பு என்ன விட்டுப் போவதில்ல

கொழந்தையும் கடவு ளென்பார்
காதலும் கடவு ளென்பார்
நீரு, நெலம், நெருப்பு, வானம், காத்தும் கடவுள் என்பார்
எனக்கு நீ சாமியின்னா ஏளனமா என்ன பாப்பார்

கண்ணு பாக்குறதெல்லாம் மூள பாக்குறதில்ல
மனச பாக்குறதுக்கு கண்ணு ரெண்டும் தேவ யில்ல


மேலோர்

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்த்தி உயர்த்தி சொலல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
பாரதி கூறினார் மேலே இருப்பதை
நிச்சயம் நானில்லை

தவறுகள் செய்வதில்லை, அதனால் நீதி தேவையில்லை
உயர்ந்த மதி இங்கில்லை, கற்றது கைமண்ணளவு ஆனதால்
பள்ளிக்கு போகாததால் கல்வி இல்லை
சுற்றமும், தோழமையும் இல்லாததால் அன்பும் இல்லை

என் வரம்புகள் மீறிச் செல்லாததால்
இங்கு சுதந்திரமும் தேவை இல்லை
நான் மேலோரா இல்லையா எனக் கேள்விகள் இல்லை

வள்ளுவர் எழுத்தறிவில்லாதோர் குருடன் என்றார்
பாரதி நீ அன்புடையார் மேலோர் என்றாய்

மனிதனே மனிதனாய் வாழாமல்
சுதந்திரமாய் சற்று மிருகமாய் வாழ்ந்து பார்
உயிருக்கு உத்திராவதம் இல்லை எனினும்
வாழ்க்கைக்கு உத்திரவாதம் உண்டு
வரலாறு எழுதாவிடினும் இறைவனை வணங்காவிடினும்
இங்கு வாழ்க்கைக்கு உத்திரவாதம் உண்டு


உயிருக்குக் காதல்

உடலுக்கு உயிர்போல உயிருக்குக் காதல்
உயிர் பிரிந்தால் பிணம்
காதல் பிரிந்ததால் வெறும் மனம்
தட்டித் தடங்கி நடக்கும் குழந்தைக்கு
சுதந்திரம் கொடுத்து எல்லை வரைவோம்
உறவுக்குக் கைகொடுத்து வரையரை போட்டு
உயிருக்கு இங்கு வேலி போட்டோம்

குழந்தைக்குப் பாதுகாப்பு உதவும் கரங்கள்
உறவுக்குள் அடைபட்டு உடையும் மனங்கள்

கடவுள் என்பது கற்பனையா என கேள்வி எழுவதுபோல்
காதல் என்பதும் கனவுகளா என எண்ணம் பிறக்கிறது
இறையும் உயிரும் இந்தக் காதலும் உணர முடிகிறது
இதயத்திற்குள் சுனாமி அலைகள் அனைத்தையும் அழிக்கிறது

இறைவனை நோக்கிப் பார்ப்பது மேலே
எனது கதிரவன் உதிப்பது மேற்கே


Happy Anniversary

Happy and Joy, laughter shed my tear
With you in my life, I got no fear
Writing my scripts, feeling you are near
I am in love with you, heart is so clear

Sitting alone near the fire place
Seeing the past all alone in haze
To come up in life the hurdles we face
Without you my life’s without trace

I feel so complete deep in my heart
Always a pleasure we will never be apart
To show my love life is so short
I'll work so hard to make your's so soft

For all my pains you are the cure
At least for today, always be here
I need you in this life, beyond and more
As long as I live, that is for sure

(Wrote on 11-Dec-2009, in web on 23-Mar-2011)

மகிழ்ச்சியும் சந்தோஷமும் சிரிப்பும் கண்ணீர் தந்தது
உன்னுடன் வாழும் வாழ்க்கை பயத்தை வென்றது
எழுத்துக்கள் பிறக்கையில் நெருக்கத்தில் உணர்ந்தது
உன்னுடன் காதலில் என் எண்ணம் தெளிந்தது

தனிமையில் குளிரில் தணலருகே இருந்தேன்
பழையன கழிந்ததை புகைமூட்டமாய் கண்டேன்
வாழ்வில் முன்னேற தடைகள் பல தாண்டினேன்
நீயின்றி என்வாழ்வே இல்லையென உணர்ந்தேன்

முழுமையை அடைந்ததில் இதயத்தில் நிறைவு
உனக்கும் எனக்கும் என்றும் இல்லை பிரிவு
என் காதலை உணர்த்த இவ்வாழ்க்கை சிறிது
உன் வாழ்வின் இன்பம் எனக்கென்றும் பெரிது

என் எல்லா வலிகளுக்கும் நீயே மருந்து
உன்னோடு சிற்றுண்டியும் அமிழ்தினும் இனிது
எப்பிறவி எடுத்தாலும் நம்முள் உள்ள உறவு
என்றென்றும் தொடரவேண்டுவதே என் கனவு


ஏனோ

இராமன் என்பார் முருகன் என்பார்
உலகில் பிறந்த இறைவனேசு என்பார்
எல்லாம் வல்ல அல்லா என்பார்
புத்தன் என்பார் சிவம் என்பார்

சிலர் எல்லாக் கடவுளும் ஒருவர் என்பார்
பலர் தனதே சிறந்தது என்பார்
அப்பாவிகள் ஆயிரம் ஆயிரம் இறந்துபோனால்
எல்லாம் கலிகாலம் என்பார்

கடல் கொண்ட இடங்களை
கண்ணீரில் தொலைத்து விட்டோம்
செந்தணல் கொண்ட உயிர்களை
காலப்போக்கில் மறந்து விட்டோம்

தனிமனிதன் கொல்லைப் பட்டரைபோல்
நாய் கொண்ட தேங்காய் போல்
உலகில் உள்ள பொருள்களெல்லாம்
உனக்கே உனக்காய் சொந்தம் போல்

எங்கோ இருந்துகொண்டு ஏதேதோ செய்யும் உனை
ஒருவரென்றும் பலரென்றும் தெரியாத தெய்வத்தை
என்னுள்ளே நொந்துகொண்டேன்
அப்பாவி உயிர்களை வதைப்பதனால்

you say rama i say muruga
some says jesus is the one
or almighty allah is
some say buddha some say shiva

few say god is one
rest says mine is the greatest
if thousands died then
they say this is the time to end

lost in the sea
we lost in the tears
burned in the fire
time erased entire

as individuals workshop
as a dog got a coconut
as you are the one
as who entitled to own

wherever you are whatever you do
one or more, who knows you
all i can do is just to curse you
nature destroy our world, because you


காதல்

காதல் என்பது வெறும் உணர்ச்சிகள் இல்லை
காதல் என்பது கொச்சையும் இல்லை
இன்றும் எந்தன் இதயத் துடிப்பு
எந்தன் தலையை அதிரச் செய்தது

எழுதிய என் காகிதம் சொல்லும்
என் எழுத்துக்களில் உள்ள வளைவுகள் சொல்லும்
கிறுக்கிய தமிழும் காகிதம் படாத பேனா மையும்
உதறும் எந்தன் கையும் சொல்லும்

இதே குளிர்தான் இதுவரை இருந்தது
உன்னைக் காணும் நேரம் மட்டும்
உச்சிமுதல் என் உள்ளங்கால்வரை
உள்ளத்தின் எழுச்சியை வெளிக்காட்டுவதேன்

காதல் என்பது வெறும் உணர்ச்சியும் இல்லை
காதல் என்பது கொச்சையும் இல்லை
வெறுக்க முடியாத அன்பு என்றும்
ஏங்கி நிற்பது அன்புக்கு மட்டும்

love is not just feelings
love is neither dirty
even today my heart beat
makes my head quake

my script paper will tell
twists in my letters will tell
scribbling letters, shivering hands
parts of paper untouched by pen tip will tell

same old cold until now
whenever i see you
head over heal
why i show my feelings

love is not just feelings
love is neither dirty
unhateable affection longing for
just affection only forever


அன்றும், இன்றும்

வேலை நாட்களில் காலை உணவு இட்லி
விடுமுறை நாட்களில் தோசை
வருடத்தில் சிலமுறை சப்பாத்தி அல்லது பூரி
மதிய உணவுக்கு சாப்பார் சாதம்
தொட்டுக்கொள்ள காயோ கூட்டோ
இரவு தேவைப்பட்டால் அப்பளம் உண்டு

அதிகாலை வேளை அலுவலகம் செல்வார்
வானம் இருட்டிடும், சிலநாட்கள் கண்களும்
காலடி சத்தம் கேட்டு கதவைத் திறக்க
சூழ்ந்த இருட்டில் ஓடியபோது
தடுக்கி விழுந்ததால் இன்னும்
நெற்றியில் தழும்பு, இதயத்தில் நினைவு

மரத்தில் செய்த பாத்திரம் பண்டம்
ஓடித் தேய்ந்த சைக்கிள் டயர்கள்
தெருநாயின் உடம்பில் ஓடும் உண்ணிகள்
எங்கள் சந்தில் வந்து போவோர்
உடன் பிறந்தோர் வீட்டருகில் வசிப்போர்
இவர்கள் எல்லாம் விளையாட்டுத் தோழர்கள்

அறைக்கு அறை தொலைக்காட்சி இல்லை
வெளியில் சுற்ற வாகனம் இல்லை
வெப்பநிலையைக் கட்டுப்படுத்த வசதிகள் இல்லை
கணிப்பொறி யுகத்துக் கருவிகள் இல்லை
பொழுதுபோகவில்லை என்ற நினைப்பும் இல்லை
எதிர்காலம் பற்றிய கேள்விகள் இல்லை

மனதிற்குள் முணுமுணுக்காத அம்மாவின் அன்பு
சோர்வு காட்டாத அப்பாவின் கண்கள்
எதிர்பார்புகள் இல்லாத நண்பரின் நட்பு
இயற்கையை ஒட்டிய இயல்பான வாழ்க்கை
அன்று நான் சிறுவன், இன்று நான் தகப்பன்
அன்று என் அம்மா, இன்று என் மனைவி

I tried, and not able to write the same in English.

Hence I just translate –

When we were young, we get simple breakfast, lunch, and dinner. It is not fancy, but sure healthy and fulfill our needs.

Dad goes to work early, and come very late. One day, I ran to open the door, tripped, and got a deep cut in my forehead.

We used to play with toy utensils, worn-out bi-cycle tires, stray dog, and the friends who visit our street

We don’t have televisions, vehicles, air-conditioner, and video games, still do not feel like bored, never thought about the future

Our mom loving affection with no murmur, dad’s never tired eyes, friendship with no expectations, and life closure to the nature. In the past, I was the son, now I am the father. Same way, in the past my mom, and now it is my wife.


??சுதந்திரம்??

எழுத்துக்கள் காணாமல் போயின
கருத்துக்கள் எல்லாம் சிறுகுறிப்போடு
   நின்று போயின
கருமட்டும் உருவாகி எண்ணங்களிலேயே
   கலைந்து போயின

கண்ணீர் இல்லை, கவலைகள் இல்லை
கிறுக்கல்கள் எல்லாம்
   கவிதையாகப் பிறப்பதும் இல்லை
இயல்பு இயல்பாய் நின்று போனது

இயற்கை என்பது இதுதான் போலும்
எல்லை என்பது இதுதான் போலும்

சுதந்திரம் -
   கருத்துக்கு
   எண்ணத்திற்கு
   கனவுகளுக்கு
ஏன் இல்லை வாழ்க்கைக்கு

எல்லாமே ஒரு வரையறைக்குள்
சரி, தவறு
தேவை, தேவையில்லை
மற்றவரின் எண்ணங்களுக்கு
என்றுமே கட்டுப்பட்டு

நியாயம் தோற்பதில்லை
பெற்றால்தான் பிள்ளையா
தெய்வம் மனித உருவில்
வாக்கியங்களுக்கும், வாழ்க்கைக்கும்
சம்பந்தம் இல்லை

?freedom?
lost all my letters
all my thoughts
stuck in short notes
like the smoke in the air

no tears, no worries
scribblings are
nomore scripts
natural flow stoped naturally

this may be the nature
this may be my limit

freedom for -
   thoughts
   desire
   dream
but not for practical life

all are within limits
rights, and wrongs
needs, and not
always thinking
about what others think

justice cannot be repealed
--
love is god
no relation between
statements and reality


கோவில்

இன்று என் பிறந்த நாளும் இல்லை
இறந்த நாளும் இல்லை
நினைவுகூற மட்டும் பலப்பல உண்டு

ஒரு வீடு இல்லம் ஆவதுபோல்
ஒரு இல்லம் கோவிலானது
எங்கும் தெய்வம் இருந்தாலும்
நிம்மதியைத் தேடி சராசரி மனிதன்
போவது கோவில்தானே

சுற்றுச்சுவரில் தனிமையில் இருந்தாலும்
மொட்டைமாடியில் மல்லார்ந்து படுத்தாலும்
எத்தனை மனஉளைச்சல் எனக்குள் இருந்தாலும்
அமைதியைத் தருவது எங்கள் இல்லம்தானே
இல்லம் கோவிலானதும் இன்னாளில்தானே

today - not my birthday
not my death day too
still too much to remember

a house become a home
now the home become holy
god is everywhere
still an average person
goes to temple for piece

sitting alone on the compound wall
relaxing on the rooftop
how many confussions i have in me
i get the piece in my home only
home become holy on this day only


மனதிற்குள்

இருட்டு தனிமைப்படுத்தப் பட்டேன்
அவ்வப்போது சிறுசிறு சத்தம்
ஒன்றும் புரியவில்லை சோர்ந்து விழுந்தேன்
எழுந்து பார்த்தபோது சுற்றிலும் சுவர்கள்
கண்ணைத் திறந்தாலும்
மூடியிருப்பதுபோன்று ஒரு இருட்டு

மெல்ல மெல்ல வெளிச்சம்
அங்கங்கே தோன்றியது
நிழல்கூட விழாதவகையில்
கையை மூடிப்பார்த்தால்கூட
நிழல் தெரியாதவகையில்
மென்மையான வெளிச்சம்

ஆண்டுகள் கடந்தது போலும்
பகலுக்கும் இரவுக்கும்
வேற்றுமை அறியாவகையில்
பல ஆண்டுகள் கடந்தது போலும்

திடீரென ஒருநாள்
அந்திவேளையில் சுவர்கள் மறைந்தது
கதிரவனின் வெளிச்சம் மட்டும் தெரிந்தது
தொடர்வது பகலா இரவா
நொடிகள் நிமிடங்களாக
நிமிடங்கள் நாட்களாக
வாழ்க்கை தொடந்தது
எப்போதும் அந்திவேளையாகவே

inside my mind

darkness, left alone
sometimes small sounds
felt tired, and i was down

when i was up
walls around me
keep my eyes blinking
doesn’t feel the difference

slowly got the light
all over the place
until there is no shadow
even if i close
my hands and see,
there is no shadow
in that soft and even light

felt like years were past
don’t feel the difference
between the day and night
many years may past

all of a sudden, one day
during the twilight
the walls are gone
don’t know the next
is the day or night
seconds become minutes
minutes become days
and the life continues
without knowing
the next is the day or night


கதிரவன் ஒளி

விளக்குக்குத் தெரிவதில்லை
   தான் யாருக்கு வெளிச்சம்
கொடுக்கிறோம் என்று

எண்ணை ஊற்றியவன் மட்டும்
   பெறுவதில்லை வெளிச்சம்
சுற்றி இருப்பது வெளிச்சம் என்றும்
   இருட்டு என்றும் கூடப் பார்ப்பதில்லை

எண்ணை இருக்கும்வரை எரிந்து
எண்ணை தீர்ந்தால் திரியும் தீர்ந்து
தன்னலம் இன்றி
   இருக்கும்வரை தரும் வெளிச்சம்

விளக்கே இவ்விதம் என்றால்
எண்ணை ஊற்றாத எங்கள் கதிரவன்
திரிகூட இல்லாமல்
   தன்னையே எரிக்கிறான்
தன்னலம் இல்லாமல்
உலகில் உள்ள உயிர்கள் மட்டுமல்ல
உலகமும் என் கற்பனைக்கு
எட்டாத அந்த அண்டமும்

வீட்டிற்குள் அமர்ந்து தொலைக்காட்சியை
வெறித்துக் கொண்டிருந்தவன்
வெளியில் வந்து கதிரவனை
இரசிக்க ஆரம்பித்தேன்

light doesn’t know
who is getting the light

it doesn’t matter
who lit and who’s not
it doesn’t matter
whether it is
dark or bright

until there is a source
to burn, continue to burn
nothing but burn
and provide the light

simple light is in this way
then what is the sun’s way
without a lint
without the source
burn itself to help the world
and beyond

came out from home
walking on the sunlight
feeling the sun and
felt the pleasure


சொல்லும், முகமும்

அதிகாலை எழுந்து
வெகுதூரம் பயணம் செய்து
பல தடைகளை, இன்னல்களை மீறி
ஒருவழியாய் அலுவலகம் வந்தேன்
வேலையின் சுமையில் நேரம் தெரியவில்லை
பசியும் உணரவில்லை

மனைவியின் அழைப்பை தொலைபேசி காட்டியது
மணித்துளிகளையும் சேர்ந்துத்தான்
அன்புடன் விசாரித்தாள் மதிய உணவு முடிந்ததா என்று
பயணக் களைப்பு பறந்து போனது

என்றும் போல அன்றும் அதே உணவுவிடுதி
வரிசையில் நின்றேன்
என்முறை வந்தது
சிரிய புன்னகையுடன் கேட்டாள்
இன்றும் அதே சப்பாத்தியும் சென்னாவும்

ஆமாம் எனத்தலை அசைத்து
இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்
ஒரு ரூபாய் இல்லையா என்றாள்
இல்லை எனத் தலையசைத்தேன்
புன்னகையுடன் மீதம் தந்தாள்
அமைதியுடன் உணவு உண்ண
வேலை சுமையும் காணாமல் போனது

Wokeup early in the morning
Travelling long distnace
Through the hudles, and troubles
Finally came to office

‘Cause of workload
Doesn’t realized
Neither time nor hunger

Wife called in mobile
Showed the time too
With love she asked
Did you finished your lunch
I lost all the travelling tiredness

Asusual went to the regular café
Standing on the line
Got my turn
With smile she asked
Regular for you

Yes, without saying nodded my head
Gave a twenty dollars note
She asked me,
So you don’t have a dollar
Again just said no by action
With smile she gave me the balance

Total calmness, started to eat
I lost all the work tension too


சமையல்

அடுப்படியில் இருவரும் நின்றோம்
புளியைக் கரைத்து பாத்திரத்தில் போட்டோம்
பருப்பும், காய்களும் தொடர்ந்தது
கடுகை தாளித்து, கருவேப்பிலை போட்டு
அளவுடன் உப்பை போட்டு
ஆகா என்ன மணம், சுவை
   அவள் குழம்பிலிருந்து
என் பாத்திரம் மட்டும்
   என்னைக் குழப்பத்தில் பார்த்தது

காலமும், நேரமும்,
   சொல்லும், செயலும்
     மட்டும் போதாது
செய்பவரையும் பொருத்தது
விளைவுகள் எனப் புரிந்தது

Situation, Time, and Place
Are not the only reson for the net result,
But also the person who do

ஒன்றா பலவா

மின்சாரம் என்பதே சக்தி
   என ஓர் கணிணி நினைப்பதுபோல்
கடவுள் ஒருவன் என்றே
   இந்த மனிதன் நினைக்கின்றான்
மனிதன் படைத்த இயந்திரம்
   எல்லாம் ஒன்றுபோல் இல்லையே
இறைவன் படைத்த படைப்புகள்
   யாவும் ஒன்றாய் இருக்கிறதோ

மனிதன் ஒன்றா பலவா என்று
   கேள்விகள் இங்கில்லை
இறைவன் ஒன்றா இல்லையா
   என்று உணர முடிவதில்லை
வெப்பம் என்றும் வெளிச்சம் என்றும்
   காற்று என்றும் கடல்அலை என்றும்
சக்தி என்பதே தெய்வம் என்றால்
   அதுவும் பலப்பல உண்டு

கண்கள் விழிக்க உதவிகள் இல்லை
   படிக்காத மொழிகள் புரிவதும் இல்லை
பிறக்கும் போதே உடன் வரும் உணர்வுகள்
   வாழ்க்கை வழியில் கற்றிடும் கல்வி
ஒப்பிட்டுப் பார்தால் மனிதனும் கணிணியும்
   ஒன்றாய் இருப்பதாய் எனக்குத் தெரிகிறது
கடவுள் மட்டும் ஒன்றா பலவா என்ற
   கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது

as computer thinks
electricity is the only energy
humans think
the god is one
things made by humans
are not looking alike
did god’s creations
are looking alike?

no questions about
the humans are one or more
but can’t feel
the god is one or more
if heat and light
wind, and sea are gods
if sun and stars
all energies are gods
i feel many, many
and so many as god

to open the eyes, don’t need the help
unlearnt languages are not understandable
some come with the birth
some learnt in the life
compare the same with pc
humans and machines are similar
still is the god is one or more?


உணர்வு

நெருப்பு சுட்டது அனல் என் மேல் பட்டதால்
அமிலம் அரித்தது என் தோல் மேல் பட்டதால்
காதுகளின் மடல்கள் உரைந்தது
அதிகப் பனியில் சில நிமிடம் நடந்ததால்

காரணங்கள் சொல்லமுடியாமல்
செயல்கள் உரைந்தது
இதயம் அரித்தது
உயிர் உருகியது

என் கண்களின் ஒரம் ஈரம் கசிந்தது
மனைவி கூறினாள்
ஒவ்வாமைக்கு மாத்திரை போட்டாயா என்று

hurt in body
you need a reason
hurt in soul
you may have a reason

sometimes you can say,
sometimes you may not

may act with the face
but watch closer
the eyes may not


மரணம்

முளைக்காது எனத் தெரிந்து
விதைக்கப்படும் விதை
புண்ணியம் எதிர்பார்க்காமல்
வளர்க்கப்படும் யாகம்
இதில் ஏதோ ஒன்று
மானிடராய் பிறந்த
நம் எல்லோர்க்கும் என்று

எரித்தது உன்னை
உருகியது என் நெஞ்சம்
என்னை ஒளிரச் செய்தாய்
உன் இழப்பினால் கூட

புதைத்திருந்தால்
என் நெஞ்சில் முளைத்திருப்பாய்
எண்ணங்களாக, செயல்களாக

பிரிந்து இருப்பத்தி இரண்டு
ஆண்டுகள் கழிந்தும்
என்னை விட்டு பிரியாத எண்ணங்கள்

இறந்தாலும் இறக்காமல்
பிரிந்தாலும் பிரியாமல்
என்றென்றும் என் இறுதிவரை

after the death
human body
either buried or burned

we burned you
you lit me the fire
in my heart
be the light in my life
even with
the lost of yours

if we buried you
you might become
seed for my life
for my thoughts, and actions

more than twenty-two years
still it is as fresh as today
memories forever
we are friends forever

death doesn’t separate
life doesn’t either
we are friends forever


அணை

ஈசனென்றும் கூறிடுவார்
இமயமென்றும் கூறிடுவார்
தலையில் தொடங்கி பனியாய் உருகி
மலையுடன் தவழ்ந்து
நிலமுடன் நடந்து
கடலினில் கலக்கும்

போகும் வழியெல்லாம்
பல உயிர்களுக்கு உதவிடும்
உணவாகும் சில நேரம் உயிர் காக்கும்

விலங்கென்றும் பறவையென்றும்
மனிதனென்றும் மீனென்றும்
தாவரமென்றும் கண்ணுக்குத் தெரியா
நுண்ணுயிர் என்றும்
வேறுபாடு இல்லாது
கடல் சேரும்வரை கைகொடுக்கும்

மானிடன் மட்டுமே தன்னலம் கொண்டு
அணைகள் கட்டி சில இடங்களில் தேக்கினான்

வயல் செழித்தது,
அவன் வீட்டில் வெளிச்சம்
இயற்கை சிரித்தது,
மற்ற உயிர்களுக்கு இருட்டு

சிறு ஓடை ஓரம்கூட
புல் பூண்டு முளைத்திருக்கும்
தவளை கவிபாடும்
மண்புழுக்கள் நடனமிடும்

பொறுத்திருந்த இயற்கை
போதுமென முடிவெடுத்தது
தவழ்ந்து நடந்த நதி இன்று
ஓடிவந்து அணை முட்ட
இயற்கை வென்றது
மற்ற உயிர்களும் மகிழ்ந்தது

அணையை உடைத்தது ஆறு
என்று உன்
தடையை உடைக்கும் உன் அன்பு

love starts with the god
flows with the live
penetrate through the life
try to build the world
without the war

when there is life
there is love
give us the life
sometimes save too

animals, or birds
humans, or fish
plants or bacteria
when there is life
there is love

sometimes the situation
sometimes the surroundings
enclose the love
with fence build by love

with all the limits
there is life
without the limits
there is the world
beyond and more

- அன்பிற்கும் உண்டா அடைக்கும்தாழ் உண்டே
- அதன் பெயர் அன்பு


மனைவி

பாரதியின் புத்தகத்தை எடுத்தேன்
மெதுவாய் ஒரு முனகல் சத்தம்
சமைத்துக் கொண்டிருந்தாள்

தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கினேன்
பாத்திரம் வேகமாய் வைக்கும் சத்தம்
பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்

தொலைபேசியை எடுத்தேன்
என் நீண்டகால நண்பரிடம் பேச
அப்படி என்னதான் பேசுவீங்க?
பேச ஆரம்பித்தாள்

உனக்கு என்னதான் வேண்டும் என்றேன்
முழுமையாக வேண்டும் நீ, என்றாள்

started to read a book
heard some murmur
she is cooking

started watching television
heard noise of utensil
she is cleaning

took the telephone
to talk to my childhood friend
what you guys always talk?
she started talking

i asked, what do you want?
she replied “you”


அழுத்தம்

கருத்தடை செய்து
   கருவைத் தடுப்பதுபோல்
விழித்தடை செய்து
   பார்வை தடுப்பதுவோ
உதிரம் ஓட்டம் தடுத்து
   உயிரைப் பிரிப்பதுவோ
உன் கண்ணில் பட்டால்
   போதும் என்றது பொய்யோ
விழிகளின் கண்ணீர் உள்ளே
   சென்று மனதை அழுத்தியதோ

prevention for pregnency
obstruction for the eye sight
blockage for the blood flow

is just me a glance in your sight
is all the bluff to convince
tears starts to presure
my heart and the soul


தென்னை

உன் உத்திரவுடன்
கடல் கடந்த தேங்காய் ஒன்று
கரையோரம் ஒதுங்கியது
மண்ணுக்குள்ளே புதைந்து
குருத்து மட்டும் தலைகாட்டியது

உப்புநீரும் மழைத்துளிகளும்
மற்றவர் கால் அழுத்தமும்
கதிரவன் கணைகள் கொடுத்த வளர்ச்சியும்

வளர்ந்து வந்த வாழ்க்கையில்
பல மட்டைகள் காய்ந்து விழ
காலம் மட்டும் சென்றது

இன்று நெடிந்துயர்ந்த தென்னை மரம்
உடல் முழுவதும்
மட்டை விழுந்த தழும்புகள்

நிழல் கூட உதவாத நிலையில்
தொடந்து கொண்டிருந்த வாழ்க்கை
எங்கிருந்தோ வந்தான்
மரம் ஏறும் மனிதன்

மட்டை முதல் குருத்துவரை
இளநீர் முதல் தேங்காய்வரை
பிரித்தெடுத்து பகிர்ந்துகொண்டான்

மரத்திற்கு மரியாதை
மரமேறும் மனிதனால்

மரம் பூமியை அணைத்தது
தன் அன்பெனும் வேர்களால்

உருண்டு பெருத்த அந்த பூமி
உலகம் எனப் பெயர் கொண்டது
அன்பெனும் தன் ஈர்பினால்
தனை அண்டியோரின் வாழ்வினால்
.... .... .... ....

came to the world
with the permission of god

with love and hatred
with hunger and fiesta
with help of the sun rays
one step at a time start to grow

lot of memories
some good, some bad
some stays in heart forever

with no purpose
all i did was to grow
somebody came in life
to give the meaning

i start to love the life
now i am attached
with the world i grow

if everyone
care for others
then there is no hatred
as the gravity of the world
keep the hugging power forever

may be the earth
become world
because of the life


மொழி

கருத்துக்கள் பிறப்பது தாயின் மொழியில்
மொழிபெயர்த்து எழுதுவது மற்ற மொழியில்
உணர்வுகள் காட்டுவது முகத்தின் திரையில்
வார்த்தைகள் தொடர்வது புரியாமல் போவதில்
விலங்குகள் பேச மொழிகள் இல்லை
ஒலியும் முகமும் வாலும் மட்டும் போதும்

thoughts comes in the mother tongue
translate in other language
face shows the feelings
words continues when face fails
animals don’t need language
sound, face, and the tail are enough

வெறுக்க முடியாதது

பூமிக்கடியில் நீரோட்டம் போல் சகோதர பாசம்
பிரிந்தே இருந்தாலும் பிரியாதிருப்பது நட்பு
அத்தனை தவறையும் மன்னித்து ஏற்பது தந்தை
அத்தனையும் மறந்து ஏற்பது தாய்
வெறுக்க நினைத்தாலும் வெறுக்க முடியாதது காதல்

invisible affection between siblings
distance and time cannot separate frienship
forgive and accept father
forget and accept mother
try to hate, but still not able to then it’s love

எழுதாத பக்கங்கள்

திறந்திருந்த எனது வாழ்க்கைப் புத்தகம்
பல இடங்களில் எழுதப்படாமல்
படிக்கும் புத்தகம் இடையே
சில எழுதாத பக்கங்கள் போல்
கடலுக்குள் மூழ்கிய சில நாடுகள்
எழுதப்படாத சில அத்தியாயங்கள்

முன்னுரையும் முடிவுரையும் இல்லாத புத்தகம்
நிழல் மட்டுமே தெரியவைத்து
எடுக்கப்பட்ட புகைப்படம் போல்
எழுதப்படாத பக்கங்கள் எல்லாம்
எண்ணிலடங்கா நான் நான் நான்
உண்மை தெரிகையில் என்னை நொந்த நான்

அன்னையை விட்டு வெளிவர ஒன்பது மாதம்
என்னை விட்டு வெளிவர நாற்பத்தி இரண்டு ஆண்டுகள்
சுதந்திரம் கிடைக்கும்போதே பொறுப்புகள்
இந்தக் கழுதை இனி வண்ணானுக்கு இல்லை
ஆனால் முதுகில் சுமை குறையவில்லை
கடமை கல்லறைவரை, வாழ்க்கை?

தொலைக்காட்சியில் போர்க்கால கைதிகள் பேட்டி
பலவருடங்கள் பட்ட கொடுமைகள்
மிகப் பொறுமையாய் விளக்கிச் சொன்னார்
ஒரு நடுக்கம் கூட குரலில் இல்லை
கண் முன்னால் கொடூரக் கொலைகள்
அத்தனையும் தாண்டி ஒரு சிலர் உயிருடன்

ஒருவர் தொடர்ந்தார் கொடுமையின் எல்லையை
"தாயின் கண்முன் என்னை வதைத்தனர்"
உடனே தொடர்ந்தது கண்ணீர், நின்றது வார்த்தை
"கருத்த முடியுடன் வந்த அன்னை
வெளுத்த முடியுடன் வெளியில் சென்றாள்"
அழுகை தொடந்ததால் இடைவெளி எடுத்தனர்

நான், என், எனது கொடுமைகள் உண்டு
என்னை, என் செயலால் எத்தனை தாய்கள்
கருத்த முடியுடன் வாழ்க்கைக்கு வந்து
வெளுத்த முடியுடன் வெளியில் செல்வார்?
திறந்த எனது வாழ்க்கைப் புத்தகம்
என் பாவங்கள் மட்டும் எழுதப்படாமலே

my life is an open book
with plenty of unwritten pages
like the blank pages
in between the chapters
like the lost cities in the sea
blank pages as chapters

neither an introduction, nor the end
like the snap
shows only the shadow
blank pages contains
unlimited me, me, me
when realize the truth, lost me

nine months to come out from womb
forty-two years to come out from me
freedom comes with responsibilities
don’t work for one,
but the burden never done
duty until die, life?

prisoner of war interview in tv
years of struggle
patiently explains
without any tremble
plenty of crucifixion
few left to tell stories

one continued extend of cruelty
“atrocity in front of my mother”
continued the tears, stopped the words
“came with black hair,
mom, left with all white”
continued the tears, compelled the break

me, mine, by me have atrocity
mine, my actions make many moms
came with black hair
left with white hair
my life is an open book
with unwritten sins


அரிது அரிது விலங்கினமாய்

மனிதன் தன்னை உயர்ந்தவர் என்கிறார்
படித்தவர் என்றும் மடையர் என்றும்
பணம் படைத்தவர் என்றும் ஏழை என்றும்
உயர்ந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும்
தன்னைப் பற்றி உயர்வுகள் பேசி
மனிதன் தன்னை உயர்ந்தவர் என்கிறார்

எறும்புப் புற்றுக்குப் பட்டா இல்லை
ஈசல் புற்றில் பாம்புகள் குடிபுகும்
சிறிதும் பெரிதுமாய் மீனின் வகைகள்
வடமுனை முதல் தென்முனை செல்லும்
சிறகுகள் மட்டுமே துணையாய் கொண்டு
உலகின் அழகை பறவைகள் இரசிக்கும்

அறிவியல் பேசி உலகம் தாண்டாது
மொழிகள் பேசி இலக்கியம் எழுதாது
வரைபடம் வரைந்து எல்லைகள் பிரிக்காது
ஆயுதம் தாங்கி தன்குலம் அழிக்காது
பெற்றவர் பிள்ளைகள் சுற்றம் சூழ்ந்தோர்
பிரியாது இருந்து வாழ்ந்து களிக்கும்

சுற்றியுள்ள பறவைகள் விலங்குகள் காடுகள்
கடல்கள் மீன்கள் வானம் விண்மீன்
அனைத்தும் தானே அறிந்து தெளிந்ததுபோல்
இது சரி, இது தவறு,
இதை செய்தால் உனக்கு உணவு
இவர் சான்றோர் இவர் சிறியோர்

பிரிவினை தனக்குள் படைத்த இந்த
மானிடன் என்போன் மிகமிக அதிகம்
உலகில் எங்கும் எதையும் அழித்து
கோடிகளை மீறிய எண்களைத் தாண்டி
எங்கு நோக்கினும் இருக்கும் இவராய்
ஆவது என்பது மிகமிக அரிதாம்

இரண்டு ஆயிரம் ஆண்டுகள் முன்பே
இருந்த ஔவை இன்று இருந்திருந்தால்
அரிது அரிது விலங்கினமாய் பிறத்தல் அரிது
விலங்கினமாய் பிறந்திடினும்
மானிடர் கண்படாமல் வாழ்வது அரிது
மானிடர் கண்படாமல் இருந்திடினும் ...

human claims themselves great
rich or the poor
scholar or the dumb
great or not
speaking about themselves
humans claims themselves great

ant doesn’t claim the home for itself,
same way, some insects build the home,
and others may also occupy
fishes from one end of the pole to the other end
same way the birds with no pollution

animals don’t talk science, and get out of the world
no language, and so no literature
no maps, and no borders for the places
no weapons, and they don’t kill to dominate
live as group, die in / as / for / in group
live happily until the end of life

on the other hand,
humans claims they know the total environment,
they know the rights and wrongs,
always pay the others for work,
all are measured even the knowledge

still humans create the fights,
destroy the world,
grow more and more beyond a billion,
then how come to become a human is tough

if the ovai – writer in older days writes now, then she may say,
it is tough to become animal,
even if, then it is tough to live away from human eyes,
even if, live away from human eyes ….


எதிர்காலம் தெளிவானதால்

எதிர்காலம் தெளிவானதால்
கடந்த காலத்தை நோக்கி
எனக்காகத் தேய்ந்த செருப்புகள்
நான் வெட்டி எரிந்த நகங்கள்
தேவை எனத் தெரிந்தும்
பிடுங்கப்பட்ட கண்கள்

போராட்டம்தான் வாழ்க்கை
எனப் பாலூட்டி வளர்காததால்
போராடாமலேயே தோற்றுப் போனவை
தோன்றும்போதே எழுதாத கவிதைபோல்
யோசித்து இழந்த வாழ்க்கை
இறைவன் இன்னும் தெரியவில்லை

இலக்கு இல்லாமல் எரியப்பட்ட பந்து
இன்று கையைத் தேடிப் போகிறது
படைத்தவனை பிரிந்த மானிடன் போல்

knowing the future
reaching for the past
worn-out slippers
thrown out nails
needed but still
pulled out eyes

not knowing that
life is struggle
lost so much without struggle
like not writing the script as flows
loosing the essence in life
still searching for the god

thrown ball without the target
searching for the hand
like humans separated from the creator


கருத்தடையை மீறி

கணிப்பொறியை எடுக்க மனமில்லை
இணையதளம் இல்லாத காரணத்தால்?
கவிதை எழுத காகிதம் எடுக்கவில்லை
கருத்துக்களுக்கு கருத்தடை விதித்ததால்?

தனிமையில் ஒரு வார்த்தைகூடப் பேசாமல்
மௌனம் மட்டுமே துணையாய்
ஐம்புலன்களும் அடங்கிய முகங்கள்
அங்கும் இங்குமாய் எத்தனை கேள்விகளோடு

ஒன்றும் செய்யாமல் உடல் இருக்கலாம்
மனம் மட்டும் போனவாரம், நேற்று
போன வருடம், போன மாதம், போன நூற்றாண்டு
என கால ஊஞ்சலில் சுகமாக ஆடியது

குட்டிச் சுவர் மேல் அதிகாலை அமர்ந்து
காலை கதிரவன் உதயத்தில் களித்திருக்க
உச்சியை சூரியன் மெதுவாக எட்டியது
காலோரம் இருந்த நிழல் உடல் அடியில் சென்றது

வேர்வையும் முத்துமுத்தாய் வெளிவந்து தலைநீட்ட
படிப்பதாய் நினைத்துக்கொண்டு பக்கங்கள் புரட்ட
சுற்றியுள்ள வீட்டிலெல்லாம் பெண்கள் கணக்கெடுக்க
வருடங்கள் சென்றதை தென்னை வளர்ச்சியில் காட்டியது

தன்முகத்தைப் பார்க்கும்வரை தன்வயது அறிவதில்லை
கனவில் வாழும்போது தன்முகமே தெரிவதில்லை
காகிதம் தீர்ந்தது, பேனாவின் மையல்ல
விமானமும் வானில் பறந்தது, மனமும் கனவில் தொடர்ந்தது

cause of no internet
not opening the computer?
thought of stop writing
not taking a paper?

left alone with no word
keeping only silence beside
faces with five senses
here and there with all questions

doing nothing, body can
but the thoughts – swinging between
last week, yesterday, last year, last month,
last century and so on…

early morning on the parapet wall
dawn sunlight gives pleasure for heart
slowly the sun climbing the top
shadows on the floor narrows down a lot

sweat drops slowly heading out from body
showing like reading turning pages slowly
seeing around the houses, taking girls census
growing trees shows the passing days and years

until see my face, don’t feel my age
when i am in dreams, i don’t see my face
came to end of my paper with lot of ink in pen
hoping one day in life i’ll reach my zen


பிறந்த நாள் வாழ்த்து - 3

ஒரே பாலினத்தில் பலப்பல பிள்ளைகள்
பெற்றெடுத்த இந்தக் கருப்பை
இன்பம் எனும் மறுபாலினை பெற்றது
கருத்தடை செய்துகொள்ள முடிவெடுத்தது

தேங்கிப் போனது என் எழுத்துக்கள்
நீரால் கூட அணைகட்ட முடியுமா?
எண்ணங்களுக்கு, என் எழுத்துக்களுக்கு,
ஆனந்தக் கண்ணீரால் அணை கட்டினேன்

பிரிவு என்பதே இல்லை
என்பதை ஆணித்தரமாய் உணர்ந்தபின்
என் எழுத்துக்களுக்கு விடை கொடுத்தேன்
என் படைப்புக்களுக்கு கருத்தடை விதித்தேன்

இன்று புதிதாய் பிறப்போம்
மகிழ்ச்சிக்கு காரணம் கேட்கும் மனதிற்கு
கதிரவன் உதிப்பதால் இன்பம்
இருட்டு சூழ்ந்து விண்மீன் சிரிப்பதால் இன்பம்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிறப்புக்காக
இன்றும் விழா எடுத்தனர் உலகெல்லாம்
ஈரிருபது ஆண்டுகளுக்கு முன் உன் பிறப்புக்காக
நானும் விழா எடுத்தேன் என் மனமெல்லாம்

ஒரே பாலினத்தில் பலப்பல பிள்ளைகள்
பெற்றெடுத்த இந்தக் கருப்பை
இன்பம் எனும் மறுபாலினை பெற்றது
கருத்தடை செய்துகொள்ள முடிவெடுத்தது

Usually I write when I am sad, and this time I tried when I was happy. I considered this as my last script in Thamizh, since I got my questions answered.

We feel we have control in life. As long as the steering is working, we assume we have an excellent control when we drive. If something goes wrong, then only we will realize.

Consider as just born baby, and start over the life again. No reason to be happy, happy for sun raise, happy for the darkness in the night with the bright stars.

If the world celebrates Birthdays for persons born thousands of years ago, then why not celebrate for the people I know.

I feel complete, and start over again, considering as just born baby.


பிறந்த நாள் வாழ்த்து - 2

உலகெல்லாம் பாதை இருந்தாலும்
   வீடு செல்லும் வழி மறப்பதில்லை
கோடி கோடியாய் மக்கள் பிறந்தாலும்
   அனைவரும் நம் நண்பர்கள் ஆவதில்லை
எண்ணிலடங்கா விண்மீன்கள் சிரித்தாலும்
   பூமிக்கு அனைத்தும் கதிரவன் ஆவதில்லை
முன்னூற்று அறுபத்தி ஐந்து நாட்கள் விடிந்தாலும்
   அனைத்தும் இன்றுபோல் ஆவதில்லை

World is filled with routes, still don’t forget the way to home. Billions of people in the world, only few are the friends. Billions and Billions of starts in the universe, but earth got only one Sun. Same way, there may be three hundred and sixty five days, but all are not like the birthday.

பிறந்த நாள் வாழ்த்து - 1

இறைவனுக்கு பூமி சூரியனை
ஒருமுறை சுற்றிவந்தால்
ஒரு நிமிடம் போலும்

ஆண்டவனுக்கு நேரம் இருப்பதால்
இந்த மானிடனுக்கும் நேரம் உள்ளதா?

பொறுமை அவசியம் என்றாலும்
இதயம் துடிக்கவும், சுவாசிப்பதற்கும்
ஏன்? கண்ணிமைப்பதும் கூட
பொறுமையாகத்தான்

பன்னிரெண்டு வயதில் தெரிந்த உயிர்
இந்த மண்ணில் பிறந்ததற்கு
என்னையும் ஒரு பொருட்டாய்
தெரிந்து வைத்ததற்கு
ஒரு பிறந்தநாள் வாழ்த்துக் கூற
முப்பது வருடம் காக்க வைத்த

ஆண்டவனுக்கு நேரம் இருப்பதால்
இந்த மானிடனுக்கு வாழ்க்கை உள்ளதா?

இனி இறைவனின் ஒவ்வொரு நிமிடத்திற்கும்,
என் வாழ்வின் ஒவ்வொரு வருடத்திற்கும்,
பிறந்த நாளுக்கு உன்னை வாழ்த்த விறும்பும்

In Gods clock, one rotation of the earth around the moon may be a minute. God may do things slower, but not the humans. After I came out of the country only I realize the importance of the Birthdays, and Wedding days. At least now onwards, wish to say Happy Birthday / Anniversary on each and every year.

என் எழுத்துக்கள்

சிறு சிறு சம்பவங்களுக்கும் வயிற்றுக்குள்
ஆயிரம் ஆயிரம் குண்டூசிகள் குத்துவதுபோல்
என் கட்டைவிரல் நகத்தை என்கையால்
மிகமிக மெதுவாக பிய்த்து எடுப்பதுபோல்
இருட்டுக் குகையில் இருந்த
கருப்புச் சுவரில் கரியால் எழுதியதுபோல்
எண்ணங்களில் உதிப்பவை எழுத்துக்களாக
ஏதோ ஒரு தடை விழுந்ததுபோல்

I feel the pain, I start to write. I don’t write for others, but want the others to learn using my mistakes. If I don’t express, then how the others know?

In love, even small incidents make big impacts. The pain is more and more, feel like touching the door of the hell. It is hard to describe, and no way to express.


இணையதளம்

ஞாயிறை எதிர்நோக்கும் சனிக்கிழமை
பௌர்ணமிக்கு விழித்திருக்கும் நட்சத்திரம்
பிறந்தநாள் கொண்டாட காத்திருக்கும் குழந்தை
குறிஞ்சிப்பூ பூத்திடவே பார்த்திருக்கும் காட்டுச்செடி

தாலி கட்டக் காத்திருக்கும் காதலர்கள்
காந்திக்குக் கிடைத்த சுதந்திரம்
உலகுக்குக் கிடைத்த அந்த தெய்வங்கள்
தோழமைக்குத் துணையாக இந்த இணையதளம்

Waiting for the weekend holiday
Stars waiting for the full moon day
Children plan for their birthdays
Forest wait for Kurinji seasons

Lovers wait for their marriage day
Gandhi for the Independence Day
World is waiting for the peaceful days
Internet creates the friendly days


தேக்கம் - 3

கையால் அடித்தால் உடல்
   காயம் காலம் ஆற்றும்
கண்ணால் அடித்தால் மனம்
   துக்கம் போனாலும்
     தூக்கத்தில் கனவாய் தொடரும்
வார்த்தைகள் உயிரை வருத்தும்
  உடல் அழியலாம்
    மனம் மாறலாம்
      உயிர்?

கருப்பையிலிருந்து வெளிவர
   குழந்தைக்குக் கடினமா?
காணத் துடிக்கும் தாய்க்குக் கடினமா?

தொடர்ந்து ஓடும் நதி கடலைச் சேரும்
ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீர்
   பாசிக்கும், சிறு சிறு பூச்சிக்கும்
குறையில்லை நீராய் இருக்கும்வரை
கடலானாலும், நதியானாலும், குட்டையானாலும்,
   வெள்ளம் ஆகாதவரை

சன்னலோரம் அமர்ந்து
வெளிஉலகைப் பார்த்தேன்
மெல்லிய பிம்பமாய் என் முகம்
இடையில் இருந்த
கண்ணாடியைத் திறந்தேன்
இப்போது உலகம் மட்டும்

Words hurt the soul, as everyone says, why to use words to wound the heart?

Is aiding the others to come up in the life is difficult, or working for the betterment is?

As an individual, contribution to the society is more important, no matter how much it is.

Even the slight expectation from the service create a layer between.


உயிர்

உலகைப் பொருத்தவரை நானொரு மனிதன்
வசிக்கும் நாட்டின் பட்டியலில் இந்தியன்
இந்தியாவின் மக்கள் நடுவே நானொரு தமிழன்
தமிழனின் பிரிவுகளில் நானொரு பறையன்
இறைவனின் படைப்புகளில் மற்றுமொரு உயிர்

When human landed in the moon, whole(almost) world felt proud about the development. Seeing any Indian in remote part of other countries gives happiness. On the other hand, hearing a Thamizh word in Bombay makes the head to turn around. Going a step closer, moving away from human kind.

ஹிந்தி பாடல்கள்

அர்த்தம் புரியாத இசைக்கும் பாடலுக்கும்
அசையாத தலைஇன்று இரசித்தது - தனக்குள்
சிரித்துக் கொண்டுதன் னுள்மகிழ்ந்து வியந்து
விரித்த சிந்தனையில் பறந்தது

I don’t listen to the songs other than Thamizh, or English. There are some exceptions. I was listening to a new Hindi movie song, and I really like the song, and dance very much. With no understanding, I felt happiness.

உறவு

உன் வார்த்தைகளால் என்னை சூடுபோட நினைத்தால்
அவை உன்னை சுட்டுவிடாமல் பார்த்துக்கொள்
உன் கோபத்தால் என் இதயத்தை கிழிக்க நினைத்தால்
கத்தியின் கூர்மை உன் கையை சேதப்படுத்தாமல் பார்த்துகொள்

என் வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும்
முந்த நினைப்பவறுக்கு வழி விட்டுச் செல்பவன் நான்
அடித்து விளையாடும் போட்டிச் சண்டையில் கூட
பிறருக்கு வலிக்காமல் பழகும் அறிவுரை கேட்டவன் நான்

உறவுகள் என்பதால் உரிமை கொண்டாடினாலும்
தன் வீடு என்பதற்காக உடைத்துப் பார்ப்பதிலையே
சுவற்றில் ஆணி அடிக்கக் கூட யோசிக்கும் மனதில்
சூடு போடவும், குத்திக் கிழிக்கவும் முயற்சி வேண்டாமே

In married relations, we take everything as granted. Spouses are still individual persons of their own. Isn't the spouse is a step more than friend?

Sometimes, in the arguments, using harsh words and hurt the others also hurt the same, sometimes more. It is a fight with double ended knife.


பசி

பட்டினியில் கிடந்தவரை
வீட்டுக்கு அழைத்து வந்து
ஒரு வேளை உணவு போட்டேன்
மறுநாளும் அதே நேரம்

சில நாள் தொடர்ந்தது
அவர் இராப்பிச்சைக்காரர்
பகலில் கதவை தட்டும் சத்தம் கேட்டது
பசி தாங்கவில்லையாம்

நாட்கள் தொடர்ந்தது
இன்று மூன்று வேளையும் பிச்சை
பண்டிகை நாட்களில் விருந்தும் உண்டு
அடுத்த நாள், இரண்டு பிச்சைகாரர்கள்

In the world came with hunger, initially got the basic needs, then little more comfort. As the life prosper, luxury. Still not satisfied. Continue to earn for the next generation.

கறை

ஓட்டுப் போடும்போது
கையில் சின்னதாய் கறை

கடந்த ஆட்சியில் சம்பாதித்ததை
பகிர்ந்து கொடுக்கிறார் போலும்

Are the political leaders shares their strains on our finger?

விபூதி

நாடு கடந்தேன் பிழைப்புக்காக
சில நேரங்களில் விபூதி இல்லை
மனதிற்குள் வருத்தம்
கடவுளை மட்டும் வணங்கினேன்

இன்று வீட்டில் இறைவனை வழிபட்டேன்
விபூதி இருந்தது, கேள்வி எழுந்தது
இறைவனை நினைக்க சாம்பல் எதற்கு?
கண்கள் மூடி, மனம் திறந்தால் போதுமே

To pray the God, all the need is trust

என்றென்றும்

என்னைச் சுற்றி ஆயிரம் ஆயிரம் பேர்
எனக்குத் தெரிந்தவர் ஒரு சிலர் மட்டுமே
என்னைத் தெரிந்தவர், அதிலும் சிலரே

கோடானுகோடிபேர் இருக்கையில்
அத்தனை பேர்களுக்கும் உன்னைத் தெரியுமா?
அத்தனை கோடியில் நானும் கரைய நினைத்தேன்

கடலில் முழுகிய கப்பலாக நான் துறுப்பிடித்தாலும்
கண்ணாடிக் குப்பிகள் போல உன் நினைவுகள் மட்டும்.
கோடிகளில் கரையவில்லை, உன் நினைவுகளில் என்றுணர்ந்தேன்

Thousands of people around me, but I know only some of them, very few knows me. So much of people in the world don’t even know you, then I may lead my life as same as them, but not really.

இரவீந்திரநாத் தாகூர்

ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்
முதலில் இரசிக்கவில்லை
என்ன இந்த எழுத்துக்கள்?
என்று மனதிற்குள் கேள்விகள்

மேலும் படித்தேன்
இத்தனை எளிமை எங்கிருந்து வந்தது
பார்க்கும் காட்சிகள் எல்லாம்
இனி என் கண்கள் எழுத்துக்களைத்தான்

உலகம் கவிதை என்றான்
இன்று உணர்ந்தேன்
சில எழுத்துக்களை
என்னால் படிக்க முடிந்ததால்

I started to read the book of Rabindranath Tagore. In the beginning, don’t like it, wondering what are all these letters? I continue reading. I felt the simplicity. I started to understand piece by piece. There is so much of meaning into that; I don’t know how many times I have to repeat reading.

தெளிவு

நிறைவை தொடர்ந்தது மகிழ்ச்சி
மகிழ்ச்சியைத் தொடர்ந்தது முழுமை
முழுமையைத் தொடந்தது தெளிவு

Completeness gives joy; joy gives fulfillness, fulfillness gives clarity.

உண்மை

இத்தனை காலம்
இறுமாப்பில் இருந்திருந்தேன்
என் காதல் உயர்ந்தது என்று

நிச்சயமாய் தெரிந்தது
என் காதலும் உயர்ந்தது என்று
இறுமாப்பு மட்டும் அகன்றது

This long, I was in pride about my love. When I understood my love, the pride is gone.

கோவில் மணி

கோவிலில் மணி அடிப்பது
எல்லோரையும் கடவுளை நோக்கி அழைக்க
கடவுளை நம் திசை திருப்ப அல்ல

கர்ப்பக்கிரகத்தில் கற்பூரம் காட்டுவது
ஆண்டவனை நினைக்கும் மனதை
ஒருமைப் படுத்த
இறைவனின் அழகை இரசிக்க அல்ல

The bell in the ring used to call the people, and not getting the attention of the God.

The flame of the light is to get the concentration, not to show the beauty.


தேக்கம் - 2

ஆற்றில் இருந்து ஓடைகள் கிளைத்ததா?
ஓடைகள் ஒன்று சேர அது தோன்றியதா?

போகும் வழியில் வந்தால்
பயணம் தொடர்வதில்லை, இருவழியிலுமே

சூரியனுக்குள் சிக்கிய சிறு துகள் போல

Thought this is the beginning, and sometimes the other.

If the thoughts are in opposite directions, both may stuck.

In the big world of fire, suffering like a dust.


ஓரெழுத்துக் கவிதை

என் பிறப்புக்குக் காரணம் நீ
என் வளர்ப்புக்குக் காரணம் நீ

என் அறிவின் காரணம் நீ
என் வாழ்வின் காரணம் நீ

என் நட்புக்குக் காரணம் நீ
என்னை கண் அவன் என்னவள் நீ

அப்பா என்றழத்தவள் நீ
என்னை எழுத வைத்ததும் நீ

என்னைப் புதைக்கப்போவதும் நீ
என் கதையை சொல்வதும் நீ

Everything is depending on others, from birth, life, death, and after the life too.

முழுமையை நோக்கி

இழந்தவைகள் பல, போன உயிர்களைத் தவிர
அனைத்தும் போகலாம், மீண்டும் திரும்பலாம்
இழப்பதற்கு இங்கு ஏதுமில்லை
என்று உணர்ந்தால் இனி துன்பமில்லை

கண்கள் திறந்தால் காட்சிகள் தெரியும்
கவனித்துக் கேட்டால் ஒலியின் அலையில்
ஒவ்வொரு பிரிவும் தனித் தனியாய் கேட்கும்
பிறந்தது முதல் உதவும் உணர்வுகள்

மனதை திறந்தால் சுதந்திரம் புரியும்
கண்களின் ஓரம் சுருக்கம் விழும் முன்
முதுமை வந்து உடல் சோருமுன்
முழுமை நிறைந்து தன்னலம் போகும்

Nothing to loose, because got nothing at first. Everything may leave, and may be back. Seeing show multiple colors, listening differentiate parts of sound. Keeping the heart open to feel the others freedom makes egotistic thoughts go away.

மனம்

உடலின் அமைதி கடலின் ஆழத்தில்,
மனதின் சலனம் கரையின் ஓரத்தில்
உடலைத் தடுக்க சட்டங்கள்
உணர்வைத் தடுக்க சமயங்கள்

அமைதிக்கு பூமி,
சலனத்திற்கு அலைகள்
பூமிக்கு அடியில் பூகம்பம்,
கடலின் கரையில் சுனாமி

அளவுக்கு அதிகமானால், அமைதியும் ஆபத்தோ?

Most of us act well in the society because of law. Honestly, most of us dream about disgusting things, and the control is religion, and faith on the God.

On the other hand, if a quite person is tortured too much, then the result may be worse than ever. Too many examples, too much terrorism.


மரபு

கச்சைக்கு மேல் எந்தத்துணியும்
பழமை உடுத்தவில்லையே
வேட்டியும் துண்டும் தவிர
வேறேதும் தேவையில்லையே

கால்...அரை...முழு...
தமிழில் தெரியவில்லை
கால் நிஜாரும், அரை நிஜாரும், முழு நிஜாரும் என்று
மாறுதல் என்பது உடையில் வேண்டும்
பழமை என்பது பண்பாட்டில் வேண்டும்

அன்னியன் கொடுத்த சுதந்திரம்,
நாம் போராடி வாங்கிய சுதந்திரம்
உணர்வுகள் கூட இங்கு
காகிதத்தில் கையெழுத்துப் போட்டு

There is so much of western culture left out after Independence. It is welcome for the betterment of the life. Don’t we have to accept the same for the culture? Whatever, whoever says, isn’t always better to find the truth of the statements? Nothing new more than Thiruvalluvar said.

What is freedom? Is it self-sufficiency, and independent to control own decisions, without affecting others? If external force controls the life then, what is freedom? It is the feeling within, but not from others.


தேர்வு

எங்கள் தேசியகீதம், தேசியகீதமானது எப்படி?

மயிலும், காகமும் போட்டி போட்டதா?
அழகானது என்பதால் மயிலும்,
கூடி வாழ்வதால் காகமும்

புலியும் நாயும் ஓட்டுக் கேட்டதா?
வல்லவன் என்பதால் புலியும்,
நன்றி உள்ளதால் நாயும்

Beyond our controls, some get good recognition, and some don’t.

சுயநலம்

ஓடும் நதி கடல் சேர்வதற்குள்
பூமியில் எத்தனை காயங்கள்
நதி கேட்டது,
பிறப்பிடம் தேடி போகும் என்னை
எத்தனை கூறு போட்டு
உன்னை வளப்படுத்துவாய் என்று

When I was young I assume that everybody is wounding me, which includes my parents, and friends. Actually I learned from them, maybe I got the guidance from them and I enriched my life.

மறைவு

வார்த்தைகளுக்கு இடையே வார்த்தைகள்,
வாக்கியங்களுக்கு இடையே வாக்கியங்கள்
பேசாத வார்த்தைகள், மௌனத்தின் அர்த்தங்கள்
ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையே மட்டும்
எண்ணிலடங்கா எண்ணிக்கைகள்

இரண்டு எண்களுக்கிடையே, இரண்டு எழுத்துக்களுக்கிடையே
இத்தனை குழப்பமென்றால்,
வாழ்க்கை முழுவதும் எத்தனை எண்ணங்கள்
தலை திரும்பும் இடமெல்லாம் எத்தனை வண்ணங்கள்
மூன்று வண்ணங்கள் சேரும் வகையில்

I may already mention in some place, I was watching a movie. There was a statement, “if you don’t understand, then you assume”. Same way, if we don’t understand somebody, we start to assume. Each person is individual character of his or her own, just less than seven billion combinations.

தேக்கம்

தொடர்ந்து கொட்டிய சென்னை குடிநீர்
கப் என்று நின்றது

பயணத்தின் இடையே சைகை விளக்கில் நிற்கும்போது
பார்த்து இரசித்த காட்சி

பகலில் வரும் சூரியன் இரவில் வந்தால் தொந்திரவு

கடவுள் வாசலில் வந்து உணவு கேட்டால்
பிரஸாதமும் பிச்சையாகிறது

பிறந்த குழந்தைக்கு அறிவுரை சொன்னால்
வார்தைகளும் ஒசையாகிறது

ஔவை பாட்டியின் தமிழ் மொழி மீறினால்
வாழ்க்கை வனவாசம் ஆகிறது

வானிலை மாறுமுன் தகவல் வருவதுபோல்
வாழ்க்கை மாறும்போதும் வேண்டும்

தன் வீட்டில் மரணத்திற்காக அழும் மனிதன்
பூகம்பத்தில் ஒரு ஊர் அழிந்தாலும் அழுவதில்லை

வெள்ளிதிரைக்கும் சின்னதிரைக்கும் வரும் கண்நீர்,
ஏனோ செய்திகளுக்கு மட்டும் வருவதில்லை

எங்கோ எழும்பிய பூகம்பம்
உள் வாங்கிய கடல்நீர்
இன்று மொத்தாமாய் வெளிவரத் தொடங்கியது

You feel like everything is going good, until you got a big stop

Life is a journey. Sometimes, unexpected happiness happens, and before we realize, it will be over.

Sometimes even the good thing becomes bad thing because of place, moment, and time.

Even the deserved things, asked for that, feel like a beggar.

If the guidance is not in a right place, at right time, it’s worthless. Why Krishna waited until the war to advise Arjuna?

Ouvai is a great Thamizh scholar, and her statements about the life-style are always good.

Like a weather report, if we get the life forecasting, it will be nice to react.

As much as personal losses affects us, the common loss doesn't.

The emotional response always compare with our past life, but never for the new common news.

Because of others mistakes, the truth hidden start to burst and affects some others life.


நீ

உன் ஒற்றை முடி கொணர்ந்தால் போதும்
நான் உதவிக்கரம் நீட்டுவதற்கு

உன் பெயரின் ஒரு எழுத்திருந்தால் போதும்
நான் நண்பனாவதற்கு

உன் ஒற்றை சாயல் இருந்தால் போதும்
என் கவலை நீக்குவதற்கு

நினைவலைகள் மட்டும் இருந்தால் போதும்
என் உயிரை சுமப்பதற்கு

I am like a driver of the President's car. I have friends as pilot vehicles, and safety vehicle all around me. I have a close friend, but still I miss so much. May be because of our life went in different directions; we were not able to spend so much time as we used to be.

Old age always sees the new person in life by comparing the person in the past. How much it affects, may be depending on the relation with the person in the past.


விமானத்தளத்தில்

அழகான குழந்தைகள்,
சில தள்ளுவண்டிகளில் அமர்ந்துகொண்டு
சில பெற்றோருக்கு உதவியாய் அதை தள்ளிக்கொண்டு
சில முனகல்கள், சில அழுகைகள்
பலநேரம் புன்னகை மட்டுமே
கவலை இல்லாத உலகம் போலும்
கடந்துவந்து பலகாலம் ஆனதால்
எல்லாம் புகைமூட்டமாய் தெரிகிறது

சில மழலைகள் கையில் குவளையுடன்
சில மனதிற்குள் எழும்பிய கேள்விகளுடன்
அனைத்துமே தாய் தந்தையோடுதான்
குறைந்தது ஒருவராவது உடன் இருப்பர்
அழுதமாய் மூச்சு வாங்கியது
வயது கூடிவிட்டால் பெற்றோரை பிரிய வேண்டுமா?
நம் மனதிற்குள் நிம்மதிக்காக, காலதின்மேல் பழி
பிள்ளைகளின் வளர்ச்சிகாக, பொய்யை சொன்னது மதி

I was waiting in the airport watching the kids with the parents. Thank God, I am honored to have my parents. Some of my friends don’t have father or mother. Few don’t have both. We learn some from mom, and some from dad. They both are precious in some way, always.

நட்பு

பாரதி கவியின் எளிமையைப் போல
ஆழமாய் உணர்த்தும் கீதையைப் போல
சுருங்கச் சொல்லும் குறளைப் போல

பாட்டி முகதின் அழகைப் போல
அம்மா சமைக்கும் உணவைப் போல
எனது மகளின் தமிழைப் போல

உடலைக் காக்கும் உயிரைப் போல
எனக்கே எனக்காய் கடவுள் போல
முதுமையில் நட்பு பெற்றோர் போல

As we all know Barathi writes in simple Thamizh, Geethai is the guidance for life, and the short version of Geethai is part of Thirukkual.

Beauty is in the heart of who see, and not in the object, taste is by practice, and love makes everything good.

Similar to soul enhance the body, who helps to improve our life is an exclusive God, who controls our act when we are old are our friends.


வலி

அதிவேக வண்டியில் சென்று பழகியதால்
மிதிவண்டியில் செல்லும் வேகம்
மிகவும் மெதுவாய் தெரிகிறது
மிதிப்பது கால்கள்தானே, கண்கள் இல்லையே

படுக்கையில் பாம்பு தினமும் கடித்தால்
பாம்புக்கடியும் தூக்கம் கலைக்காது
உடலின் வலியும், உணர்வின் வலியும்
ஒப்பிட்டுத்தானே எடைபோடப்படுகிறது

கரி எஞ்ஞினில் வேலை பார்த்தவன்
வெய்யிலுக்கு ஒதுங்குவதில்லை
ஆனால் ஓடித் தேய்ந்த கால்கள்
இன்று நடக்க முடியாமல் போகிறது

வெளிச்சம் தருகிறது என்ற ஒரே காரணத்தால்
சந்திரன் சூரியன் ஆவதில்லை
(வெளிச்சம்) கூடவே வெய்யிலும் வருவதால்தான்
உலகில் உயிரும், உயிருக்கு உணவும்தானே?

Day to day life is getting faster and faster. May be that is what called development, I assume.

If tough life becomes the entire life, then the body, and the soul get used to that. Nature? All the pains are always compared, whether physical, or emotional. A person with a single hairline fracture in the finger cannot complain to a person with a multiple fractures in the hipbone. Same way for emotion too.

Certain things get accustomed, others just worn out. Life, age seems to go in a single direction, but not.


வாழ்க்கை

வாழ்க்கையின் வேகத்தில் வாழ்க்கையே அடித்துச் செல்கிறது
வாழ்க்கையே இல்லாதது போல
நேற்று வரலாறு, நாளை கனவு - கூறுவர் எல்லோரும்
பேச்சு நேற்றைப்பற்றி, செயல் நாளையை நினைத்து
இன்று என்பதே இல்லாமல் போனது

சிறுவர் சிறுவராய் இல்லை
தெருக்கோடியில் கண்ணாம்பூச்சி இல்லை
பல்லாங்குழியும், தட்டாமாலையும் கேட்கவில்லை நான்
குரங்கிலிருந்து பிறந்தவன் குரங்காய் மாறவேண்டாம்
சுவர்களுக்குள் சிறைபடாமல் மனிதனாய் வாழவேண்டும்

My friend asked me “do you remember how long it took to came from twenty two years to forty two?” I happily replied “I didn’t feel a thing”. He replied then guess what? In twenty more years you will be sixty-two.

பாகுபாடு

கொட்டும் மழையில் அண்ணார்ந்து பார்த்தேன்
வாயில் விழுந்தது மழையின் துளிகள்

பாலைவனத்தில் தனிமையில் நடந்தேன்
வெப்பம் கொடுத்தது கதிரவன் கணைகள்

மொட்டைமாடியில் மல்லார்ந்து படுத்தேன்
வானில் தெரிந்தது ஆயிரம் ஒளிக்கல்

கடற்கறை மணலில் தனிமையில் இரசித்தேன்
அலையின் அசைவில் காற்றின் இசையை

பாதம் கீழே என்றும் உணர்ந்தேன்
பூமி என்னை அணைக்கும் அன்பை

பிறந்த குழந்தையாய் வாழ்ந்து முடிப்பேன்
மாறுதல் என்பதே இல்லா வாழ்க்கையை

Similar to Water, Fire, Sky, Air, and Earth never change until death.

இலங்கை

பாதாள சாக்கடைக்காக போராடிய பொதுநலவாதி
தன் வீட்டின் இணைப்பு வந்ததும் நிறைவடைந்தான்
தெருக்கோடி வீட்டுக்காரன் இன்று முதல் எதிரி
அவன் வீட்டில் நாற்றம், காற்றின் திசை மாறும்போது மட்டும்

அமெரிக்கா அலாஸ்காவை வாங்கலாம், இந்தியா இலங்கையை கூடாதா?
தமிழ்நாடு தனி நாடில்லையென்றால், இலங்கை மட்டும் ஏன்?
ஒட்டிகொள்ளாவிட்டால் உடன் பிறந்தோர் இல்லையா? அந்தமான் மட்டும் ஏன்?
சிந்தித்துப் பார்த்தால் சுதந்திரப் போராட்டங்களும் சுயநலமாகிறது

வெய்யில் அதிகம் என புலம்பும் கண்களுக்கு
வெடிகள் இடையே விழும் பிணங்கள் தெரிவதில்லை
பிரச்சனைகளை போராட்டமாக்கி புகழ் பெரும் மனிதன்
தீர்வு காண்பதில்லை, இந்தியா இலங்கையை வாங்கப் போவதுமில்லை

Sri Lanka
India's freedom fight is a very complex history. Everybody may have their own opinions. I was reading the Barthiyar Kavithaigal. One of his poetry he mentioned as "Singala theevinuk oor palam amaimpom", means we will build a bridge between Tamil Nadu, and Sri Lanka. Unfortunately he was dead before the freedom. Did anybody really asked Sri Lanka to be a part of India. I don't know the answer. All I know is there were so many parts of current India wants to be a seperate country. Mr.Patel lead the team to make the current India. Why they skipped Sri Lanka? Is it too big of a place to aquire? I don't have the answer.

I am not asking India to conqure Sri Lanka. Just take care of legal issues between the communities. Atleast the common people in Sri Lanka should lead a better life. Don't they deserve a freedom? Just because a rebel group killed India's Prime Minister, should all the common people suffer?

Again another statement from Bharathiyar, "the forest fire don't care about the cow, or a baby". There are so many organizations fight for this issue, and this is my thought.


விமானத்தில்

மூக்கின் முனையை மையமாக வைத்து
ஒரு வட்டம் போட்டு
பசுநீல நிறத்தில் அழகிய கண்கள் வரைந்து
செதுக்கிய மூக்கு,
சாயம் பூசாத செவ்விதழ்கள்,
தங்கத்தை கூந்தலாக்கி
தன் பெயரை எமிலி என்றாள்
காலை வணக்கம் சொன்னாள்

இரண்டடி கூட இடைவெளி இல்லை
நானும் வாய் நிறைய பல் தெரிய புன்னகை செய்தேன்
வார்த்தை வரவில்லை - எனக்கு
அவள் கேட்டாள் - இருக்கை எண் என்ன? என்று
4F என சொல்லி எனது வழி நடந்தேன்
சன்னலோரம் சாய்ந்து மௌனமாய் உறங்கிடவே

........................
........................

என் சந்தோஷங்கள் என்றும் கவிதை ஆனதில்லை
என் சோகங்கள் என்றும் நிழற்படம் ஆனதில்லை
உன்னிடம் இருந்த மௌனம் கலைக்க எனக்கு வழி தெரியவில்லை
படிக்கும்போது வெளிப்படுத்தும் மகிழ்ச்சி,
புரியும் எனக்கு மட்டும் வருவதில்லை
சில சிந்தனைகள், சில துளிகள்

In my routine travel, I felt something not good inside me. I usually don't pay any attention to the airhostess. On that day I saw a baby face with a great smile. When you get older, even a great smile brings back the memories of the past. Tried to sleep, but end up scribbling.

காய்ந்த இலை

காலமெனும் காட்டாற்றின் சீற்றத்தால்
அடித்துச் செல்லப்பட்ட காய்ந்த இலை நான்
எதிர் நீச்சல் போட்டு, பிறந்த மரத்தை
அடைய முடியாத காய்ந்த இலை நான்

எழுதாத பேனாவை உதறி உதறி
எழுதுவது போல் இந்த வாழ்க்கை
இலக்கே இல்லாமல் பலதூரம் ஓடி
இருந்த இடத்திலேயே களைப்பாவதைப்போல்

வாழ்க்கை பயணம் பல செய்து
பழையதையே போட்டு போட்டு
வண்ணமும், வாசமும் மட்டுமே கூட்டி
சாதிக்காததை சாதித்தது போல் பேசி

பரித்த மலர் அழகாகும்
கிடைத்த பழம் உணவாகும்
விழுந்த விதை செடியாகும்
இந்த காய்ந்த இலை?

There is no time machine to go back and fix the past.

Here and there, there is some stagnation, similar to block in the vain, like running in the treadmill. Run for a long time, still in the same place.

Doing the same things again and again, but talk like achieved something great.

Now I am, who am I in future?


முதல்

வட்ட நிலவு தேயலாம், மறையலாம்
மீண்டும் முழுநிலா ஆகலாம்
கரைகள் இருந்தாலும் அதற்கும்
ஒரு புனிதமும் உண்டு

சித்திரையில் சூரியன் சுட்டெரித்தாலும்
மழையும் தரலாம், காற்றைத் திருப்பி
பனியும் தரலாம், மனதிற்குள் சபித்தாலும்
சூரியனுக்கும் ஒரு போகி உண்டு

அன்பு கொண்டாட உறவுகள் பல இருந்தாலும்
சுற்றம் சூழ நட்புடன் சிலர் சேர்ந்தாலும்
அன்னைக்கும், தந்தைக்கும் என்றும் எவ்வுயிர்க்கும்
சிந்தனையில் ஒரு அரியணை உண்டு

எண்ணிலடங்கா எண்ணங்கள் இருந்தாலும்
முதலுக்கு ஒரு மரியாதை உண்டு
உனக்கு நான், எனக்கு நீ என
தோன்றும்போது தெய்வம் தெரிகிறது

There is always a specialty in the uniqueness.

Like the Sun, like the Moon, like the Father, and like the Mother there is always good and bad.

If an unique person touched your soul, and guide your thoughts, who represent God.


நியதி

என்றென்றும் நீ என்னைக் காண்பது
பின் என் கண்கள் உன்னைக் காண்பது
இதயம் காதலில் கனவுகளில் வாழ்வது
கண்கள் தெரு மூலைகளில் தேடுவது

போராட்டம்தான் வாழ்க்கை என்றால்
காதலும் வாழ்வில் ஒரு பகுதி என்றால்
போராட்டம் காதலுக்கும் நியதிதானே?
காலம் கடந்த சிந்தனை, காரணம்?

பிறவிகளுக்கு இடையே தொடர்பு இருந்தால்
அதுவும் மொழி மாறுவதற்குள் நேர்ந்தால்
என் எழுத்துக்கள் எனக்குக் கிடைக்க வேண்டும்
காலம் கடப்பதற்குள் கஷ்டப்பட வேண்டும்

Most of the time you saw me first, then I see you.

Lift is struggle, and love is part of live. Why didn’t I struggle? Too late?

If there is a connection between lives, happens before my language changes, I would like to read my words in the next life. Sure, I’ll fight for my life.


வெண்ணிற மேகம்

நான் தண்ணீர் தருவதில்லை
முடிந்தவரை நிழலையாவது தருகிறேன்

சூரியன் என் முதுகில் அடிக்கும்போது
மனதில் சிறு சந்தோஷம்
என் குடையின் கீழ் இருப்பவர்
முகத்தில் மகிழ்ச்சி
என் மனதில் சிறு நிறைவு

கார்மேகம் என் அண்ணன் அல்ல
முன் பிறவியும் அல்ல
என் முந்தைய பருவம்
இருந்த அனைத்தும் கொடுத்ததால்
இன்று இந்தப் பருவம்

கொடுத்தது நீர் மட்டும் அல்ல
மின்னலும் இடியும் சேர்ந்துதானே?
மீண்டும் பிறந்தால் நிச்சயம் முயல்வேன்
இடியும் மின்னனலும் இல்லாத மேகமாய்
நீர் மட்டுமே கொடுக்கும் - நீர் மேகமாய்

I got no job, no income, at least I act like a security.

When I don’t express my pain, they feel like I am happy, and I feel happy.

I was working, not big, but enough earnings. I don’t have any to give now.

When I gave, I just didn’t give, but expressed how difficult it was, and expects least. Why least? Am I supposed to give with no expectation?


காட்டுப் பூ

காட்டுக்குள்ளே மலரும் மலர்கள்
காண்பவர் கேட்பதில்லை
காட்சிப் பொருளாய் கண்ணைக் கவர
என்றும் நினைப்பதில்லை

காட்டுக்குள்ளே மணம்பல சேர்ந்து
தனித்துவம் பெற்றிடுமே
என்றும் எதையும் எதிர்பாராத
எண்ணம் வளர்ந்திடுமே

பாக்கள் வேண்டாம் பாராட்ட வேண்டாம்
என்றும் எங்களையே
காம்பில் இருந்து கிள்ளி எங்களை
எரிந்திட வேண்டாமே

கண்ணீர் வருவது இல்லை என்றாலும்
வருத்தம் எனக்குள் உண்டு
கிள்ளிய காம்பில் தண்ணீர் வருமே
காட்டும் உங்களுக்கு

Flowers in the forest don’t expect the appreciation. All they need is life with no disturbance. Flowers never cry, but when it is plucked, the water in the stem shows.

பயணம்

நிற்க முடியாதபடி முட்டியில் ஒரு வலி
இளமை அனைத்தும் போனதுபோல
சோர்ந்து போய் மெல்ல
குட்டிச் சுவரில் அமர்ந்தேன்

இன்னமும் வலி,
நிற்கமுடியாமல் முதுகை வளைத்து
வயிரை ஒடுக்கி
கால்களின் இடையில் தலை வைத்தேன்
கண்ணீர் சிந்தியது, காரணம் தெரிந்தது
தெளிவடைந்தது வழி
எழுந்து நடந்தேன்
பாதை தெரிந்தது, தொடர்ந்து நடந்தேன்
இலக்கு தெரியவில்லை, நம்பினேன்
தொடர்ந்து நடந்தேன்
இங்கு நான், எங்கு ...?

Tired about searching for the job. Felt like lost the entire youth. Unclear mind don’t make clear decision.

Pain become more and more as the days goes by. I don’t have any more to loose. Don’t know the direction, or the distance, but sure this is not the end.

Decided to walk more, believe in future, and faith, got the first job. Now I am in Las Vegas, but where I’ll end up?


காதல்

மனதிற்குள் பல ஆயிரம்முறை
சொல்லும் வார்த்தை
முகத்தின் முகம் பார்க்கும்போது
ஒருமுறை கூட சொல்லியதில்லை

எழுத்துக்களில் கூட உன்னைக் குறித்து
ஒருமுறை கூட வந்ததில்லை

போதும் இந்த வாழ்க்கை
ஒருமுறை பிறப்பு
பலமுறை இறப்பு
பலப்பல பிரச்சினைகள்
அத்தனையும் மீறி இன்னும் பிரிவு
மனதிற்குள் இன்னும் ஒரு அழுத்தம்

மீண்டும் பிறந்தால் உன்னை
என் கண்ணில் காணா வரம் வேண்டும்
என எழுதக்கூட மனமில்லை
என்னுள்ளே கரைந்து நீ
நானாகப் பிறக்க வேண்டும்
நீயும் வேண்டுவாயா எனக்காக?

Most of the Lovers in my place never said, “நான் உன்னைக் காதலிக்கின்றேன், நீ என்னைக் காதலிக்கின்றாயா? (I love you, do you love me)”?

I’ve never written a statement says, “Do you love me?" in Thamizh. I went through my scripts, and I found this statement in English before I realized I am in Love.

I said I don’t want to drill a deep oil well to get a liter of gasoline. But I drilled a well, and got exactly a liter of gasoline. The suffer by the earth is hundred times more than mine.

I started to write, "if I have next life, God bless me not to see her", and continued don’t want that, "let her and I be a single person, so nobody may separate us".

Note: Actually, I've asked, and we talked few times, anyway.


பிறந்த நாள் வாழ்த்து

கட்டளை இட்டதும் வருவது இல்லை
கவலைகள் இல்லை, எனினும் வருவது இல்லை
கவலையின் மிகுதியில் களிப்பில் இருந்திட்டால்
கட்டாயம் வந்திடும்
எனது கண்ணீர் வண்ணங்களாக
வாழ்க்கையில் வராத வண்ணங்களாக

போன சூரியன் உதிக்கும்
கரைந்த சந்திரன் வளரும்
கடந்த காலமும் நிச்சயம் வரும்
கனவுகளில் மட்டும்

காலம் திரும்பாது என்பதை
குழந்தையும் அறியும்
இருந்தும் எதற்கு இந்த எதிர்பார்ப்புகள்
இணைந்த துக்கம் பிரிந்து
பிரிந்த இன்பம் இணைவதற்கு

முழுமையாய் நான் நானாக இருப்பது
கட்டாயம் இந்த நாளில்தான்
உலகில் பிறந்த என்னை
நானாக உணர வைத்த
நீ பிறந்த நாளில்தான்

பெற்றோர் என்னைப் பேணி வளர்த்தனர்
கடமையை இன்னும் களிப்புடன் செய்கின்றார்
உடன் பிறந்தவர் உயிராய் உள்ளனர்
உணர்வுகளுடன் ஒத்த நண்பர்களும் உண்டு
அனைத்திலும் வேறுபட்ட
கண்ணே, நீ யார்?
எனக்கு நீ என்ன?
குழந்தை? அன்னை? சகோதரி? தோழி?

மண்ணில் பிறந்த தெய்வம்
எனக்கு நீ - என்னை உணர்த்தியதால்
வினோதமாய் இருக்கலாம்
மற்றவருக்கு மட்டுமல்ல, உனக்கும்தான்
சரித்திரம் மறக்காமல் இருந்தால்
மனதிற்குள் புரட்டினால் தெரியும்
உண்மை உணர்த்துபவர்கள் கடவுள் என்று

என் கடவுள் பிறந்ததை
நான் கொண்டாடுகிறேன்
இன்றும் தன்னிமையில்தான்

என்றாவது என் தெய்வத்தை நான் அடைவேன்
அன்றும் போன காலம் வாராது
பிரிந்த துக்கம் சேராது
சொர்கம் சுதந்திரம் அடையும்
இன்பம் என்னை அடையும்

When I am feel really bad, I start to write. Similar to Sun, and Moon to the world, I expect the past to come back. It is possible only in dreams. Past is past, still I am who I am on this day, the Birthday who made me to realize the real me.

I got close relatives, and friends. But you are different, who are you? My daughter, or mother, or sister or a friend?

For others this may feel odd, until they realize who show the truth is the God. So, I celebrate my God’s Birthday, all alone. One day will come to meet my God again, that day, the past doesn’t come back, and sorrow won’t be there.


பிறந்த நாள் வாழ்த்து

என்னைத் தாங்கும் பூமி என்னைத் தவிர்த்தாலும்
என்னோர் என்னைத் தவிர்ப்பதில்லை
கதிரவனை விட்டு பூமி விலகினாலும்
என்னோரை விட்டு நான் போவதில்லை

அவ்வப்போது வரும் வால் நட்சத்திரங்களும்
சில விண்மீன்களும்
ஒரு கதிரவனும், ஒரு சந்திரனும்

கதிரவனால் பூமிக்கு சுகம்
பூமியினால் கதிரவனுக்கு சுகமா?
கதிரவன்தான் கூற வேண்டும்

நீ உள்ளிருந்து விடுதலை பெற்ற நாளில்
விழா எடுப்பதை விடுத்து
வெட்ட வெளியில் வெறித்துக் கொண்டிருக்கிறேன்

இந்த பூமிக்கு மட்டும் இனி
பௌர்ணமியே இல்லையா?
முழுநிலா வேண்டாம்
மூன்றாம் பிறையாவது தேவை

கதிரவனின் வெளிச்சம் மட்டும் போதவில்லை
கதிரவனே கைக்கடக்கமாய் தேவை
நான் பற்றி எரிந்தாலும் பரவாயில்லை
பவித்திரம் அடையும் என்னுயிர்

My friends, and family always support me. Some people come in my life as the shooting stars, but few stay as Sun, and the Moon.

Instead of celebrating your birthday, I am all alone, and staring at the dark sky.


தெய்வீகம்

வார்த்தைகள் பரிமாறவில்லை
உருவங்கள் எதிர் கொள்ளவில்லை
இவை உணர்வுகள் மட்டும்
ஓங்கி இருக்கும் உறவுகள்
உண்மையை மட்டும் கொண்டிருக்கும்
ஒப்பில்லா உறவுகள்

புலப்படுவதில்லை என்பதால்
புனிதம் குறைவதில்லை
பல சமயத்தில் தெரியாதவையே
தெய்வீகமாகிறது
உறங்கும் இவ்வுறவும்
மேகத்தை மீறி, வானத்திற்கப்பால்
சில சமயம் இறைவனையும் தாண்டி
உயர்ந்து நிற்கிறது

கொச்சையான உணர்வுகள்
கலந்திடுமோ என்னுள் என நினைக்கும்போதே
எங்கிருந்தோ வந்த ஒளிப்பிழம்பு
உண்மையை வற்புறுத்துகிறது
என்னால் என் காதலா?
காதலால் நானா?
கேள்விகள் எழுந்தாலும்
விடையைப் பற்றிக் கவலை இல்லை
நான் நானாக இருக்கும்வரை
என் காதலை நான் காதலாக ஏற்கும்வரை

No words in between, don’t see any ware
Just the feelings with no comparison

Because not visible,
Don’t loose the sacredness
Most of the time, invisible are God

I am what I am,
Neither cares about questions, nor try to find answers
As long as I am what I am
And I feel my Love as my Love


விண்மீன்

அருகிலிருக்கும் விளக்கும் சுடுகிறது
மின்சாரமோ, பிரயோஜனம்தான்
சிலசமயம் பிணத்தை எரிக்க,
சிலசமயம் மனிதனை எரிக்க

கவலை இல்லை இரவில் வெகுதூரத்தில் இருக்கும்
நட்சத்திரத்தின் வெளிச்சம்
வெளிச்சம் கொடுப்பதில்லை
சத்தியமாய் சுடுவதும் இல்லை
என்றென்றும் சாகடிப்பது இல்லை

அஞ்ஞானிக்கு இருட்டு பிடிக்குமாம்,
ஞானிக்கு தனிமை பிடிக்குமாம்
எனக்கு, இரவில் தனிமை பிடிக்கும்
நட்சத்திரங்களுடன் பேசப் பிடிக்கும்
அவை என்னை சுடுவதில்லை என்பதாலோ?

Nearest flame may burn
Electricity is useful
Sometimes to burn the body,
Sometimes the humans

No worries, Faraway stars don’t give light
Still don’t burn too
Never kill any

Impious like the darkness
Saints like to be lonely
I like the loneliness in darkness
Love to talk with starts
Because they don’t hurt


பிரிவு

கண்கள் இரண்டும் பிரிந்திருந்தாலும்
காட்சிகள் பிரிவதில்லை
செவிகள் இரண்டும் சேராவிடிலும்
சந்தம் கசப்பதில்லை

பரமனும் நானும் பார்த்திடாவிடிலும்
பக்தி குறைவதில்லை
உனக்கும் எனக்கும் பிரிவு எனினும்
உள்ளன்பு போவதில்லை

மகிழ்ச்சி என்னுள் பிறந்திடும் போதும்
மரணம் மறப்பதில்லை
கருமம் எனக்குச் செய்யும் போதும்,
என் காதல் அழிவதில்லை

என்னுள் பிறக்கும் எண்ணம் என்றும்
என்னை அழிப்பதில்லை
இன்னும் என்னுள் நீயும் இருப்பதால்
இதயம் தூங்கவில்லை

Same as eyes, ears, god, and human, we are always apart. Still even the death don’t touch the love which keeps the heart still alive.

இறைவன்

கவலை வந்தால் கண்ணீர் வடிக்க
கவிதை எழுதுபவன் நான்
காலம் போனால் காயம் ஆறும்
கருத்தை உணர்ந்தவன் நான்

நல்லவனாய் வாழமுயன்று
நடைமுறையில் தவிப்பவன் நான்
ஏறிய படிகள் வழுக்கி விட்டதால்
ஏமாற்றத்தில் விழுந்தவன் நான்

எதிர்பார்ப்புகள் உயர்ந்து நிற்பதால்
எதிரே இருப்பதை வெறுப்பவன் நான்
என்னை என்னுள் காண முயன்று
உன்னைக் காண்பவன் நான்

முன்னேறும் பாதை நீ கொடுத்ததென
முடிந்தவரை செல்பவன் நான்
உலகம் என்னை வெறுக்கும்போதும்
உன்னை (மட்டும்) நினப்பவன் நான்

When I feel bad
I start to write
As the time pass,
I know the wound will heal

To lead a clean life,
I struggle too much
As the steps slips
Going down again, and again

Expecting too much,
Start to hate what I have
Trying to find the true me,
Seeing only you

Who am I ‘cause of you
Try as much to follow you
Even whole world against me,
I am always towards you


மணமகள் தேவை

உள்ளத்தின் ஆழத்தில் இருந்து
உள்ளத்தை நேசித்த உணர்வுகளுக்கு
இங்கு மரியாதை கிடைக்கவில்லை
இன்று உள்ளத்தை விட்டு
உலகோடு ஒத்துவாழ கட்டாயம்
உணர்வுகள் ஒடுங்கிவிட்டன
பிறர் உணர்ச்சிகள் ஓங்கி இருப்பதால்

நியாயம் கற்பிப்பர்
இன்று காலம் என்பக்கம் இல்லாததால்
எல்லோரும் எனக்கு எதிராக
நிச்சயமாக எதிரியாக இல்லை

தொலைத்தது தொலைத்ததுதான்
மணலில் விழுந்தால் கிடைக்கலாம்
ஆனால் கடலில் கரைந்தது அல்லவா?

கலையின் கண்ணோட்டத்தில்
சிலையைப் பார்ப்பதைத் தவிர்த்து
விலையைக் கொடுத்து வாங்கி - தன்
நிலையை பிறர் பாராட்டச் செய்யும்
எண்ணம் இங்கு ஓங்கி நிற்கின்றது
இழந்ததை விடப் பெரியதாய்ப் பெற
எதிர்பார்ப்புகள் வளர்ந்து விட்டது

ஒப்பிட்டுப் பார்த்து உயர்ந்ததை வாங்கும்
உவகை வந்துவிட்டது
இருந்தும், தொலைத்ததை
மனம் மறந்திடாமல்
மௌனத்தில் இன்னும் இருட்டில் அழுதது

Falling in love is an actual fall. It hurts a lot, who land safe are OK, and the rest are not. But life must go on. Considering the social responsibilities, burry the love deep inside the heart. Using the love as the seed grow the life in the world. As long as live, the life must go on.

Family never goes against you, and if, then it is not a family. Lost is lost, but something left out, at least the soul inside the body. As long as live, the life must go on.

I convince myself and started a new life, and always compare the past with the future. Never say, but always think. As long as live, the life must go on.


கிணற்றின் ஓரம்

முக்கால் கிணறைத் தாண்டும்போது
முழுதாய் உள்ளே விழுந்தவன் நான்
ஏறிவந்து பார்த்த போது
எல்லோருமே போயிருந்தனர்

கை, கால் முறிவு அங்கங்கே சிராய்ப்பு
கண்ணின் ஓரம் மெதுவாய்
இரத்தக் கசிவு, சுருங்கச் சொன்னால்
உயிர் மட்டும் போகவில்லை

உடன் வந்தவர் முன்னேறி இருப்பர்
என்னைப் பார்த்து பயந்து நின்றவர்
பின் தங்கி இருப்பர்
நான் மட்டும் இந்தக் கிணற்றின் சுவரோரம்

நீரின் ஈரம் காய சில நேரம்
காயம் ஆற சில நாட்கள்
முறிந்த எலும்பு சேர சில காலம்
ஆனால் போன காலம் திரும்பிவர?

முன்னேறியவர் திரும்பிவர நியாயமில்லை
பின் தங்கியவர் இவ்வழி வர நினைப்பதில்லை
இந்தத் தனிமையை விட்டுப் போக
எனக்கும் மனமில்லை

leaping the big faith well
fall deep inside
when I came up and see
everyone were gone

broken bones, scratched skin
bleeding on the sides of my eyes
in short, I am just alive

who jumped, gone front
who saw me fall, back out

drying water took hours
heal the wound took days
got normal in few months
but the past is past


இலக்கணம்

எதுகையும் மோனையும்
இலக்கணமும் எதற்கு?
மனதிற்குள் தோன்றும் மனித நேயத்தை
எழுத்து வடிவில் தந்திடவே
எதுகையும், மோனையும்
இலக்கணமும் எதற்கு?

பலகாலம் கூறிவந்தனர்
அன்பிலார்க்கு இவ்வுலகில்லை என்று
அன்பு கொண்ட எனக்கு
என் இதயமே இல்லை
இந்த உலகம் எதற்கு

பாரெங்கும் முழங்குகின்றனர்
சாதிகள் இல்லையென்று
அவரே தன்
பிள்ளைகட்கு மணமுடிக்க
பிறசாதியை நோக்குவரோ?

பார்கின்றேன் பல வருடம்
மானுட தர்மத்தை
இசையில் மகிழ்ந்து தலையை ஆட்டினால்
தன்னை அழைப்பதாகக் கருதும் பெண்ணினம்
காலடிச் சத்தத்தில் தன்னாலே நோக்கினால்
தன்னைத்தான் என்று மகிழ்ந்திடும் ஆணினம்
கொச்சைத்தனமே வாழ்க்கை என வாழும்
மானுட தர்மத்தை
பார்க்கின்றேன் பல வருடம்

எதுவும் வேண்டாம் - இங்கு
மொழியும் வேண்டாம்
பிறர் பார்வையும் வேண்டாம்
அனைத்தும் இங்கு அசிங்கமாகிவிட்டது
கருவறையில் இருக்கும் கடவுளைக்கூட
கனவில் கெடுக்கும் மானிடர் கூட்டம்
கடவுட்கே இவ்வாறெனில்,
என் காதலுக்கு?

உருவகம் இல்லை - இவை
உண்மைகள்
கனவில் பிறந்த கற்பனைக் குழந்தைகளல்ல
பலப்பல பிரசவ வேதனைகளை
அனுபவம் கண்டு பிறந்த
கவிதைக் குழந்தைகள்

கடலின் அலைகள் கரையுடன் விளையாட
கும்பல் கூட்டுவதில்லை
கதிரவன் கடமை முடிந்து
உறங்கப் போக இசையைக் கேட்பதில்லை
முரண்பாடு கொண்ட மானிடர் இதயம்
இயற்கையை இரசிப்பதில்லை
கொச்சை உள்ளம் கொண்டவர் என்றும்
மனிதநேயம் நினைப்பதில்லை
எதுகையும், மோனையும், இலக்கணமும்
என்றென்றும் எனக்குப் புரிவதில்லை

To express the feelings, why do we need the grammar, and complicate word formats?

No Love, then no world. If I don’t have myself, then why do I need the world?

People say there is no caste, but they don’t feel.

I don’t need them, or the culture, or the language. If sayings, and the actions are not same, then what is the point?

I am not enhancing, just actual experience.


உனக்காக

கண்களின் ஓரம் கண்ணீர் வருகையில்தான்
கைகளில் இருந்து கவிதை வருகிறது
காதல் என் நெஞ்சத்தை விட்டுப் போனதாலா?
விட்டுப் போனால் அது காதலில்லை
பின் ஏன்?

இதயத்தினுள் அழுந்திக் கிடக்கின்றது
மென்மையான உணர்வுகளை
பல வன்மையான உணர்வுகள்
அழுத்திக் கொண்டிருக்கின்றது
எஞ்சினுக்குள் இருக்கும் வெப்பம்
வெளியில் தெரிவதில்லை
இயங்கும் வண்டியின் வேகத்தால்
உணரப்படுகிறது

காதல் என்பதற்கு மிகப்பெரிய
இடறுகல் - நிச்சயம் கல்யாணம்தான்
கல்யாணம் என்பது
உடலுறவுக்கு உத்திரவாதம்
காதல் என்பது
உள்ள உணர்வுகளுக்கு உயிரோவியம்

காதலும், கல்யாணமும்
சேர்ந்தது மணவாழ்க்கை
காதல் மட்டும் என்றால்
பெண்களுக்கு அழுத்தம்,
ஆண்களுக்கு பூகம்பம்

தூக்கம் போனது துக்கம் வந்ததால்
இழந்தது எத்தனையோ!
இருந்தும் உன்னால் மட்டும் ஏன்?
நீ மரித்திருந்தால்
உன் நினைவில் நான் உயிர்த்திருந்து
நிச்சயம் உன்னை அடைவேன்
பறந்துவிட்டாய் எனும்போது
விழித்திருந்து கவிதை எழுதுவேன்

மற்றவர் படிக்க வேண்டாம்
உன் விழித்திரையில்
என் எழுத்துக்களின் பிம்பம்
பட்டால் போதும்
அவை கவிதை ஆகும்
உனக்காக நான் கவிதை எழுதுவேன்

சாத்திரம் மாறாவிடினும்
சமுதாயம் மாறிப்போகும்
காலங்கள் மாறும்போது
இடறுகல்லும் நகர்ந்து போகும்
வன்மையான உணர்வை விடுத்து
மென்மையான உணர்வும் சிரிக்கும்
கண்ணீரும் மறைந்து உடன்
கவிதையும் நின்று போகும்

Only when I feel sad, I start to write. Love is deep inside my heart. Like the pressure inside the earth burst sometimes, I write occasionally.

If love continues with marriage, then it is life, if not, still it is love. The hatred never comes in true love. If love separates, then ladies don’t show, but the guys mostly.

If you read my scripts, then I feel it is complete, otherwise not. I continue until you see, and just stop after that.


என்னைப் பொறுத்தவரை

கொட்டும் மழையில் நனையப் பிடிக்கும்
குற்றம் இல்லா வாழ்க்கைப் பிடிக்கும்
அழும் குழந்தையை கொஞ்சப் பிடிக்கும்
அழகானவை எல்லாம் என்றும் பிடிக்கும்

காதலியின் கன்னத்தில் கைவைத்தால் மகிழ்ச்சி
காட்டாற்று வெள்ளத்தில் கால்வைத்தால் மகிழ்ச்சி
தொட்டில் குழந்தையை தூக்கினால் மகிழ்ச்சி
தொன்மையான தமிழின் மொழியால் மகிழ்ச்சி

பொறுப்புகள் இன்றி சுற்றுதல் இனிக்கும்
சுகமான வாழ்க்கை மிதமாக இனிக்கும்
கொஞ்சும் மழலை காதுக்கு இனிக்கும்
காலில் படுகையில் பூமியும் இனிக்கும்

பண்பாட்டில் பண்பட்ட வாழ்க்கையில் சிறப்பு
பலரும் சூழ்ந்திடவே வாழ்வது சிறப்பு
பெற்றெடுத்த பிள்ளை பெயர் சொன்னால் சிறப்பு
பிறர் போற்ற என் நாளும் வாழ்வது சிறப்பு

காதலியை மற்றவன் மணந்தால் மரணம்
சிறந்த நட்பை இழந்தால் மரணம்
கற்பவை கற்றபின் மறப்பது மரணம்
குழந்தையே உன்சொல் என்றென்றும் அமுதம்

I Love to get wet in the rain, lead a clean life, console the crying kid, and as everyone, the beauty

Feel joy when I hold my love face in my hands (who don’t), step into the wild river flood, take the kids from the cradle, feel the holy Thamizh Language

Feel happy when I roam around without purpose, leisure life, playing with babies, walking with the bare foot

Feel great for the cultured live, around the people, my kids make me proud, and get the blessings from others

Feel like a dead man when I lost my love, friendship, knowledge, but recovered from everything because I heard your voice


தந்தையே

சூரியனின் வெப்பம்
காட்டை எரிப்பதற்கல்ல
பூமி செழிப்பதற்கு
காட்டாற்று வெள்ளம்
உலகம் கரைப்பதற்கல்ல
உயிர்கள் களிப்பதற்கு
உனக்குப் பிறந்த குழந்தை
பிள்ளை பெறுவதற்கல்ல
உனது பெயர் நிலைப்பதற்கு

விழிகள் அன்று வெளிச்சம் தேடின
வெளியில் வந்த அவசரத்தில்
உடல் வலியால் அழுதேன்

இதயம் இன்று அன்பைத் தொலைத்ததால்
என்னை இழந்த நிலையை எண்ணி
இன்றும் அழுகின்றேன்

எதிலெதிலோ உன் பெயர் கூற நினைத்து
கற்பனை செய்ய முயலுகின்றேன்

காதலி செல்லும்போது
உடன் எனது
கனவுகள் பிறக்கும் கற்பப் பையை
பறித்துப் போனதால்
கற்பனைப் பிள்ளையைத்
தத்தெடுக்கத் தேடுகின்றேன்

கற்பனையைத் தேடிக் கால்கள் களைத்ததால்
நிஜத்தை நிழலாக்கினேன்
ஆம், எனது வாழ்க்கையின்
கடைசீ தடம் வரை

நிச்சயம் நான் இறக்கும் முன்
உன் பெயர் நிலைக்கும்
என் நிழல், என் பெயர் நிலைக்குமா

Sun not meant for burning the forest, but to enrich the world
Wild flood is not for erosion, but for life
Your kid is to make you proud, but not to give another one

Born to see the light,
With the pain I cried

Lost my life
Thinking about the same,
Still I cry

I am trying to denote your name
Trying all my thoughts
I can’t, since I lost all my dreams
When I lost my love

I am still searching
For my adopted kid in my dream world

Feeling tired, of searching for my dreams,
Put the actual besides,
Until the end of my path

Before I die,
I try my best to symbolize your name
What will be my name, and my image


உன் கண்ணோரப் பார்வை

உன் கண்ணோரப் பார்வை காட்டினால்
இந்தக் காதல் காட்டாறு
கல்லணைகள் தாண்டிவிடும்
உன் காலோரம் லேசாய் தூக்கினால்
தூங்குவதுபோல் பாசாங்கு செய்யும்

விழியோடு விழி நோக்கினால் உயிர்
விண்ணைக் கூடத் தொட்டு வந்திடும்
வெம்மை அது சற்றே தெரிந்திடினும்
வெட்டவெளியில் விழுந்து துடித்திடும்

கையோடு கை சேர்ந்திடின் என் கால்கள்
கடலேழும் தாண்டிவிடும்
சுண்டுவிரல் நகம் பிரிந்தாலும்
நின்ற இடத்தில் மயங்கி விழுந்திடும்

குழந்தைகென்று நீ கரிசனம் காட்டினால்
என் கண்ணோரம் கலங்கிடும்
"அருகில் வா", என அன்புடன் அழைத்தால்
நிச்சயம் அடுத்தது பிறந்திடும்
காமத்தின் வேகத்தில் மோக விளையாட்டால் அல்ல
கருவிற்குள் குழந்தை பிறக்க
ஏற்றிய யாகத்தின் தீபத்தால்


கடும் புயல் அடித்தாலும்
கற்றைப் புல்லைப் பிடுங்கிடாது
காட்டாற்று வெள்ளம்
கட்டாந்தரையையும் விட்டு விடாது

பச்சைப் புல்லை இரசிக்காவிட்டால்
பார்வை இருந்தும் பார்வை இருக்காது
துன்பம், இன்பம் பகிர்ந்திடாவிட்டால்
நண்பர் இருந்தும் நட்பு இருக்காது

கானமும், குழலும் கேட்காவிட்டால்
காதுகள் இருந்தும் இருப்பதாகாது
காதல் இல்லாமல் இதயம் இருந்தால்
காலணா கூட கட்டாயம் தேறாது

பெற்றவர் தன்னுடன் இருக்காவிட்டால்
பணமும், புகழும் பெரிதாய்ப் படாது
உயிராய் நினைப்பவர் பிரியாவிட்டால்
ஊற்றெனக் கண்ணீர் நிச்சயம் வராது


கண்ணீர்த் துளிகள்

கண்ணீர்த் துளிகள் என்று
கண்களின் ஓரத்தில் வழிவது இல்லை
கையில் உள்ள பேனாவின்
மையாக வெளி வருகின்றது

வண்ணங்கள் எவ்வாறோ
ஆனால் எண்ணங்கள் மட்டும் நீ

இதுவும் ஒரு காதல் கவிதைதான்
ஆனால் காதலியைத் தேடி அல்ல
தந்தை தான் பிரிந்த
மழலையைத் தேடி

கைக்கெட்டும் தொலைவில் இருந்தாலும்
கட்டியணைத்து முத்தமிட எண்ணமிருந்தாலும்
காரியம் மட்டும் முடியவில்லை

ஏன்? ஒரு குழந்தையை
தந்தையால்

சமுதாயம் - பெற்றவன் மட்டுமே தந்தையாகிறான்
பாசம் உள்ளவன் மாற்றானெனில்
நிராகரிக்கப் படுகிறான்

மின் விளக்கு வந்தபின்
நிலாவே நிராகரிக்கப்படும் எனும்போது
இந்த மெழுகுவர்த்தி எம்மாத்திரம்

காலம் அடித்துச் சென்ற நேரத்துடன்
நினைவுகளும் சென்றுவிட்டால்
துக்கமில்லை
செல்லாத காரணத்தால் இப்போது
தூக்கமில்லை


குரலைக் கேட்கும் என்னால்
உன் விரலைத் தொட முடியவில்லை
இது சோகம்

விரலைக் கூடத் தொட முடியாத என்னால்
உன் குரலையாவது கேட்க முடிகிறதே
இது சந்தோஷம்

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
நிச்சயம் உன்னால்தான்
ஏன், நான் இப்போது எழுதும்
எழுத்தும் கூட உன்னால்தான்

ஓராயிரம் சத்தங்களுக்கிடையில்
உனது குரல் மட்டும்
தனி சந்தமாக ஒலிக்கின்றது
அது என் உயிருக்கு
உரமளிக்கின்றது

உன்னுடன் பழகிய நாட்கள்
என் வாழ்க்கைக்கு
அர்த்தம் கொடுக்கின்றது
உன்னை நான் மீண்டும்
சேரப் போகும் நாள்
என் உடலுக்கு உயிர்
நன்றி கூறி விடைபெறப் போகின்றது


நிலவே நீ எங்கே

நிலவே நீ எங்கே
உனைக் காணாமல் மனம் ஏங்குதே
கனி மொழி தேடி உயிர் வாடுதே
நிலவே நீ எங்கே

பழங்கால நினைவாலே மனம் எங்கும் அலைமோத
நிகழ்காலம் கனவாக வரும் காலம் இருளாக
ஒளிதன்னை உயிர்தேடி உனதடி தன்னை தினம்நாடி
எனதடி என்றும் தடுமாறி வெளிதன்னில் உனைத்தேடுதே

காலம் கடந்து நேரம் மடிந்து
கண்ணீர் மறைந்து கனவுகள் பிறந்து
என்னுள் நுழைந்து எனதுயிர் கரைத்து
உன்னுடன் என்னை சேர்ப்பதும் என்றோ


என்னால்

எல்லாம் என்னால் என நான் நினைக்க
கால் தடுக்கி விழுந்தேன்
கல் தடிக்கியது என்றேன்

எல்லாம் இறைவனால் என நான் நினைக்க
என் வண்டி மோதியது
ஒரு குழந்தையின் மேல்
ஏனடா என்றனர் என்னைப் பார்த்து

Believing everything is by me
Tipped on the way
Balme it on the stone

Believing all by God,
My car hit on a baby
The crowd asked me,
What happened to you?

Believing the God got the control of the life is good, still there are duties to be done with my own. My faith is God leads, but I have to walk to follow


பாசறை

விண்ணுலகை விட்டு
மண்ணுலகம் வந்தேன்
விண்ணுக்குக் கீழே
மண் என்பதால்

பாழான என்னை
புதைத்து விட்டான் இறைவன்
என் தாயின் வயிற்றில்
வெறுத்த அன்னை
வெளியில் போட்டாள்

காதல் கொண்டேன்
உயிரை நேசித்தேன்
என் உயிர் அழுகியது
உடல் அழுததால்

புதைத்தனர் என்னை
மீண்டும் இங்கே
பாழானேன் என்பதால்
புதைத்தனர் என்னை
இனிமேல் எங்கோ

Fall from the heaven
‘Cause world is below

I am useless there,
He buried me in womb
Mom cannot handle it
Now I am in world

Fall in Love,
Lost on the way,
My body decay

Buried me here,
‘Cause I am spoiled again
What is next?


முற்றுப் புள்ளி

எட்டி உதைத்தது உலகம் உயிரை
உயிர் எட்டி உதைத்தது உடலை
வாழ்க்கைக்கு இங்கு .... ...

காதலை வெறுத்தது இதயம்
கண்ணீரை வெறுத்தது கண்கள்
அழுகைக்கு இங்கு .... ...

வீண் பழி சுமத்தியது உறவு
உடலை நேசித்தது காமம்
நேசத்திற்கு இங்கு .... ...

World denied the soul
Soul denied the body
Full Stop for the life

Heart hate the love
Eyes hate the tears
Full Stop for the cry

Blamed by relation
Body liked the sex
Full Stop for the likes


மனம்

மரம், செடி, கொடி கூட
தனக்குப் பிடித்த மண்ணில்தான்
வாழ்கின்றன

இவருக்கு கருத்தொருமித்துக் காதலில்லை
காதலைத் தொடர்ந்து கல்யாணமில்லை
மணம் புரிந்து மகவெடுப்பார்
கருத்தரித்துக் காதலிப்பார்

இந்த மரம், செடி, கொடி
மற்ற மண்ணில் வாழலாம்
ஆனால் இந்த மண்ணில்
மற்றவை வாழுமோ

My marriage is an arranged marriage. But still I believe in Love Marriage. By Luck or by understanding the life is going on for most of us.

Love marriage is like the coconut trees on the seashore, and the arranged marriage is the same coconut trees planted in the farm.

Before my marriage, I thought I am totally useless to lead a married life.


காலடித் தடங்கள்
அளவுகள் குறைந்தன
எதிர் பாலினரைத் தேடித் தேடி
பாதைக்கும் பாதத்திற்கும்
ஏற்பட்ட உராய்வில்
காலடித் தடங்கள்
அளவுகள் குறைந்தன

உயிர் அழிவதில்லை
ஆனால் உடல் அழிகிறது
உடலின் வளர்ச்சியில்
உடல் அழிகிறது

காதல் அழிவதில்லை
ஆனால் உணர்ச்சிகள் அழிகிறது
உணர்ச்சியின் வளர்ச்சியில்
உணர்ச்சி அழிகிறது

உடலை வெறுத்துவிடு
உணர்ச்சியை அழித்துவிடு
வரலாறு படைக்கத் தடுக்கும்
தடைகளை உடைத்துவிடு

இளவயதில் உன்னிடத்தில்
அனுபவம் இல்லை என்பார்
முதுமையிலே உன்னுடலில்
வலிமை இல்லை என்பார்

வெட்டியாய் இருந்துகொண்டு
வெறும் பேச்சு பேசுவோர்
வார்த்தைகளை ஒதுக்கி விடு

அன்புக்கு மதிப்புக் கொடு
ஆணவத்தை ஒதுக்கி விடு
இன்பதுன்பம் அகற்றி விடு
ஈகைக்கு எல்லை எடு
உண்மைக்கு முதன்மை கொடு
ஊக்கம் கொண்டே நடை போடு
எண்ணும் வண்ணம் செயல்படு
ஏகாந்தம் அடைந்து விடு
ஐம்புலனை அடக்கி விடு
ஒன்றே இறைவன் உணர்ந்து விடு
ஓம்காரத்தை அடைந்து விடு


எழுதுகோலை எடுத்து எழுத நினைத்தேன்
எழுத்துக்கள் வர மறுக்கின்றன
ஆடுபவன் மனிதன், ஆடும் மனிதனை
ஆட்டுவிப்பவன் இறைவன்

தாயும் தந்தையும் முயன்றால் மட்டும்
பிள்ளைகள் இங்கே பிறப்பது இல்லை
தனக்கு மீறிய சக்தியை உணர்ந்தேன்
இறைவன் என்று பெயரிட்டுத் தொழுதேன்

எனக்கும் பிறந்தது எழுத்துக் குழந்தைகள்
தாய் நானென்றால் தோற்றம் இறைவனால் என்றால்
தந்தை யார் என்று கேள்வி எழுந்தது
விடையாய் காதலியே நீதான் தெரிந்தாய்

காதல் என்பது கைகோர்த்து அலைவது அல்ல
காதல் என்பது கல்யாணத்தில் முடிவது அல்ல
காலம் முழுவதும் தொடர்ந்து வந்து
வானம் போன்று நிலைத்து இருப்பது

பெற்றோரைக் காதலிக்கின்றேன் நான்
என் நண்பர்களைக் காதலிக்கின்றேன்
என் குழந்தைகளைக் காதலிக்கின்றேன்
இறைவனைக் காதலிக்கின்றேன்
காதலியே உன்னையும்தான்

தலைப்புகள் கொடுத்துத் தந்தையாக நினைக்கும்
பரிசுக்காக கவிதை எழுதி
கற்பிழக்க விரும்பவில்லை
அன்புக் காதலியே உனக்காக எழுதுவதில்
உள்ள இன்பம் - அதற்கு அளவில்லை

நீ இன்னும் என்னை நெருங்கவில்லை
கடைக்கண் பார்வையில்லை
இன்றுவரை தீண்டவில்லை
ஆனால் எனக்குப் பிறந்த
பிள்ளைகளோ ஏராளம்

கட்டுப்பாடு இங்கு இல்லை
கருத்துக்கள் பரிமாறலாம், பிறர்
கவலைகள் பல நீக்கலாம்
கவிதைகள் பல தந்த
கண்ணம்மாவும் உனை வணங்கலாம்


பூமிக்கு சூரியன் போன்று
என் வாழ்விற்கு ஒரு குழந்தை

இறந்து விட்டேன், என்
இதயமும் செயலிழந்து விட்டது
ஆம், சுற்றி இருந்தவர் கூறினர்
நான் இறந்து விட்டேன் என்று

செயலிழந்த உடலில் சிறிய இயக்கம்
உதடுகள் முனகியது அவள் பெயரை
கண்களில் அக்குழந்தையின் நிழல் பட்டதால்

உருவம் பட்டது, மீண்டும்
இதயம் துடிக்க ஆரம்பித்தது
செவியின் வழியே மழலைமொழி பாய
நாசியின் வழியே மூச்சுக்காற்று நுழைந்தது

உயிர் கொடுத்ததால் அக்குழந்தை
என்னை பெற்றவள் ஆனாள்

தவறு செய்ய நினைத்தேன்
தடுத்தது ஒரு உணர்வு
கெடுதல் செய்ய நினைத்தேன்
வேண்டாம் என்றது உணர்வு
பழி வாங்க நினைத்தேன்
பாவம் என்றது உணர்வு

வருடங்கள் இரண்டில்
கனவுகள் படுத்திய
காயங்கள் போதாது என்று
நினைவுகளும் துணைக்கு வந்தது

காயப்படுத்திய கயவர்களை
தண்டிக்க நினைத்தேன்
மன்னித்தது ஒரு உணர்வு
காயத்தை மறந்து
தியானத்தில் இருக்க
தன் உருவம் தந்தாள்

அன்று உயிரினைத் தந்தவள்
இன்று இறைவனுக்கு உருவமும் தந்தாள்
மழலையாய் நெருங்கியவள்
குழந்தையாய் இணைந்து
பெற்றோராய் உயர்ந்தவள்
இன்று என் உடலுக்கு உணர்வளித்து
உயிருடன் உறைந்து
இறைவன் ஆனாள்


விடியலுக்கு காத்திருந்த விழிகள்

விடியலுக்கு காத்திருந்த விழிகள்
இங்கு இருட்டில் காண்பதற்கு
பழகிக் கொண்டு விட்டன

இனி மெழுகுவர்த்தியின்
வெளிச்சம் பட்டால் கூட
இமைகள் மூடிக் கொள்ளும் நிலையில்

இதற்கு உதயத்தால் ஆகப்போவது என்ன
கூச்சம் மட்டுமே எனும்போது
விடியலால் தெரியப் போவது என்ன

பிஞ்சு விரல்கள் இதுவரை கனவுகளில்
சிறு பிள்ளையைக் கொஞ்சிக் கொண்டிருந்தது
காலப் போக்கில் கவிதை எழுத ஆரம்பித்தது

கண்ணீர் வடித்துக் கலங்கி இருந்த
இமைகள் ஒரத்தில் அன்பு விரல்கள்
ஊற்றினை அடைத்து ஓய்வு கொடுத்தன

"இறைவன் இருக்கிறான், உன்னிடம்
உன் குழந்தை திரும்பும்"
என்றவள் கூறி விட்டு சென்றாள்

காட்டுப் பாதையில் கருத்த இரவு
குழந்தையை மட்டும் தேடிய இதயம்
அன்பு விரல்களையும் காணத் துடித்தது

வெளிச்சத்திற்கு ஏங்கிக் காத்திருந்த விழிகள்
இமைகளை மூடிக் கொண்டு இருட்டினை இரசித்தது
வெளிச்சத்தைக் கூட வெறுக்க ஆரம்பித்தது


மீண்டும் கனவுகள்
கண்ணீர் விரட்டியடித்த உறக்கம்
மீண்டு வந்து, மீண்டும் கனவுகள்

எரிக்கும் சூரியன் ஒன்று போதாது என்று
துணைக்குப் புதிதாய் இன்னொன்று

தங்கத்தை தீயிலிட்டால் தவறில்லை
ஆனால் இங்கு வைரத்தை ....
தவறு என் மீதா

விடை தெரியா கேள்விகள் இங்கு
வழித்துணையாய் வருகின்றன

பூத்து மடிவதற்குக் காதல் பூக்களில்லை
உதித்து மறையும் கதிரவன் என்று
தீயிலிட்டவருக்குத் தெரிய நியாயமில்லை

உதிப்பதும் மறைவதும் கண்களுக்கேயன்றி
கருத்துக்களில் இல்லை என்று
கனவுகள் கொடுத்தவருக்குத் தெரிய நியாயமில்லை

அன்பை அடைப்பதற்கு அணைகள் இல்லையாம்
வள்ளுவன் பார்த்திருந்தால் வாயடைத்துப் போயிருப்பான்
கம்பன் பார்த்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பான்
அனுபவிப்பவன் நான் அமைதியாய் இருக்கிறேன்

காட்டற்று மனமில்லை கரைபுரண்டு காடழிக்க
கடல்நீரும் நானில்லை கொந்தளித்துப் பொங்கியெழ
அமைதியாய் வழிநடந்து வாய்க்காலின் வழிசென்று
வயலினை வளப்படுத்தி உயிர்களுக்கு வாழ்வளிக்கும்
ஆற்றுநீர் போல்நானே வாழ்க்கையினை வாழ்வதனால்
அனுபவிப்பவன் நான் அமைதியாய் இருக்கிறேன்


நோக்குமிடமெலாம் இறைவன் என்கையில்
இறைவனை நோக்குதல் மிக எளிதன்றோ
பார்க்கும் உயிரெல்லாம் நீ எனும் போது
உன்னைத் தனியே பார்ப்பதும் தேவையோ

அரைநிமிடம் உன்னோடு வாழ்வது போதும்
என்றே நானும் மனதில் நினைக்கயில்
ஆயிரம் நிமிடம் உன்னோடிருந்தது
மகிழ்வினைத் தவிர்த்து வேறேதும் தருமோ

காதலியாய் உனைநான் கனவிலும் சுமந்து
கல்யாணம் செய்து கற்பனையில் வாழ்கையில்
மற்றொருவர் கைப்பிடித்து மனிதனாய் வாழாமல்
மனைவியை ஏமாற்றும் வாழ்க்கையும் வாழ்க்கையோ

காலங்கள் கரைந்தோட கருத்தமுடி வெளுப்பாக
களைத்திட்ட கால்களை காதலியும் அழுத்திவிட
இறைந்துவிட்ட மூச்சுமது இதயத்தை நிறுத்திவிட
வாழ்ந்திட்ட வாழ்வுக்கு ஈடாகுமோ


தோள்களில் அமர்ந்த மரங்கொத்திக் குருவிகள்
காதுகளில் கொத்திக் களியாட்டம் போடுகிறது
நாசிகளில் நுழந்துகொண்ட நாகங்கள் இரண்டு
கண்களுடன் கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடுகிறது
வாயினில் கூடுகட்டி குடியிருக்கும் கருடன்
நாக்கினைத் துண்டித்து குஞ்சுகளுக்கு உணவாக்கியது

கால்கள் இரண்டை பெருமுதலை கவ்வ
கைகள் இரண்டை சிறுநரி சுவைக்க
நடுவில் உள்ள உடல் மட்டும்
தனிமையில் கொடுமையில் மெதுவாய் முனகியது

உடலின் தனிமை உள்ளத்தை வாட்ட
மெதுவாய் கன்னிகை ஒருத்தி வந்தாள்
சற்றே குனிந்து நெஞ்சைக் கிழித்து
இதயத்தை எடுத்து மெதுவாய் உருசித்தாள்
இன்பத்தில் ஆழ்ந்தது உடல் மட்டுமல்ல
உடல் சுமக்கும் உயிரும் சேர்ந்தே


எனதுயிரின் ஜீவநாடி கால்கள் கொண்டு
வீரநடை நடக்கிறது
மழலை இன்னும் எந்தன் கண்களுக்கு
மறைய மறுக்கிறது
சிலிர்க்கிறது உடல், சீறிப் பாய்கிறது
உடலுக்குள் உதிரம்
மறைந்த சூரியன் மீண்டும் உலகிற்கு
உதயம் கொடுக்கிறது
கண்களில் பிறந்த காதல் குழந்தை
இன்று இதயச் சிறையில்
இடுக்கிக் கட்டி இரும்புச் சிறையில்
சாவியும் தொலைந்தது
உதயம் வந்தும் காதல் மட்டும்
இருட்டுச் சிறையில்


உனை நானும் தோள் சேர்க்க
எனை நீயும் தோள் சேர்க்க
உருவான இந்நேரம் நன் நேரமே
காலங்கள் விரைந்தோட
கண்ணீரும் ஆறாக
கடந்திட்ட காலங்கள் நிலைமாறுமே

மகிழ்ந்திட்ட பறவைகள்
பலவாறாய் இசை கூட்ட
வானத்து விண்மீன்கள்
வந்திங்கு கவிபாட
உனை வாழ்த்த தேவர்கள்
இவ்வுலகில் அடிவைக்க (உனை)

பிரித்திட்ட பெரியோர்கள்
ஒருவாறாய் மனம் மாற
நமை உணர்ந்து
தவறுணர்ந்து
நமை இன்று இணைத்திடவே
கடந்திட்ட காலங்கள் நிலைமாறுமே (உனை)


கடந்தவைகள் கண்ணீர்த் துளிகளில்
முடிந்தவைகள் மறந்துவிடட்டும்
வருபவை விழிகளின் சிவப்பில்
சுட்டெரிக்கும் சூரியனுக்கே
போர்வை போட்டு மூடும் வர்க்கம் நாங்கள்

காலப் போக்கில் வளர்ந்தவை
வருங்காலத்தில் விறகுகளாகி எரிந்து
சாம்பலாகப் போகின்ற வாழ்க்கை
எட்டி ஒரு அடி வைத்தால்தான்
இருக்கும் இடம் விட்டு முன்னேறலாம்

கண்ணீர் உற்பத்தியில்
காலம் கழித்தது போதும்
கடமைகள் உள்ளவரை
கடமைகள் செய்துவிடு
முடிந்துவிட்டால் புதியன தேடு

கல்லுக்குள் தேரையாய்
கல்லறையில் உறங்கப் போகிறாய்
முடிவு தெரிந்தும் ஏன் இன்பமும் துன்பமும்
அனைத்தும் அழித்துவிடு
அமைதியாய் இருந்துவிடு

உண்மையைத் தேடி எங்கும்
உயிரினைத் தூது விடு
உயிரே சோர்ந்து விட்டால்
உண்மையாய் உறங்கும் வரை
உன்னுள் உறங்க விடு


என் புறமுதுகில் குத்தும் கோழைகள்
மத்தியில் ஒரேஒரு வீராங்கனை நீ
என் நெஞ்சில் கத்தியை இறக்கி
இதயத்தை எடுத்து, துண்டு துண்டாக்கி
இரசித்து உருசித்த வீராங்கனை நீ

மரித்துவிட்டேன் நான்
என்பதை மட்டும் உணர்கிறேன்
எனக்கு நானே குழிவெட்டி
உள்ளே படுத்துக்கொண்டு
மண்ணை நானே போட்டு அழுத்தி
கல்லறையை எழுப்பிக் கொண்டேன்
மூச்சு விடாமல் வாழ்வதற்கும்
பழகிக் கொண்டு விட்டேன்

வெள்ளை மாளிகையாய் அழகாக
எனக்கு ஒரு நினைவுச் சின்னம்
இதில் உன் நிழல் கூடப்
படவேண்டாம், ஏன்?
பட்டுவிட்டால், பட்ட என் மேனி
மூச்சுவிட ஆரம்பித்து கண்களை திறந்து
கல்லறையை உடைத்து, மீண்டும்
உன்னைக் காதலிக்க ஆரம்பித்துவிடும்


எண்ணங்கள் எழுத்துக்களாய்ப்
பிறந்தது போதும்
பிறந்தவைகள் பிரவேசித்தது
பட்டினிப் பிரதேசம்
இனியேனும் கருத்துக்களுக்குக்
கருத்தடை செய்துவிடு
இலக்குகள் இல்லாமல்
அம்புகள் எதற்கு
கற்பூரம் உருகுவதில்லை
பிறந்தவைகளை அழித்துவிடு
கண்ணீரில் புதைத்துவிடு
கல்லறைகள் எழுப்பிவிடு
மரித்தவை உயிர்ப்பதில்லை
உயிர்த்தாலும் புனர்ஜன்மம்தான்
முன்பிறப்பின் நினைவுகள்
இதயத்தை தொடுவதில்லை
காட்டாற்றின் வழியைக்
கூழாங்கற்கள் தடுப்பதில்லை
கடலை அடைந்து விடு
இல்லையேல்,
வயலை வளப்படுத்து


சமர்ப்பணம் செய்யப்பட்டது
சகதியில் எறியப்பட்டது
வாடிப் போகும்வரை
வாசனை வீசுவது
காலில் மிதிபட்டு
சகதியில் எறியப்பட்டது

எரியப்பட்ட மலரும்
மெல்ல மரணத்தை நோக்கிப்
பயணத்தைத் தொடர்ந்தது

சீரிய சிந்தனை
சுடர் விட்டு எரிய
பயணம் செய்யும்
பாதை தெரிந்தது

வட்ட நிலவுக்கு
வழித்துணையாய்
நட்சத்திரங்கள் ஏராளம், ஏராளம்
ஆனால்
பற்றி எரிவதற்கு பக்கத்துணை
இருப்பதில்லை, இருப்பதில்லை


வெண்ணிற மேகம் - 2

மெல்லத் திரையை விலக்கி வெளியில் வந்தேன்
நிசப்தம் நிசப்தமானது
உலகில் தலையை நீட்டியவுடன்
   உடனே வந்தது பயம்
தொடர்ந்து வந்தது அழுகை

பாலூட்ட முடியாதவர்கள்
   பெயர் வைக்க முனைகிறார்கள்
கட்டாயங்கள், வட்ட நிலவுக்கும் அட்டவணைகள்
மரணம் வரும்வரை மறுக்க முடியாதவைகள்

மருந்துக்கு மறுப்பு;
மறுப்பு மறுக்கப்படுகிறது
உணவும் உறக்கமும் கூட திணிக்கப்படுகிறது
தேடுவதைத் தவிர
தேவையில்லாதவைகள் கொடுக்கப்படுகிறது

கும்பலும் கூச்சலுமாய் உள்ள கூடாரத்தில்
அடைக்கப் படுகின்றேன்

போகும் வழி தெரியவில்லை
கண்கள் இருந்தும், வெளிச்சம் இருந்தும்
நான் போகும் பாதை தெரியவில்லை

நிச்சயம் மரணத்தை நோக்கி
ஆனால், மரணத்திற்கு முன்னே?
புத்தனுக்கு போதி மரம்
காந்திக்கு சுதந்திரம்
எனக்குத் தெரிவது பொட்டல் வெளியும்
எரிக்கும் கதிரவனும், துணைக்கு இரவில்
சிலசமயம் நிலவும், நட்சத்திரங்களும்

பழகிப் போனால் பாம்புக்கடிக்கும்
பயப்படுவதில்லை
எரியாத அடுப்பு, வேகாத அரிசி,
உண்ணாத உணவு,
வாழ்க்கை இல்லாத வாழ்க்கை

உடலில் உரம் இருக்கையில்
   எண்ணங்கள் உதிப்பதில்லை
எண்ணங்கள் பிறக்கையில்
   உடலில் உரம் இல்லை

துளையில்லாத புல்லாங்குழல்
கீதம் இசைக்க முயல்கிறது
துவண்டு கிடக்கும் பாம்பு ஒன்று
   பறந்து செல்ல முனைகிறது
வருடங்கள் ஓடியது, வலிமையும் சேர்ந்துத்தான்
கனவுகளைக் கூட தேட முடிவதில்லை
தள்ளாமை தலைவிரித்து ஆடியது

மல்லார்ந்து படுத்தேன்
வானத்தை பார்த்தேன்
மென்மையாய் புன்னகை புரிந்தேன்

வெண்ணிற மேகம் என்னைப் பார்த்து
ஏளனமாய் சிரித்தது
நிழலையாவது நான் தருவேன்
ஆனால் நீ ....
புன்னகை இறந்தது, ஆணவம் பிறந்தது
"பிள்ளைகள் தந்தேன், பெயரினை வைத்தேன்"
ஏளனம் மறைந்தது
மௌனமாய் மேகமும் கலைந்து சென்றது


வெண்ணிற மேகம் - 1

கடற்கரையின் கருமையை நோக்கி
உருவங்கள் இரண்டு கூடலுக்குப் போகும்
கற்பு களவாடப்படும்
காமம், காதலென்று பெயர் சூட்டிக்கொள்ளும்
இவர் அவரையும், அவர் இவரையும்
குறை கூறிக் கொள்வார்
தன் கைகளை மறைப்பதற்கு மற்றவர்மேல்
கற்களை விட்டு எரிகின்றார்

மனிதன் என்று பெயர் சூட்டி
மமதையாய் போகின்றார்
மேகம் என்று பெயர் சூட்டி
நாங்கள் போவதில் தவறேது

எண்ணத்தில் உரம் இன்றி
பேடிகளாய் வாழ்ந்திடுவார்
மற்றவர் மகிழ்வினால் வயிறு எரிந்து மரித்திடுவார்
தன் வாடை தெரியாது
பிறர் வாடைக்கு முகம் சுளிக்கும்
மனதுடன் வாழ்கின்றார் (மனிதன்)

கோவிலின் சிலையழகில் உயிரினைக் கொடுத்தவன்
காலடி மண்ணைக் கலங்காமல் கற்பழிப்பார்
கட்டழகைக் கண்டுவிட்டால் கனவுகளில் கற்பழிப்பார்
கண்ணால் கண்டுவிட்டால் காதலென்று பொருள் கொள்வார்
குழந்தையெனப் பார்த்தாலும், அழகு எனப் பார்த்தாலும்
அனர்த்தமாய் அர்த்தம் கொள்வார், அசிங்கமாய் பேசிடுவார் (மனிதன்)

மக்கள் மேல் அக்கரை இன்றி மன்னவனாய் ஆண்டிடுவார்
பெற்றவர் மேல் பாசம் இன்றி பிள்ளைகளாய் வளர்ந்திடுவார்
அறிவிலியார் இருந்துகொண்டு ஆசிரியராய் பணிபுரிவார்
குருக்களாய் இருந்துகொண்டு கோவில் சொத்தை திருடிடுவார்
அழகாய் இருந்தாலும் அசிங்கமாய் நடந்து கொள்வார்
உள்ளுக்குள் நஞ்சை வைத்து வஞ்சனை செய்திடுவார் (மனிதன்)

வெளிப்படையாய் கூறிடுவேன்
வானத்தை அண்ணார்ந்து பார்த்தது போதும்
அரிதாரம் பூசி வேடம் கட்டியது போதும்
கருமையாய் நான் இருந்தால் அதிலேதும் தவறில்லை
உன் மனமிருந்தால்? நீதி சொல்ல நான் தேவையில்லை
வெண்மையாய் நான் இருந்தால் உலகிற்கு நிழல் தருவேன்
உன் மனமிருந்தால், உன்னையே நீ தருவாய்
மனிதன் என்ற வேடம் கலைத்து
மனிதனாய் மாறி வருவாய்


எழுதுகோலை காகிதம் வெறுப்பதில்லை
சூரியனை பூமி வெறுப்பதில்லை
சந்திரன் பூமியை வெறுப்பதில்லை
பிரியாதவைகள் -
பிரிந்தால் அர்த்தமில்லாதவைகள்

உருவங்கள் மாறலாம், பெயர்கள் மாறலாம்
உறவுகள் மாறுவதில்லை
இணைந்தவை பிரிவதில்லை
பிரிந்த அணுக்களால் வெப்பம்
மீண்டும் சேர்ந்தால், மிகமிக அதிகம்

கல்லுக்குள் தேரையாய்
கிணற்றுக்குள் தவளையாய்
வாழ்ந்த காலம் போதும்
சூரியனின் வெப்பமாய்
சீற்றம் கொண்டு வா

கருத்துக்களில் உள்ளவை
காதுகளில் விழவேண்டும்
எண்ணங்களாய் இருப்பது
எழுத்துக்களாய் பிறக்க வேண்டும்

கனவுகள் நினைவாகக்
கடல்கள் நீந்த வேண்டும்
வெட்டியாய் இருந்து விட்டு
வீணாய் சாய்ந்துவிட
சிறு துரும்பும் நினைப்பதில்லை

மலையைப் பிளக்க வேண்டாம்
வழியில் விழுந்து கிடக்கும்
வாழைப்பழத் தோலை
ஓரமாய் எடுத்துப் போடு
நீயும் விழவேண்டாம்
உந்தன் பின்னால்
தொடர்பவரும் விழ வேண்டாம்

என் எழுத்துக்களுக்கு
உனக்கு வீரம் கொடுக்கும்
உரம் உள்ளதானால்
என் கைகள் உள்ள வரை
என் எண்ணம் சுரக்கும் வரை
எழுத்துக் குழந்தைகளை
கருத்தரித்துக் கொடுப்பேன்

இனியேனும் நீ
சூரியனின் வெப்பமாய்
சீற்றம் கொண்டு வா
உள்ளத்தில் உரம் ஏற்றி
கனவுகள் நினைவாகக்
கடல்கள் நீந்தி வா


அர்த்தமுள்ள அனர்த்தங்கள்
துளையில்லாத புல்லாங்குழல்
தந்தியில்லாத வீணை
உயிரில்லாத உயிர்
வாழ்க்கை இல்லாத வாழ்க்கை

நிழலின் அழகு சில நேரங்களில்
நிஜத்தில் இருப்பதில்லை
இரவின் அழகு பல நேரங்களில்
பகலில் இருப்பதில்லை
கனவில் வாழ்க்கை என்றுமே
நினைவில் கிடைப்பதற்கில்லை

விட்டு எழுந்து வா
கண்கள் திறந்து வா
புனர்ஜன்மம் தான் இவைகள்
உனக்குப் பின்னால்
உனது கல்லறைகள் ஏராளம்
இன்னும் ஏன் தயக்கம்
பிணங்கள் உயிர்ப்பதில்லை
அவைகளின் உயிர் உன் உடலில்

இவ்வுடல் பிணமாவதற்குள்
விட்டு எழுந்து வா
கண்கள் திறந்து வா
மீண்டும் ஒரு புனர்ஜன்மம்
தேவையில்லை இனி

மேலே இருப்பது
என்னைக் காதலிப்பவள் கொடுத்தது
ஐந்து வருடமாய்
உள்ள உறவினை
சில நாட்களில் மறந்து விட்டாயே
நீ விரும்புபவள் கிடைத்ததன் விளைவோ

கண்ணீர்த் துளிகள்
கன்னத்தில் வழிந்தது
கால்களைப் பிடித்தாள்
காதலிப்பதாகக் கூறினாள்
ஏற்றுக்கொண்டேன் நான்
எனது வாழ்க்கையின்
முதல் முத்தம் உதடுகளில்
மௌனமாய் அரங்கேறியது

மணம் புரிந்தோம்
உறவுகள் கொண்டோம்
பிறந்தது மகவு கருமையாய் முதலில்
அடுத்தது பிறந்தது
செம்மையாய் இருந்தது
தொடர்ந்து வந்தது
நீலமாய் இருந்தது
காரணம் என்ன?
மனதிற்குள் முனகினோம்
பிறந்தது கூறியது
நான் கல்கி அவதாரம் என்று


துன்பங்கள் தூக்கில் போடுகின்றன
இசை மட்டும் இன்பத்தில் ஆழ்த்துகின்றன
வெட்டவெளியில் சுதந்திரம் எனக்கு
உண்ண உணவில்லை, உறங்க இடமில்லை
உடுக்க உடையில்லை, உறவுக்கு யாருமில்லை
சுதந்திரம் மட்டும் தாராளமாய் உண்டு

உடலைமட்டும் கிழித்த முட்கள் - இன்று
இதயத்தையும் கிழிக்க ஆரம்பித்தது
சுதந்திரம் எனக்கு மட்டுமா?
மற்றவர்களுக்கும் தானே

"சூரியனை கட்டி இழுக்க
கயிற்றினைத் தேடாதே
கனவுகள் போதும் கல்லறையில் தூங்கும்வரை"
மனதிற்குள் நான் சொன்னேன்
கேட்கவில்லை - பாவம்
என் மனம் செவிடு போலும்


உணர்வுகளெல்லாம் ஒடுங்கிப் போயிருந்தாலும்
உனது பெயரைக் கேட்டால் மட்டும்
உள்ளுக்குள் ஒரு கோடி மின்னல்கள்

கனவுகள் எல்லாம் சிதைந்தன என்று
கல்லறைக்குள் நான் இருந்தாலும் - உன்
கண்ணிமைக்கும் சத்தம்கூட
என்னை எழுப்பிவிடுகின்றன

உணர்வுக்கு ஏனடி ஊமைப் போர்வை
வார்த்தையில் தொடுத்திடடி - அன்பை
வாய் வார்த்தையில் தொடுத்திடடி
உந்தன் இதயத்தின் கதவை
கண்களின் இமைகளை திறந்தே வழிவிடடி

அன்னையிடம் உன் காதலை மறைத்தால்
அதிலேதும் தவறில்லை - அன்பே
என்னிடம் நீயும் மறைப்பதினாலே
பயனும் ஏதுமில்லை, காதலுக்கேங்கும்
எந்தன் மனதில் இன்பம் ஏதுமில்லை

கவலையுடன் நாம் இருப்பதனாலே
காதல் வளர்ந்திடுமா? - உன்னை
அன்புடன் நெஞ்சில் சேர்த்தணைக்காது
சோகம் தீர்ந்திடுமா? காதலி உந்தன்
கை பிடிக்காது உயிரும் போய்விடுமா?


கூவத்தின் கரையில்
மூக்கை மூடுபவர்கள்
கூடலின்போது
மூடுவதில்லை

எண்ணங்கள் - இதயத்தின்
அடித்தளங்கள்

காமத்தைத் தேடி
அலையும் காலத்தில்
உன் கால்கள்
தேய்ந்து கொண்டிருக்கின்றன

காலம் மாறட்டும்
கதிரவனைக் கட்டிப் பிடிக்க
முயன்று கொண்டிரு
எட்டடியாவது உயரமுடியும்

உன் கால்களுக்கு
அடியில் பள்ளங்கள்
மற்றவர் தோண்டியதல்ல
நீ வெட்டியதுதான்

இனியேனும் வெளியில் வா
வட்ட நிலவை
வீட்டு விளக்காக்கலாம்

உன் கால்களை ஒட்டிய
வட்டத்தினை அழித்துவிடு
கண்ணில் பட்ட இடமெல்லாம்
காலடி பதித்துவிடு

கண்ணீர் வருவதற்குள்
கல்லறையில் படுத்துவிடு
கல்லறையில் படுப்பதற்குள்
வரலாறு படைத்துவிடு


உன் வீட்டுக் கதவின்
ஒலியைக் கேட்டால்
இதயத்தில் கீரல் விழுந்தது

உன்னை என் கண்கள்
பார்த்து விட்டால்
இதயமே இல்லாமல் போனது

கடல் கரிக்கின்றோமே
எனக் கண்ணீர் விடுவதில்லை
கதிரவன் கொதிக்கின்றோமே
எனக் கவலைப்படுவதில்லை

விருந்துக்கு மருந்து
என் வாழ்க்கைக்குத் துயரம்
உன்னைப் பிரிந்த துயரம்

நட்சத்திரத்தின் ஒளி
கண்ணில் படுகிறது
கைகளில் படுவதில்லை

இருட்டில் வரும்
நிழல் போல
என் வாழ்வில் நீ

உதிப்பது உதித்தே தீரும்
வருவது வந்தே தீரும்
கட்டிட இவற்றுக்கு கயிறுகள் இல்லை

உண்மைகள் உண்மைகளாக ஏற்க
உவமைகள் தேவை இங்கு
உடலுக்கு உடைகள் போல


கட்டாயங்கள்
வட்ட நிலவுக்கும்
அட்டவணைகள்

கண்களைப் பறித்துவிட்டு
கண்ணாடி போட்டு
விடுகின்றார்கள்

கல்லறைக்குப் போனாலும்
காலைப் பிடித்து
இழுக்கின்றார்கள்

வாழ்க்கையை வாழ்க்கையாய்
வாழவிடாமல் இருக்க
கட்டாயங்கள்

கட்டிய கயிற்றினை அறுக்க
ஒட்டிய கைகள்
முயல்கின்றது

இதழினை தொட்டுப் பார்க்க
இமைகள் ஏனோ
முயல்கின்றது

இமைகள் வடித்த கண்ணீரை
இதழ்கள் மட்டும்
உருசித்தது

விட்டு விடுதலை பெற
இன்னும் எத்தனை
வேலிகள்

வேலிகள் ஒவ்வொன்றும் கிழித்தது
உடலின் ஒவ்வொறு
உறுப்பினை

எட்டி அனைத்தையும் தாண்டினாலும்
முடிவில் நிற்பது
கல்லறைதான்


வானத்தில் இருக்கும் வட்டநிலவை
கட்டியிழுக்க கயிற்றினை கேட்கவில்லை

பரந்து விரிந்த பாலைவனம்
சுட்டெரிப்பதற்கு செருப்பினைக் கேட்கவில்லை

குத்தி இருக்கும் முட்களை எடுத்திட
எனது கைகளை மட்டுமே கேட்கிறேன்

பட்டுப் பாயினில் பால்நிலவில் படுத்திட
பக்கத் துணையாய் பாவை உனைக் கேட்கவில்லை

கிழிந்து போன கந்தல் துணியினையே
ஓரம் தைத்து ஒட்டுப் போட்டு
சிறந்ததொரு ஆடையாய் செய்திடவே
உன் சேவையினை கேட்கிறேன்


காதல்

காற்றடித்தால் ஆடும் செடியைப்
போன்றது அல்ல
ஆடும் இலையைப் போன்றதுமல்ல
காலப் போக்கில் கரையும்
கல்லைப் போன்றது மல்ல
எரியும் சூரியனைப் போன்றது

பொட்டல் வெளியில் கோயில் கட்டினேன்
அதற்கு ஐம்பொன்னில் சிலை வேண்டும்
எடுத்துக் கொடுத்தேன் என் இதயத்தை
துவண்ட இதயம் இனியேனும்
தொழுகைக்கு பயன்படட்டும்

துயரத்தின் எல்லையைத் தழுவி
முத்தமிட்டு விட்டு வந்திருக்கிறேன்
துன்பமும் இன்பம், ஆம்
எல்லாம் இதயத்தைப் பொறுத்ததுதான்
இதயமே இல்லாவிட்டால்?

கட்டியணைத்திட காதலி உண்டு
கன்னத்தில் முத்தமிட
குழந்தையும் உண்டு
இருட்டில் - நிழல் கூட
துணைக்கு வருவதில்லை

அகத்தில் துன்பம், முகத்தில் இன்பம்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
என் உயிருடன் உறவு கலவாமை வேண்டும்
படுக்கையில் வீழ்ந்து நேரே
பரலோகம் போக வேண்டும்


சிட்டுக் குருவி

சுற்றித் திரியும் சிட்டுக் குருவி
அதை சிறையில் அடைப்பாரோ
பட்டுப் போன்ற பறவை தன்னை
பாடு படுத்தி டுவாரோ

கண்கள் இருக்கும் இவர்க்கு
கருத்துக்கள் உதிப்பதில்லையோ
செவிகள் இருந்தும் இவர்க்கு
சிந்திக்கத் தெரிய வில்லையோ

விட்டு விடுதலையாக இங்கு
முன்னோர் பாடு தெரியலையோ
கட்டிய கயிறுகளை அறுக்க
பட்ட வலிகள் புரியலையோ

என்று திருந்திடுவார் என
நாட்கள் நகர்ந்ததுவே
மறு பிறவியிலேனும் மாறுவரோ
என மனதிற்குள் முனகியதே

சுற்றிய சுவரைத் தகர்க்க
பட்டுச் சிறகை அடித்ததுவே
சிதைந்தது சிறகே தவறி
சுற்றிய சுவர்களில்லையே

கூரிய அலகைக் குவித்து
குழந்தை போலச் சிரித்ததுவே
இதயம் குளிர்ந்திடுமோ? என
ஏக்கத்தில் பார்த்ததுவே

என்ன பாவம் செய்தோம்
இன்று எங்களை ஏன் இப்படி?
எண்ணங்கள் மாறிடுமோ
என ஏக்கத்தில் பார்த்ததுவே


என் கண்கள் பார்ப்பதும்
என் கால்கள் நடப்பதும்
வாய் பேசுவதும், செவி கேட்பதும்
ஏன் இதயம் துடிப்பதும் கூட
உன் நினைவை நான் சுமப்பதற்காகத்தான்

உறங்கினால் கனவில் உன் முகம்
நினைவில் மட்டும் வர மறுப்பது ஏனோ
நீ வேண்டாம் உன் நினைவு போதும்
கண்களில் நீ தெரிய வேண்டாம்
உன் காலடி மண் பட்டால் போதும்

இது உருவகமில்லை
உருகிய இதயம்
காமம் இல்லை, இது கைக்கிளை

தினம் தினம் உன்னை
மணம் புரிகிறேன்
கனவுகளில் கை கோர்த்து பவனி வருகிறேன்
நினைவுகளில் உன் எதிரே நிற்கவும் அஞ்சுகிறேன்

உன் கண்களின் தீரம்
என் வீரத்தை இழக்கச் செய்கிறது
இறப்புக்கு அஞ்சாத உயிர்
இதயத்திற்கு கெஞ்சுகிறது

பல்லாக்கில் பவனி வரலாம்
பலபேர் வந்து வணங்கலாம்
சிரிப்பு உதட்டில் இருக்கலாம்
சிதைந்து விட்டது அடித்தளம்
இன்னும் ஏன் கட்டிடத்திற்கு அலங்காரம்
காதில்லா ஊசி போன்று
காலம் இன்னும் செல்லிறது

களவு போனதைத் தேடித் தேடி
கண்கள் கூசுகின்றது
கால்கள் சோர்ந்து விட்டது
தன்னம்பிக்கை மட்டும் தலைதூக்கி நிற்கிறது
ஊதி காதுக்காக காத்திருக்கிறது

கால்களே இல்லாதவன் செருப்பைத் தேடுகின்றான்
இல்லாத பாட்டனாரை எங்கெங்கோ தேடுகின்றான்
கட்டாந்தரையினையே கழனியாக்க முனைகின்றான்

இழந்தவைகள் எத்தனையோ
இருந்தாலும் என் மனமோ உன்னை
இழக்க விரும்பவில்லை
இழந்தால் என் இறப்பில் நிறைவு இல்லை


எரிமலைத் தாகம்

தாகம் என்றால் கால்கள்
அடுக்களையை நோக்கிப் போகும்
மோகம் என்றால் கால்கள்
பள்ளியறையை நோக்கி பீடுநடை போடும்

ஆனால் எரிமலைத் தாகம் என்றால்
இதயத்திற்குள் ஏனோ
இரு நகரங்களின் முனகல் சத்தம்

நாகரீகம் காண பல்லாயிரம் ஆண்டுகள்
நகரங்கள் நரகமாக
ஆனதோ சில நிமிடங்கள்

சிதைத்தது சத்தம்
காதுகளை மட்டுமல்ல
பல கோடி உயிர்களையும் தான்
அன்றே அழித்தது இருந்த உயிர்களை
இன்றும் அரிக்கின்றது இருக்கும் உயிர்களை

தேடினேன் எங்கும், ஓடினேன் எங்கும்
அடங்கவில்லை இந்த எரிமலைத் தாகம்
அமைதி இருந்தால் என் தாகம் அடங்குமாம்

கன்னியரும், காளையரும் அம்மணமாய் நிற்கிறார்கள்
கோயில் கோபுரங்களில்தான்
கலையை இரசித்தவர் காலடி மண்ணை
இப்பொழுது காமக் கண்கள்
கற்பழித்துக் கொண்டிருக்கின்றன

இணைந்து நடந்தாலே காதலர் என்கிறார்
ஏனென்று நினைத்துப் பார்த்தேன்
கடற்கரையின் கருமையில்
கைபோட்டுக் கொண்டு இருப்பார்கள்
தோள்களில், கைபோட்டுக் கொண்டு இருப்பார்கள்
வெளிச்சத்திற்கு வந்தவுடன் வினவிப் பார்த்தால்
அனர்த்தத்திற்கு அர்த்தம் கூறுகின்றார்கள்
தங்கள் உறவுக்குக் காதல் என்கின்றார்கள்

எல்லோரும் எங்கள் சகோதர சகோதரிகள்
அதனால்தான் இங்கு என்றும்
பங்காளிகள் சண்டை

நண்பர்களாக இருக்க நினைப்பதே இல்லை
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
என்றோ ஒருநாள் முன்னோர் சொன்னார்
இன்று ஒருவன் உரக்கச் சொன்னான்
சகோதரன்கூட சத்தியமாய் எதிரி

சிந்தனைகள் என்னை சுற்றிக் கொண்டிருக்க
ஏதோ உருவம் என்முன் சென்றது
கடற்கரையின் கருமையை நோக்கி
என் தாயின் வயிற்றில் பிறந்தவன்

வீட்டில் உள்ளே காலடி வைத்தேன்
மாற்றானுடன் மகிழ்ச்சியில் அன்னை
உள்ளுக்குள்ளே உதித்த கோபம்
வாயினில் வந்து விலங்கு போட்டது

வெளியினில் வந்தேன், கண்ணீரும் வந்தது
கவலையுடன் நான் கடவுளை நினைத்தேன்
"ஆட்டுவிப்பவன் நான், ஆடுபவன் நீ
ஆகையால் நீ ஏன் கவலை கொள்கிறாய்
என்னுள் நீயும், எதுவும் அடக்கம்
எனவே நீயும் அமைதியும் பெறுவாய்"
எங்கிருந்தோ ஒலித்தது இக்குரல்
எரிமலைத் தாகம் அடங்கியது அதனால்


கடந்த கால நினைவுகள்
இன்பங்களின் எல்லையைத் தொட்ட
உயிரின் உணர்வுகள்
இப்பொழுது கண்ணின் ஓரம்
கண்ணீர்த் துளிகள் மட்டும்

இன்பத்தின் எல்லை தெரிந்தால்தான்
துன்பத்தின் எல்லையும் தெரியும் போலும்
நிழற்படத்தில் இன்பத்தின் எல்லைகள்
எழுத்துக்களில்
கனவுகளின் கற்பனைக் கோட்டைகள்

இரண்டுமே உள்ளத்தின் பிரதிபலிப்புத்தான்
இதன் அழகு உள்ளத்தைப் பொருத்ததுதான்

கஷ்டங்களைத் தேடிப் போவதில்லை
எனினும் தானே வந்தணைத்துக் கொள்கிறது
சந்தோஷத்தை விட்டுவிட நினைப்பதில்லை
இருந்தாலும் விடைபெற்றுப் போகிறது

வருவதும் போவதும் நின்று
ஒருநாள் நிலைபெரும் என்று
காத்திருக்கிறேன்
நம்பிக்கைதான், இவை
வெறும் நம்பிக்கைதான்

சூரியனை மேகம் மறைக்க முடியாது
ஆனால் இரவு?
சூரியனுக்கே இந்நிலை என்றால்
இந்த .....


உறவுகளின் உண்மைகள்
ஊமைகளாகி விட்டன
கனவுகளுக்கு கருப்பு வண்ணம்
தீட்டப்பட்டு விட்டன
பொட்டல் வெளியாய்
இருந்த இடத்தில்
வானத்தை முட்டும்
கோவில் கட்டப்பட்டது
கட்டிய கோவிலின்
கதவுகள் மட்டும்
மூடப்பட்ட நிலையில்

இதயத்தில் தெய்வம் இருந்தாலும்
அமைதி கோயிலில்தானே
கோவிலைத் திறக்க சாவிகள் இல்லையா
மனம்தான் இல்லையா
பூட்டிய கதவுகள் உடைக்கப்பட வேண்டுமா
இல்லை தானே திறக்கப்படுமா
கேள்விக் குறிகள் பிடிப்பதில்லை
உனது மௌனத்தை ஊமையாக்கி
வார்த்தைகளைத் தூது விடு


மறைந்த சூரியன் உதித்துவிட்டது
கரைந்த சந்திரன்
வளர்ந்துவிட்டது

ஆம் கிணற்றில் விழுந்த தவளை
முக்கி முனகி
மீண்டும் மேலே ஏறிவிட்டது

வெட்டவெளி இனி உலகம்
சிறிய வட்டமல்ல
பச்சை சுவரும்
குளிர்ந்த நீரும் மட்டுமல்ல

மீண்டும் இந்தப்
பரந்த உலகம்
கண்ணில் தெரிகிறது
சுதந்திரம் பெறுகின்றது


புத்தம் புது உலகம்
தன் தலையைத் தூக்கியது
மீண்டும் ஒளிவெள்ளம் உலகைத் தழுவியது
புள்ளினம் பாக்கள் இசைக்கிறது
உலகின் இயக்கம் துவங்கியது

கதிரவன் கதிர்கள் கண்களைத் துடைக்க
எந்தன் உறக்கம் கலைகிறது
உறக்கம் கலைந்த உயிரோ தனது
சன்னல் திறந்து பார்க்கிறது

ஆகா உலகம் அழகியது
ஆகா உலகம் அழகியது

சின்னஞ் சிறார்கள் மண்ணில் ஆட
புழுதிகள் எங்கும் பறக்கிறது
ஆடல் பாடல் செய்தே களித்து
சிறுவர்கள் என்றும் மகிழ்ந்திடவே (ஆகா)

அமைதியுடன் வரும் ஆற்றின் அலையில்
அழகாய் நீந்தி மகிழ்ந்திடவே
சோலையின் நிழலில் சுகமாய் அமர்ந்து
களிப்புடன் கனவில் இருக்கையிலே (ஆகா)

முழங்கால் வரையில் சேற்றில் நின்று
வயலினை உழுது நாற்றுகள் நட்டு
அழகாய் வளர்ந்த நெற்கதிர் பெண்கள்
காற்றில் அசைந்து நாணம் கொள்ள (ஆகா)

மகிழ்வுடன் மாலையில் ஆடிப்பாடி
ஆற்றில் வந்து குளித்துக் களித்து
வனப்புடன் விளங்கும் என் ஊர்ப்பெண்கள்
நடக்கையில் ஓரமாய் ஒளிந்தே பார்த்தால் (ஆகா)

விறகுகள் தன்னை அடுப்பில் அடுக்கி
நெருப்புடன் தோழமை கொண்டே சமைக்க
தலையைத் தூக்கிப் பார்க்கும் அந்த
சோறும் பானை ஓரம் வழிய (ஆகா)

உண்டு முடித்து வெட்ட வெளியில்
வானத்தை மல்லார்ந்து பார்த்துப் படுக்க
கண்களைச் சிமிட்டி தன்னிடம் அழைக்கும்
விண்ணின் மீன்கள் தன்னைப் பார்க்க (ஆகா)

மேகத்தில் இடையில் நீந்தி மகிழ்ந்திட
தன்னிடம் அழைக்கும் வட்ட நிலவு
அவளது முகத்தின் வெண்மை ஒளியோ
இரவின் விளக்காய் உலகிற் குதவ (ஆகா)


வாயினில் வார்த்தைகள் வெவ்வேறாய் வந்தாலும்
இதயத்தின் துடிப்போ லப் டப் ஒன்றுதான்
வெளியில் என் உருவம் வெவ்வேறாய் தெரிந்தாலும்
உள்ளுக்குள் என் வடிவோ உன் காதலன் என்பதுதான்

கண்ணிமைக்கும் பொழுதினிலே பிறந்தது இக்காதலல்ல
கண்டவுடன் வருவது காதலுக்கு அழகுமல்ல
வாழைதனில் பதித்திட்ட ஆணிதனை எடுத்திடலாம்
அரசமரத்தில் அடித்திட்டால் எளிதாக முடிந்திடுமோ

காலத்தால் வளர்ந்த எந்தன் காதலதின் தோல்வியது
மாயமாய் மறைந்து போன கண்ணீரின் குழந்தையிது
கருவுற்ற பூக்கள் எல்லாம் காய்கனிகள் தருவதில்லை
காதலித்த என் உயிரோ கைப்பிடிக்க நாதியில்லை

ஏற்பாயோ எனை நீயே என்று நான் நினைக்கவில்லை
ஏற்பதற்கோ விலக்குதற்கோ உனக் கென்னிடம் ஏதுமில்லை
எங்கோ இருப்பவன் நான், உன் பொருட்டு நான் இதுதான்
என்னுள் இருப்பவள் நீ, என் பொருட்டு நீ இதுதான்

உயிரை மாய்த்திடவே நான் எனக்குள் முடிவு செய்தேன்
என் உயிரை நான் தேடி எங்கெங்கோ அலைந்திருந்தேன்
உனக்கும் தெரியாமல் உன்னுள் ஒளிந்து கொண்டு
உவகையில் ஆடிப்பாடி களித்திருக்க நானும் கண்டேன்

உன்னுயிரைத் தரமாட்டாய் என்பது நான் அறிவேன்
எனதுயிரைத் தருவாயோ? எனநானே கேட்கின்றேன்
இப்பிறப்பை முடிக்க நீயும் சந்தர்ப்பம் தான் தருவாய்
மறுபிறப்பில் உன் மகனாய் பிறந்திடவே அருள் தருவாய்


கடல்

என்னுள் பல உயிரை சொந்தமாய் சுமந்திட்டாலும்
என் உயிரைத் தொலைத்துவிட்டு என் உயிரை நான் தேடி
கையினை நீட்டி எந்தன் காதலியை கொஞ்சக் கெஞ்ச
கைக்கிளை உனது காதல் என்று நிலமகள் உறைத்தாள்

தண்ணீரில் மீன் அழுதால்? நல் மழையாய் அழுதேன்
தடங்கல் இருந்தால்தான் வேகம் குறையும் என்பார்
எந்தன் உதிரம் மட்டும் உன் மனப் பாறையில் மோதுவதேன்
எப்படியும் கரைத்திடுவேன் என உள்ளுக்குள் முனகுவதேன்

சந்தங்கள் சலனங்கள் வெளியிலே தெரிந்திட்டாலும்
உள்ளுக்குள் அமைதியாய் உன்னை மட்டும் நினைப்பது ஏன்
உன்னுள்ளே உள்ளவர்கள் ஓரமாய் என்னை மிதித்திட்டாலும்
என்றும் எனது உதிரத்தால் பாதபூசை செய்திடுவேன்

நான் சுமக்கும் உயிர்கள் தனை உன்னவர்கள் உண்டாலும்
நீ கொடுக்கும் கழிவுகளை நான் சுகமாய் ஏற்பேனே
என்னை நீயும் விலக்கிவிட்டு ஏளனமாய் நினைத்தாலும்
என்றும் நீ என்னவள்தான் என நானும் நினைத்திடுவேன்


இரவுக்குப் பின்னே உதயம்
கடும் புயலுக்கு பின்னே அமைதி
என் வாழ்வில் மட்டும் துயரம்
துயரத்தைத் தொடர்வதும் துயரம்

ஒரு குழந்தையிடம் என் உறவு
அந்த சிலநாள் வாழ்வில் மகிழ்வு
உறவுக்குப் பின்னே பிரிவு
பிரிவைத் தொடர்வதும் பிரிவு

காதலி என்பதும் உண்டு
கனவில் சிரித்தாள் அன்று
கலங்கரை விளக்கமாய் நினைத்தது
கரைந்தே மறைந்தது இன்று

உறவுகள் என்பதும் பொய்தானோ
காணும் காட்சிகள் யாவும் பொய்தானோ
கனவுலகில் நான் வாழ்வேனோ
என் கவலைகள் யாவும் தீர்ப்பேனோ

எண்ணம் யாவும் நிறைந்தவளே
எரிக்கும் கனவுகள் கொடுத்துவிட்டு
எந்தன் இதயம் உருக வைத்து
என்னை இனும் ஏன் வாட்டுகிறாய்

உன் கண்களைத் திறந்து பார்ப்பாய்
என் கவலைகள் யாவும் தீர்ப்பாய்
உன்னுள் எனையும் சேர்ப்பாய்
என்னுள் அமைதியும் தருவாய்


மழலையைத் தேடி

சின்னஞ் சிறு உயிரே எந்தன்
கண்ணின் கண்மணியே
எங்கே நீ இருப்பாய் என்
எண்ணம் அங்கிருக்கும்

கண்ணில் தெரியவில்லை உருவம்
கருத்தில் உள்ளதம்மா
காலம் போதவில்லை எந்தன்
கனவும் கிளைத்ததம்மா
உறவென்று நீயுமில்லை இங்கு
உயிரும் வாடுதம்மா
உன்னை நினைக்கையிலே உள்ளம்
உவகையில் இருக்குதம்மா

பலபேர் வந்தனரே வாழ்வில்
பலரும் போனாரே
நீ மட்டும் நிலைத்து விட்டாய் கனவில்
மழலையாய் இணைந்து விட்டாய்
போனது திரும்பிடுமா? நாம்
சேரும் நாள் வருமா?
காலங்கள் மாறிடுமா? நம்
கவலையும் தீர்ந்திடுமா?


இன்று நான் விழித்த பயன்
உன் கால்களைக் கண்டதும் நிறைவடைகிறது
உலகில் நான் பிறந்த பயன்
உன்னுடன் கனவுகளில் கைகோர்க்கும்போது நிறைவடைகிறது
கடலை அடைந்த காட்டாற்று வெள்ளம்
சற்றே எட்டி அந்த
வட்ட நிலவை முட்டப் பார்க்கிறது
முடியவில்லை என்றாலும் முயல்வதில் தவறில்லை

பலநாள் இரவு தனிமையில் இருந்தோம்
உன்னுள் நானே எனநான் நினைத்தேன்
ஏனெனில் என்னுள் நீயே இருந்தாய்
கனவுகள், கடல் மணலில் கோட்டைகள்
கானல் நீரில் தண்ணீர் இல்லை
உந்தன் நெஞ்சில் காதல் இல்லை
வாழ்க்கை வாழ விருப்பம் இல்லை

வெருப்பது உன் உரிமை, அதனால்
நீ என்னை வெறுத்துக் கொண்டிரு
விரும்புவது என் உரிமை, அதனால்
நான் உன்னை விரும்பிக் கொண்டிருக்கிறேன்


நீயிருந்தால்

சிலுசிலு சிலுவென வீசும்காற்று
சில்லென வீசுதடி - இங்கு
கலகல கலவென சிரிக்கும் சிரிப்பு
கள்வெறி ஊட்டுதடி

பளபள பளவென மின்னும் கன்னம்
மிதமாய் இருக்குதடி - சிறு
செவ்விதழ்(கள்) சிரிக்க சலங்கைகள் அதிர
சிந்தனை சாயுதடி
தனிமையில் இருவரும் உறவுகள் இருக்கையில்
வாழ்க்கை இனிக்குதடி - மனம்
கவலையை மறந்து உன்னுடன் கலந்து
எங்கோ மிதக்குதடி

உள்ளங்கையில் என் இதழ் வைத்தால்
உலகம் மறக்குதடி - உன்
சிறுஇடை தழுவ செவ்விதழ் சேர
சொர்க்கம் தெரியுதடி
உறவுடன் கலந்து உன்னுடன் இருந்தால்
உன்மத்த மாகுதடி - என்
கனவிலும் உன்னைப் பிரியா நிலையில்
காலங்கள் ஓடுதடி


கண்ணே நில்லு

காதல் ஏனோ உந்தன் நெஞ்சில் மலர மறுப்பதேன்
கண்ணில் ஏக்கம் உயிரில் பாவம் சுமந்து தவிப்பதேன்
மறைத்துவிட்டால் உன் நெஞ்சை ஒளித்து விட்டால்
கவலை கொள்கிறேன் நான் என்னை வெறுக்கிறேன்
இவ்வுலகினிலே இன்னும் இந்த உயிரெதற்கு
இவ்வுடலினிலே உன் நினைவினை சுமப்பதற்கு
என் இரவும் விடிவதற்கு, கருக்கலிலே விழிப்பதற்கு

காலம் செய்த விதியில் நானும் களித்துச் சிரிக்கிறேன்
காதல் தந்த சோகம் தீர அழுது முடிக்கிறேன்
உன் உறவினுக்கு என் உயிரும் அழுகிறதே
என் உடலினிலும் வியர்வை வடிகிறதே
எனது இதயம் துடிக்க மறந்து
மண்ணில் வீழும் நாள்தான் என்று

கம்பன் கூட காதல் சோகம் எழுத முயல
வார்த்தை தேடி ஊரில் அலைந்தான் - காணவில்லையே
என் கண்களினை அவனும் காண்கின்றான்
என் கவலைகளை கண்களில் படித்துவிட்டான்
உணர முடிந்த உணர்வுகள் எல்லாம்
அரைகுறையாய் பிறந்தது இன்று (கண்ணே)

இதயத்தின் துடிப்பில் உடலும் அதிர
கால்கள் ஏனோ தாங்கவில்லை
கண்களின் துடிப்பில் கண்ணீர் வழிய
கைகள் ஏனோ துடைக்கவில்லை
என்னை நீயும் வெறுப்பதனால்
உலகம் ஏனோ பிடிக்கவில்லை
எண்ணத்தில் உள்ள கருத்துக்களை
கைகள் மட்டும் எழுதுவதேன் (கண்ணே)

எந்தன் உயிரே உயிரின் ஒளியே
இன்னும் எனைஏன் வாட்டுகிறாய்
கருத்தினில் கொண்ட காதலை நீயும்
திரைகள் போட்டு மூடுகிறாய்
காதல் பாதை காட்டாறு அது
தடைகள் போட்டால் கேட்காது
(என்) இதயத்தின் கோயில் தெய்வமெது
உன் நிழலும் நினைவும் சேர்ந்ததது (கண்ணே)

கண்ணே நில்லு, என் கண்களைப் பாரு
காதல் சோகம் தீருமா
காதல் கொண்ட காளை என் மனது
தனிமையில் என்றும் வாடுமா
எனைநீ இன்னும் ஒதுக்கியே போனால்
எந்தன் உயிரும் தாங்குமா


சத்தியம் பேசுதடி என் மனது - நித்தம்
சத்தியம் பேசுதடி
உன்னைக் காண்கையிலே என் மனதும் எங்கோ
மிதந்து லயிக்குதடி

கண்களில் காதலடி நித்தம் - வளரும்
கனவில் உறவுமடி
கண்களில் ஈரமடி காணாமல் - கண்ணின்
ஓரம் ஊருகுதடி

வாழ்க்கைப் பாதையடி எனது - வாழ்க்கை
பாலை வனங்களடி
சோலைவன மாகுதடி என்பின் - அது
சோலை ஆகுதடி

கானல் நீரினிலே உன் நிழலைக் காணவும்
கால்கள் நின்றதடி
நீயும் விலகியே நின்றுவிட்டாய் - சற்றே
சோகம் சூழ்ந்ததடி

மேவிய உறவுகளும் மழலைகளும்
நண்பரும் உயிரினமும்
கூறாத ஆறுதல் கூடுதடி - உன் கண்கள்
ஆறுதல் கூறுதடி

குழந்தையை பிரிந்த நானும் - தனிமையில்
அழுது புலம்புகையில்
உறவுடன் நீயும் வந்தால் - உள்ளுக்குள்
இன்பம் பொங்குதடி

வானத்தைப் பார்த்த பூமி - மழையில்
நறுமணம் வீசுதல் போல்
உன்னை நானும் கண்டால் - உயிரும்
அமைதியும் கொள்ளுதடி

உன்னைக் காண்பதற்கே - நாளும் நான்
தவமும் இருக்கையிலே
தெய்வமாய் நீ வருவாய் - அன்புடன்
குறைகளைத் தீர்த்திடுவாய்


உனது முத்தம் உள்ளங்கை வழியே
எனது கன்னத்தில் பதிந்தது
வரிவரியாய் ஓவியம் தீட்டியது
முத்தம் பெற்ற கன்னம்
கர்வத்தில் வீங்கி இருந்தது
மற்றொன்றோ ஏக்கத்தில் ஏங்கி இருந்தது

இதில் கூடவா ஓரவஞ்சனை
நான் என்ன பாவம் செய்தேன்
ஏங்கியது ஏக்கத்தில் முனகியது
சமாதானம் சொல்லக் கண்
கண்ணீரால் வருடி விட்டது
இதழ்கள் ஆறுதல் சொன்னது

இரவின் மயக்கம் உலகை மூடுது
உனது மயக்கம் உயிரை வாட்டுது
உயிரில்லா ததொரு உடலும் வாழுது
உனது உறவை உயிரோ தேடுது

கண்ணின் ஓரம் ஈரம் ஊருது
கால்கள் காதல் பாதை தேடுது
நெஞ்சில் ஏனோ சோகம் சூழ்ந்தது
நேசம் கொண்டு நாசம் ஆனது

உனது பார்வை ஒளியைத் தந்தது
உயிரோ ஒளியில் மயங்கி விழுந்தது
உனது உடலுள் உயிரும் உறைந்தது
எனது உடலோ கதறி அழுதது

கண்கள் கண்களைக் காண விழையுது
கலக்கம் கொண்டு கலங்கி நின்றது
கரங்கள் உன்னைத் தழுவ நினைக்குது
காலம் செய்த விதியில் சிரிக்குது

மனதில் மகிழ்ச்சி மறைந்து விட்டது
இரவும் பகலும் கனவில் வாழ்ந்தது
உதிரம் உறைந்து ஓட்டம் நின்றது
உயிரோ இன்னும் உன்னுள் உறங்குது


எனது மழலையின் நிழல் வடிவம்
என் கண்ணெதிரில் நிஜவடிவாய் நின்றது
ஆம், சிரிக்கும் மழலையாய் என்முன் நின்றது
கிள்ளிப் பார்த்தேன், கனவல்ல
நிச்சயம் நிஜம்தான்

மண்ணில் விழுந்தேன், உயிர் வந்தது
நடைப் பிணமாய் இருந்த நான்
இன்று மீண்டும் உயிர்த்தேன்

இயேசு ஒருமுறை மரித்து உயிர்த்தார்
நான் உன்னைப் பிரிந்தால் மரித்து
கண்ணால் கண்டால் உயிர்த்தேன்

வசந்தத்தை தொடர்வது கோடையானது
உலகிற்கு மட்டும்தானா
என் வாழ்விலும் தான்

எவரையோ கணவன் என்பார்
எவரையோ மனைவி என்பார்
நீ என் குழந்தை என்றால்
ஏனோ அவரும் சிரிப்பார்

உடல்கள் உடலைத் தேடும் இடத்தில்
உயிரின் உறவைத் தேடியதால்
அம்மணமாய் அலையும் ஊரில்
கோவணம் கட்டிய வனானேன்

கங்கையும் கரிக்கவில்லை, காவிரியும் கரிக்கவில்லை
பின்ஏன் கடல் மட்டும்
அது கடற்கரையில் வடித்த கண்ணீரால்

உடல் வெட்டப்பட்டால் செந்நீர், என்
உயிர் வெட்டப்பட்டால் கண்ணீர்
விதி, இதுவே என் வாழ்வின் நியதி

நிஜமும் பிரிந்தது, எனது உயிரும் அகன்றது
எண்ணம் நிலைத்தது, உடலும் சரிந்தது
சிரித்தேன், மகிழ்ந்தேன், நடைப்பிணமானேன்
மீண்டும் ஒருநாள் நிச்சயம் உயிர்ப்பேன்


நிலவின் வழியில் நான்

தனிமையில் நடந்தேன்
சுற்றிலும் பொட்டல்வெளி
எங்கும் இருட்டு எங்கும் இருட்டு

திடீர் என்று முதுகில் வெளிச்சம்
திரும்பிப் பார்த்தேன்
கருத்த வெளியில் உதித்தது நிலவு

மீண்டும் நடந்தேன், மீண்டும் நடந்தேன்
தொடர்ந்தது நிலவு
இன்னும் எந்தன் முதுகில் வெளிச்சம்

சற்றே நேரம் செல்லச் செல்ல
அருகே வந்து முகத்தைப் பார்த்தது
என்னை அதுவோ தொடர்ந்து வந்தது?

மீண்டும் நடந்தேன், மீண்டும் நடந்தேன்
தொடந்து வந்தது, ஒளியினைத் தந்தது
பாசம் அதன்மேல் கொள்ளவும் வைத்தது

தனிமையில் எனக்குத் துணையென நினத்தேன்
சற்றே என்முன் வழிகாட்டிச் சென்றது
மீண்டும் நடந்தேன், நிலவைத் தொடந்தேன்

வேகமாய்ச் சென்றது மறைந்திட முனைந்தது
வேகமாய் நடந்தேன், ஓடவும் செய்தேன்
முன்னே சென்றது மறைந்தே விட்டது

இங்கு இப்போது வெட்ட வெளிச்சம்
முட்களும் புதர்களும் தெளிவாய்த் தெரிந்தது
அழகு மட்டும் எங்கோ ஒளிந்தது

கவலையில் வீழ்ந்தேன், தொடந்து நடந்தேன்
கால்கள் களைத்தது, வானமும் கருத்தது
மெதுவாய் எந்தன் மனமும் அழுதது

உள்ளம் மட்டும் நிலவை நினைத்தது
கால்கள் மட்டும் தொடந்து நடந்தது
கீச்கீச் சென்று இனிதாய் சத்தம்

முகத்தை சற்றே மறைத்தே வந்தது
மீண்டும் தொடந்து முன்னே சென்றது
என்னைக் கண்ட வெட்கமென நினைத்தேன்

நானே நின்றால் நிலவும் நிற்கும்
என நான் நினைத்தேன், கால்கள் நின்றது
முன்னே சென்ற நிலவோ மறைந்தது

உதிப்பதும் மறைவதும் எனது உரிமை
வளர்வதும் கரைவதும் எனது கடமை
உன்னிடம் இல்லை எந்தன் உறவு

எங்கிருந்தோ கேட்டது இந்தச் சத்தம்
கண்களின் ஓரம் உதிரத்தின் ஓட்டம்
மீண்டும் வெளிச்சம் சுற்றிலும் முட்கள்

இன்றும் நடந்தேன், இனியும் நடப்பேன்
இன்றும் வந்தது அந்த நிலவு
இருந்தும் எனது பாதையோ இருட்டு


அம்மா உந்தன் காலடி சேர
ஆயிரம் முறை துதித் திட்டேனே
இன்னும் நீயே விலகியே சென்றால்
என்ன செய்வேன் என்னுயிரே சொல்

உன்னை விட்டுப் பிரிந்திட என்னால்
என்றும் வாழ இயலா - அதனால்
என்னை விட்டு வாழ்ந்திட உன்னால்
என்றும் இருக்க இயலா - அதனால்
உண்மையை நீயே உரைத்திடு கலையே
உயிரின் உயிராய் கலந்தே சிரித்திடு

பாழும் நினைவு உன்னைச் சுற்றி
பரிதவித்து கவலையில் சுழன்று
இரவும் பகலும் இன்னல் பட்டு
உடலில் உள்ள பற்றும் அற்று
வலையில் வீழ்ந்த மீனாய் துடித்து
கதறியே அழுது கண்ணீர் விட்டது

நீருள் மீனும் அழுவது தெரியா
என்னுள் உள்ள இதயமும் தெரியா
உன்னுள் உள்ள காதலும் அறியா
உயிரே என்னை எவரும் அறியார்
எழிலே, சிலையே, செந்தாமரையே
நீயும் இன்னும் அவர்போல் தானோ?

உதிரம் நிறைந்த உடலில் உந்தன்
நினைவைக் கொண்டு கோயில் கட்டி
என்னுள் உன்னை முதலாய் ஆக்க
எந்தன் இதயம் ஒலித்தது உன்பெயர்
சிலையும், கோயிலும் தெய்வத் திற்கல்ல
நினைக்கும் இந்த உயிரின் உணர்வுக்கு

உண்மையை உறைத்தது எனதுயிர் என்று
என்றோ ஒருநாள் புரிந்திடும் உனக்கு
அன்னாள், திருநாள், பெருநாள், என்நாள்?
எண்ணம் கலைந்து, எனதுயிர் சோர்ந்து
மூச்சும் நின்று, இதயம் மறந்து
மண்ணில் வீழ்ந்திடும் பொன்னாள் அன்னாள்

இறந்ததும் இறந்திட உடலே அல்ல
உயிரின் உயிராய் உறைந்திட்ட உணர்வு
கால்கள் பாதையைத் தேடியே போகும்
உயிரோ உந்தன் காதலைத் தேடும்
எண்ணம் எங்கும் நிறைந்த இறையே
உன்னோ டெந்தன் உயிரும் கலக்கும்


சோகத்தைப் போக்கிவிடு அல்லால் என்னை
சூளையில் போட்டு விடு
இன்முகம் காட்டிவிடு அல்லால் எந்தன்
இரவினை போக்கி விடு
உன்னுடன் சேர்த்துவிடு அல்லால் எந்தன்
தன்மையை மாற்றி விடு
கண்களில் பேசிவிடு அல்லால் எந்தன்
காதலைச் சாய்த்து விடு

உயிரினைச் சுமந்திருந்தேன் இன்று முதல்
உந்தன் நினைவினைச் சுமந்திடுவேன்
கனவினில் வாழ்ந்திடுவேன் இன்று முதல்
கவலையில் லாதிருப்பேன் - என்றும்
களைப்பின்றி நானிருப்பேன் உந்தன்
காதலில் நான் களிப்பேன்

பிள்ளைகள் பெற்று இங்கு அதனைப்
பேணியே நான் வளர்ப்பேன்
கலையுடன், மகிழ்வுடனே மற்றும்
மதியுடன், பலமுடனே
நிலையுடன் காலமெல்லாம் வாழும்
கவிதையை நான் வளர்ப்பேன்

காதலில் வீழ்ந்து விட்டேன் - உந்தன்
காலடி நான் கிடப்பேன்
சின்னக் காலடி பார்த்திருந்தேன் - எந்தன்
சிந்தனை சாய்ந் திருந்தேன்
சீரிய மூச்சுமது மெதுவாய் இன்று
சுரங்களும் குறையக் கண்டேன்
மெதுவாய் முனகிடவே இதயம் இன்று
மறந்தே நின்றதடி
பவித்திரம் பெறாதிங்கு சின்னஞ்சிறு
சிற்றுயிரும் பிரிந்ததடி


சின்னச் சின்ன காலடி வைத்து
   சிரித்து மகிழும் செல்லக் கிளியே
சற்றே எந்தன் நெஞ்சில் சாய்ந்து
   உவகை கொள்ளும் எந்தன் கிளியே
உன்னை ஏனோ என்னை விட்டு
   பிரித்து விட்டார் செல்லக் கிளியே
தெய்வத் திற்கும் ஒருகண் ஓரம்
   என்ன செய்வேன் எந்தன் கிளியே

முன்னே சின்னக் காலடி வைத்து
   தயங்கித் தயங்கி என்னிடம் வந்து
மற்றவரை விலக்கியே விட்டு
   தோள்கள் சேர்க்கும் செல்லக்கிளியே
அன்பு கொண்டு ஆசை கொண்டு
   பாசம் கொண்டு பரவசம் கொண்டு
வாழ்ந்த காலம் போனது என்று
   கவலை கொண்டேன் எந்தன் கிளியே

உன்னைப் பிரித்து உவகை கண்டார்
   உன்னைப் படைத்த உந்தன் தந்தை
நம்மை என்றோ சேர்த்தே வைப்பார்
   தெரிந்தால் சொல்லு செல்லக் கிளியே
பிரித்து விட்டால் மறப்போம் என்று
   நமது உறவைப் பிரித்தே இன்று
கற்பனையில் எண்ணம் கொண்டு
   காலம் கழித்தார் எந்தன் கிளியே

பிரிக்கப் பிரிக்க பிரிந்தே செல்ல
   இது பொருளோ, ஜடமோ அல்ல
உயிரின் உள்ளே வளரும் உறவு
   என்பது அறியார் செல்லக் கிளியே
தெரிந்தால் அவரும் பிரித்திட மாட்டார்
   தவறு என்று தெரிந்து செய்யார்
அவர் பிழையோ அறியாப் பிழையே
   என்றே நினைத்திடு எந்தன் கிளியே

கண்களில் சுற்றிப் பார்த்தே இங்கு
   பதுங்கிப் பதுங்கி அருகே வந்து
எந்தன் தோளை சேர்த்தே அணைக்க
   கண்ணின் ஓரம் ஈரம் கசிய
பிஞ்சுக் கைகளில் கண்களைத் துடைத்து
   முத்தங்களை வாரியே கொடுத்து
உயிரின் உயிராய் என்னுள் கலந்து
   உறைந்து விட்டாய் எந்தன் கிளியே


உடலைத் தவிர்த்து உள்ளத்தை நோக்குதலே காதல்
நான் உன் உயிரைப் பார்க்கிறேன்
உடலை அல்ல, நான் உன்னைப் பார்க்க வேண்டாம்
ஏன்? உன் உயிர் என் உடலில்

அடிக்கிற கைதான் அணைக்கும், ஆனால்
உதைக்கிற கால்தான் மிதிக்கும்
விரும்பு, என்னை மிதிக்கவாவது விரும்பு

வைரத்தை பட்டை தீட்டலாம்
வைரத்தையே தீட்டிடக் கூடாது
முனிவர்கள் தங்கள் உணர்வை அடக்கலாம்
ஆனால் மூர்ச்சையை அடக்கக் கூடாது

பணமும், பகட்டும், பட்டுடையும் வேண்டாம்
உண்ண உணவும், உடுக்க உடையும்
ஒதுங்க இடமும், துணைக்கு உந்தன்
நிழலும், நினைவுகளும் மட்டும் போதும்

உன் இதயம் உள்ளே ஒளிந்திருப்பதால்தான்
என் உயிரும் உன்னுள் உறைந்திருப்பதால்தான்
உன் வார்த்தைகளும் மௌனமாய் ஒளிந்திருக்கின்றதோ?

ஒருகை நீள்வதை ஒருகை தடுத்தது
உதடுகள் ஒளித்தது, விழிகள் தோற்றது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்தது
துயரைத் தவிர்த்து மகிழ்வில் மிதந்தது


மேகங்களே என்னை அழைத்துச் செல்லுங்கள்
என் கண்மணியிடம் என்னைக் கூட்டிச் செல்லுங்கள்
பிரிவாலே அழுது அழுது என் கண்ணீரும் நிரம்ப
உங்கள் வேலைக்குதவும் எனக்கு நீங்கள் உதவுங்கள்

பிரிந்து சென்ற குழந்தை அது
கதறி அழ இயலாமல் உள்ளுக்குள்ளே உருகி உருகி
துயரத்தில் வீழ்ந்ததற்கு உதவிடவே
என் கண்மணியிடம் என்னைக் கூட்டிச் செல்லுங்கள்

உடலை விட்டு உயிர் சென்று திரும்பிவர இயலாமல்
உள்ளுக்குள்ளே அழுதுகொண்டு வெளியினிலே சிரிப்பதுபோல்
இருக்கும் எந்தன் குழந்தைக்கு உதவிடவே
என் கண்மணியிடம் என்னைக் கூட்டிச் செல்லுங்கள்

பலர்மேலே பாசம் வைத்தும் இன்னும்
பரிதவிப்பு அடங்காது தன்குழந்தை தான்தேடும்
நொந்த எந்தன் மனதிற்கு உதவிடவே
என் கண்மணியிடம் என்னைக் கூட்டிச் செல்லுங்கள்


தத்தி தத்தி நடந்து வந்து
   தாவி எந்தன் தோள் சேர்த்து
அன்பு கொண்டு இனிக்கப் பேசும்
   ஆசைகொண்ட எந்தன் குழந்தை
குவிந்த கன்னம், செவ்விய இதழ்கள்
   சின்னப் பற்கள், சிரிப்புச் சொற்கள்
சிந்தை மறக்கும் இனிய நேரம்
   சின்னக் குழந்தை சிரிக்கும் நேரம்

தூங்கும் பொழுது காலில் புரண்டு
   கைகள் இரண்டால் என்னை அணைத்து
அன்பு கொண்டு அமைதியும் கொண்டு
   உறங்கும் குழந்தை எந்தன் குழந்தை
சின்ன இதழ்கள் களிப்பில் சிரிக்கும்
   விழியின் ஓரம் ஈரம் சுரக்கும்
எந்தன் உயிரும் உன்னிடம் என்று
   உள்ளுக்குள்ளே இதயம் முனகும்

கயிற்றை அறுத்தது காளைகள் இன்று
   பறந்து சென்றது பறவைகள் இன்று
இருண்டு விட்டது வாழ்வும் இன்று
   எந்தன் உயிரும் பிரிந்தது இன்று
தடுக்கும் அணையினில் நீரும் சேரும்
   பிரிந்த உயிர்களில் பாசமும் ஊரும்
பிரிந்த குழந்தை என்கை கோர்க்கும்
   நாளின் வரவை விழிஎதிர் பார்க்கும்

காலம் கடந்தது, உடலும் இறந்தது
   கல்லும் மண்ணும் உடலைத் தின்றது
புழுவும் பூச்சியும் நன்றியைச் சொன்னது
   பல்லுயிர்க் கின்று உணவும் ஆனது
மீண்டும் பிறந்தால் உன்னிடம் பிறப்பேன்
   உரிமை கொண்டு உறவுடன் வாழ்வேன்
எந்தன் குழந்தைக்குக் குழந்தை ஆவேன்
   எனது பிறப்பை நிறைவுடன் முடிப்பேன்


மௌனம்

உனது வார்த்தைகள்
என்னைக் காதலிப்பதாகக் கூறத்
தவித்துக் கொண்டிருக்கின்றது
இருந்தாலும் உத்தரவுகள்
இதயத்திலிருந்து வருவதற்கு
வழியினைத் தேடிக் கொண்டிருக்கின்றது

உன்னைத் தடுப்பது நீயாகவும் இருக்கலாம்
ஒளிப்பது காதலுக்கு அழகல்ல
ஒதுங்கிச் செல்வதற்கு
இது ஒருதலைக் காதல் அல்ல
மௌனம் பாசத்தை வளர்க்கலாம்
ஆனால் வார்த்தைகளால் மட்டுமே
நமது உறவை வளர்க்க முடியும்

உனக்குள் உள்ள சிறையை உடைத்துவிடு
உனதிரு கைகள் சிறகுகளாகட்டும்
இன்ப உலகம் நமது காலடியில்
இதில் இருப்பதும், வெறுப்பதும்
உனது விருப்பம், உனது எண்ணம்
ஓங்கிய எனது கைகள் இப்பொழுது
ஏந்த ஆரம்பித்துள்ளது, உனது
காதலுக்கு ஏங்க ஆரம்பித்துள்ளது

கண்ணின் ஓரம் ஒரே பிசுபிசுப்பு
கண்ணீரோ என்று துடைத்தேன்
கைகளில் சிவப்பு நிறம்
இப்போதுதான் தெரிகிறது
வடிவது கண்ணீர் அல்ல
கொட்டுவது உதிரம் என்று

நீ என்னை வெறுக்கின்றாய் என்றால்
என்னைக் கொன்றுவிடு
மரணம் உன்வழியே வந்தால்
நான் சொர்கம் அடைவேன்
நீ என்னை விரும்புகிறாய் என்றால்
என்னுள் நீயும் கலந்துவிடு
வாழ்க்கை உன் வழியே வந்தால்
சொர்கம் என்னை அடையும்


காதலிக்கின்றேன்

காற்றின் வேகத்தில்
கருங்கல்லே கரையும் பொழுது
உன் கண்களின் வெப்பத்தில்
என் இதயம் இளகியதில் வியப்பில்லை
எரிப்பது உன் கடமையானால்
எரித்து விடு என்னை
உனக்கு என்னால் இதிலாவது
உதவ முடிவதை எண்ணி
மகிழ்ச்சி அடைவேன்
எரிப்பது உன் கடமை எனில்
இனி எரிவது என் கடமை

நடப்பது கால்கள், அதனை
நடக்க வைப்பது மனம்
இயங்குபவன் நான், என்னை
இயங்க வைப்பது நீ
இனி என் இயக்கம் என்ன
இறந்தாலும், காரணம் நீதான்
ஏனெனில் நான் உன்னைக் ........


ஒவ்வொன்றாய்

எனது கண்களை இழந்தேன்
இருட்டில் கைகளின் உதவியால்
தடவித் தடுமாறி நடந்தேன்
கைகளும் போனது, விதி
கால்கள் இப்பொழுதும்
தடங்கித் தடுமாறி நடக்கிறது
கால்களும் இழந்தேன், இன்னும்
இந்த உயிர் உடலுடன்
ஊடலும், கூடலும் கொண்டு
உறவாடிக் கொண்டிருக்கிறது
என் உயிரின் மோகம் தீரும்வரை
எனது சோகமும் தீரப்போவதில்லை


தொலைந்ததைத் தேடி

தனிமையில் வந்து தனிமையில் சென்று
   தனிமையில் புலம்பும் உயிர் எதற்கு
இரவும் பகலும் இணைந்த இடத்தில்
   இன்னும் இந்த உயிர் எதற்கு

நண்பன் என்றும் பகைவன் என்றும்
காதலி என்றும் குழந்தை என்றும்
இல்லா உலகில் எதற்கிந்த உயிரோ
பற்றுதல் இல்லா பயிர் என்ன பயிரோ

காலையே சுற்றி வந்த குழந்தை
உலகின் சுழற்சியில் எனையே பிரிந்தாள்
எட்டியே நின்று என்னையே பார்த்த
காதலி அவளோ கைவிட்டுப் போனாள்
என்னுள் நிறைந்த என்னுயிர் நண்பன்
என்னை விட்டு மேலூர் போனான்

கடற்கரை மணலில் பாதங்கள் தேடியே
என்னடி எண்ணிக்கை உயர்ந்தே போனது
இருட்டை விலக்க முயன்ற கைகள்
இதயத்தை இழந்து ஏங்கித் தவித்தது


கண்ணீர்ப் பூக்கள்

இதயத்திற்குள் ஏதோ முனகல் சத்தம்
வெளியில் தெரிவதில்லை உதிரத்தின் ஓட்டம்
வெட்டப்பட்ட இடத்தில்
   வெளிவரும்போதுதான் தெரியும்

தனிமையில் அமர்ந்தேன்
வருடங்கள் பின்னோக்கிச் சென்றன
தந்தையின்றி, தாயுமின்றி
நண்பரின்றி, உற்றார் உறவினரின்றி
நானும் அலைந்த காலம்
சின்னஞ்சிறுமி ஒருத்தி
அவளும் என்போல் போலும்

கண்ணிருந்தும் குருடாய்
   காதிருந்தும் செவிடாய்
உலகத்தில் உள்ளோர் போலே
பெற்றோர் இருந்தும் அனாதையாய்
படைக்கப் பட்டவர்கள் நாங்கள்

இனம் இனத்தைச் சேரும் - சுழலும்
பணமும் பணத்தைச் சேரும்
நாங்கள் மட்டும் விதிவிலக்கா

உறவுகள் என்றாலே உடலுறவுகள் என்று
அர்த்தம் எடுக்கும் அனர்த்தங்கள்
   - எங்கள் பெற்றோரும் தான்

இறைவனுக்கே இலஞ்சம் கொடுக்கும்
வழிவருபவர்கள் தாமே இவர்கள்
இவர்களுக்கு எங்கே இறைவனின்
இயக்கங்கள் தெரியப் போகின்றன

உதிக்கும் கதிரவன் மறைவது நியதி
வளரும் சந்திரன் கரைவது உறுதி
பிறப்புக்கு இறப்பு தொடர்வது இயற்கை
நாங்களும் பிரிந்தோம் - அல்ல
பிரிக்கப் பட்டோம்

பெற்றால்தான் பிள்ளையா என்று
   வசனம் பேசுபவர்கள்
எங்கள் உறவுக்கு தவறான
   இலக்கணம் வகுத்தனர்

அன்று நிழற்படம் எடுத்துத் தள்ளி
நிஜத்தை நிழலாக்கி மகிழ்ந்தோம்
இன்று நிழலையே நிஜமாக நினைத்துக்
கற்பனையில் களித்துச் சிரித்தோம்

போர்க்களத்தில் கொலையும் கொள்ளையும் நியதியாகிறது
ஆனால் கற்பழிப்பும், சிசுவதையும் அல்ல
காதல் போர்க்களத்தில் இதயம் திருடப்படலாம்
ஆனால் எனது சிசுவை சித்திரவதை செய்யாதீர்கள்

காலம் மாறும், கனவுகள் நினைவாகும்
என்று பேச இது காதல் வசனமல்ல
குருடன் திருவிழாக் கூட்டத்தில் தனது
குழந்தையைத் தொலைத்துப் புலம்புகிறான்

வருடங்கள் ஓடியது, கண்ணீரும் சேர்ந்துதான்
குழந்தைக்கும் தந்தையில்லை,
தந்தைக்கும் குழந்தையில்லை
இணைவது என்பது இறந்தாலும் முடியாது

எனது எழுத்துக்களை உனக்கு சகோதரிகளாக்கவே
உன்னைப் பார்வையிலிருந்து பிரித்தார் போலும்
பிறந்தது உனக்கு ஆயிரமாயிரம் சகோதரிகள்
அவர்கள் உன்னைத் தேடிக் காணவே
நாள்தோறும் விடுவதே கண்ணீர்ப் பூக்கள்


நிழலும் நிஜமும்

நீரிலும் நிலத்திலும் உணவைத் தேடினோம்
உண்மையை மட்டும் உயிரினின்று விலக்கினோம்

பாதையைக் கடக்க பாலங்கள் கட்டினோம்
பாவத்தைப் போக்கிட எந்தவழி செய்திட்டோம்

படகினிலே சென்று கடலினை கடந்திட்டோம்
பிறப்பினை கடக்க நினைக்கவே மறந்திட்டோம்

வன்மையைப் போக்கிட வாய்கிழியப் பேசிட்டோம்
வலையினை வீசியே உயிர்களைப் பிடித்திட்டோம்

நல்வழி வாழ்ந்திடவே ஒருவழி சிந்திப்போம்
இனியேனும் வாழ்வினில் துயரற்று வாழ்ந்திடுவோம்


என்னால் முடிந்தது

அமெரிக்காவும் இரஷ்யாவும் ஆயுதத்தை குவித்தாலும்
நட்புறவை வளர்த்திடவே நல்வழியை யோசித்தேன்

இனத்தாலே கலவரங்கள் உலகெங்கும் மூண்டாலும்
விடிவதற்கு நானிங்கே விடியும்வரை சிந்தித்தேன்

காமத்தின் கோலத்தில் கடற்கரையில் அலைவோரை
திருத்திடவே நானும் ஒரு திட்டத்தை தீட்டினேன்

என்நாடு என்னுலகம் பலவிதத்தில் உயர்ந்திடவே
என்னால் ஆனவற்றை செய்வதற்கு துடித்திட்டேன்

இப்போதைக் கென்னால் முடிந்தது இதுவென
குனிந்தே நானும் தெருவைக் கூட்டினேன்


இன்று முதல்

இன்று எனது வாழ்க்கையின்
வசந்த காலத்தின் ஆரம்பம் போலும்
உதிர்ந்த இலைகள் இருந்த இடத்தில்
புதிய இலைகள் பிறப்புப் பெற்றன

மரம் மரமாகவே நிற்கிறது
வருவதும் போவதும் உலக நியதி
இன்பத்தை தொடர்வது துன்பமென நினைத்து
துன்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன கண்கள்

பட்ட மரம் துளிர்ப்பதில்லை
ஆனால் பிளந்த பாறை சிற்பமாகிறது
ஆம் இந்தப் பாறை சிற்பமாகிறது
எந்த வேகத்தில் உப்புக்காற்றில் கரையுமோ

இது என் மறுபிறப்பா
நான் மரித்து உயிர்த்தேனா
இறந்த நான் பிறந்த போது
தந்தையில்லை, தாயுமில்லை,
   நண்பரில்லை, பகைவரில்லை

பரந்து விரிந்த இவ்வுலகம் முழுவதும்
எந்தன் உடன் பிறந்த இடமானது
இவ்வுலகிற்கும் தாயுமில்லை, தந்தையில்லை
ஆனால் இன்றுமுதல் சகோதரன் உண்டு

சிரிக்க மறந்த இதழ்கள் மீண்டும்
தத்தித் தத்தி நடக்கும் குழந்தையானது
நோக்கும் இடமெல்லாம் இன்பம், சூழ்ந்த
உலகம் எங்கும் இன்ப மயம்

புதிதாய்ப் பிறந்த உறவுகளால்
தாய் தந்தையரை மறப்பதில்லை
காதலியே நீ என்னுள் கலந்ததனால்
என் இதயத்தில் இருப்போரை விலக்கவில்லை

இணையும் இந்த உறவினால் என்னுள்
நடக்கும் இந்தப் போராட்டம்
ஓய்ந்து உனக்கு வழிவிட்டது
உன்னையும் தன்னுள் இணைத்துக் கொண்டது


தேக்கம் - பழையன
அழியும் இந்த உடலுக்கு
மெய் என்ற பெயரோ
உண்மை எனும் உயிரை
அது சுமந்து இருப்பதாலோ
பறந்து கொண்டிருக்கும் விமானம்
பத்தாயிரம் மீட்டர் உயரத்தில்
பற்றிக் கொண்டது
நெடிந்து உயர்ந்த
ஒரு தென்னை மரம்
புயற்காற்றில் படுத்துவிட்டது

உலகம் இருபக்கத்தில்
பல கலைகள் தரும்
மாபெரும் புத்தகம்
வேகத்தில் வரும்
இரயிலின் வெளிச்சம்
வேகத்தில் மறைந்தது
இந்த உலகிற்கு
மட்டும் ஏன் இந்த
வசந்த காலங்கள்

எழுத எழுதக்
கரைந்து கொண்டிருக்கிறது
அந்தப் பென்சில் முனை
வெய்யிலின் வெப்பத்தைக்
குறைக்க மணலில் புதையும்
பாலைவனப் பாம்புகள்
ஒரே ஒரு முறை
பூத்து மரிக்கும்
அந்த வாழைமரம்

வெளியில் தெரிவதில்லை
கரைந்து கொண்டிருக்கும் அந்த
பந்துமுனைப் பேனாவின் மை
உயர உயரப் பறந்து
வண்ண வண்ணங்களாக வெடித்துச்
சாம்பலாகிப்போகும் வாண வேடிக்கை
முக்கி முனகி ஏறிய
கிணற்றுத் தவளை
மீண்டும் உள்ளே விழுந்த்தது

பற்றி எரிவது
சூரியன்தான் என்றாலும்
பூமியும் காலில் சுடுகிறது
சூரியனை பூமி
சுற்றுகிறது - பூமியை
நிலவு சுற்றுகிறது

என்இனிய ஆதிமூலா

சிறுபிள்ளை ஆகவேண்டும் என்றுநான் சொல்லிட்டேன்
சுற்றிநின்றோர் ஏளனமாய் சிரித்தனர் எனைப்பார்த்து
புரியவில்லை அவர்களுக்கு என்வார்த்தை என்பதனால்
மன்னித்து அருளிடுவாய் என்இனிய ஆதிமூலா

சிறுபிள்ளை என்றுசொன்னால் இரண்டடி இரண்டங்குலம்
உயரம் கொண்ட உருவம் என்றே
ஓருருவம் உருவாக்கக் கற்பனையில் முயல்வதனால்
மன்னித்து அருளிடுவாய் என்இனிய ஆதிமூலா

சிறுபிள்ளை என்பதுவோர் கள்ளம்கபட மறியாதன்றோ
பொய்மை என்றும், சூழ்ச்சி என்றும்,
துன்பமென்றும் அறியாதென்றோ என்றவர் அறியாரதனால்
மன்னித்து அருளிடுவாய் என்இனிய ஆதிமூலா

உள்ளுக்குள் ஒன்றுவைத்து, வெளியினில் வேடம்போட்டு
பணத்தையே பெரிதாய் நினைக்கும் புத்தியங்கில்லை
பகைமை என்பதில்லை என்றறியா மானிடரை
மன்னித்து அருளிடுவாய் என்இனிய ஆதிமூலா


தனிமையில் சிரித்தேன்

தந்தை யமனைச் சென்ற டைந்தார்
தாயோ நோயில் படுத்து விட்டார்
காதலிக்கு கல்யாண மெனஓலை வந்தது
நாட்கள் நகரத் தாயும் மரித்தாள்

வாழ்க்கைத் துணையை நானும் அடைந்தேன்
அவளோ மாற்றான் கைபிடித்துப் போனாள்
குழந்தைக் குப்பாலே ஒவ்வாது போனது
நண்பர்கள் விலகினர் சுற்றமும் சிரித்தது

வேரூர் சென்றால் அனுமதி கேட்டனர்
பிறந்தஊர் திருப்பினால் எந்தஊர் என்றனர்
மரத்தடியில் அமர்ந்தேன் மழையும் வந்தது
மின்னல் மின்னியே கண்களைப் பரித்தது

தடுக்கி விழுந்ததால் குழந்தை இறந்தது
கிணற்றுநீர் குடித்தேன் கைகால் முடமானது
விதியை நொந்தேன் உலகை வெறுத்தேன்
தனிமையில் சிரித்தேன், இறைவன் தெரிந்தான்


பள்ளியிலே பயின்ற போது
   பார்த்த பெண்கள் பலபேருண்டு
பலவித நினைவுகளோடு
   மனதில் நின்றது ஒன்றே ஒன்று
தேர்விலே தோல்வி கண்டும்
   தேர் அவளை நிமிர்ந்து பார்த்து
தேற்றிக் கொண்டேன் நெஞ்சை
   அவள் கண்களில் வைத்தாள் நஞ்சை

பயிற்சிக்கு சென்று விட்டு
   பேருந்தில் வந்த போது
பலருடன் பார்த்தேன் அவளை
   அழகென இருந்தாள் அவளே
இதயத்தில் இருந்த இடம்
   நிறைந்து விட்டது இன்றுஎன
இமைப் பொழுதில் முடிவும்தானே
   செய்து விட்டேன் அன்று


வேற்றுமை

ஐரோப்பாவில் அழகு வண்ணம்
ஆப்பிரிக்காவில் அழகு மயிர்
ஆசியாவில் அழகு முகம்
அமெரிக்காவில் அழகு உடல்
ஆஸ்திரேலியாவிலும் இதே அழகு

பிறக்கும் பொழுது மழலைகள் அழுகிறது
இறைவனை விட்டுப் பிரிந்து வந்ததற்கு
பிரிந்த உயிருக்கு மனிதனும் அழுகிறான்
சுதந்திரம் இவனுக்குப் பிறப்பின் உரிமை
அழுகை அவனது உயிரின் உடமை

பிறக்கும் தருணம் அழுகையுடன் பிறந்தான்
சுற்றம் மிகவும் மகிழ்வுடன் சிரித்தது
மகிழ்வுடன் அவனும் மேலூர் சென்றான்
சுற்றம் மீண்டும் கூடியே அழுதது
பிறப்பும் இறப்பும் உயிரின் உடமை
உண்மை அறிந்த மனிதன் இறைவன்

பணமும் பொன்னும் பெண்ணும் என்றே
பெரிதென் றெண்ணி மமதையே கொண்டு
பகலும் இரவும் தன்னையே நினைத்து
மற்றெந் துயிரும் துச்சமென் றெண்ணி
கனவில் மிதந்து காலத்தைக் கழிப்பது
உந்தன் உடலே, உயிரும் அல்ல

பிறக்கும் பொழுது நீயும் அழுதாய்
பிறக்கும் பொழுது நானும் அழுதேன்
ஒருவன் சான்றோன், ஒருவன் கள்வன்
ஒருவன் கோழை, ஒருவன் வீரன்
ஒருவன் யோகி, ஒருவன் இராஜன்
இந்தப் பிரிவு பிறப்பில் அல்ல

பெண்ணின் மடியில் களிப்பது ஒருவன்
குடியின் வெறியில் பிதற்றுவ தொருவன்
பணத்தின் புகழில் பெருமையில் ஒருவன்
காதலி பிரிந்த பிரிவில் ஒருவன்
சோற்றுக் கழுகும் குழந்தையின் தகப்பன்
இறைவனைத் தேடி மரத்தடியில் ஒருவன்

இறக்கும் பொழுதும் ஆசையில் ஒருவன்
புதைக்கும் குழியில் பட்டுடையில் ஒருவன்
ஒருவேளை சோற்றுக் கலையும் ஒருவன்
இருக்கும் சோற்றை வெறுப்பவன் ஒருவன்
இவ்வளவு வேற்றுமை இருப்பது எதனால்
சீரிய சிந்தனை இல்லையென் பதனால்

பிறப்பு என்பதும் இறைவன் கொடுப்பது
இறப்பு என்பதும் இறைவன் பறிப்பது
இடையினில் ஏனிந்த இன்பதுன்ப வாழ்க்கை
என்றொரு கேள்வி உன்னுள் எழுந்தால்
உந்தன் சிந்தனையின் பிறந்தநாள் அன்று
மேற்கண்ட வேற்றுமை மறைந்திடும் அன்று


தனிமை

தடவிப் பார்த்தேன்
தடயம் இல்லை
தோன்றிய இடமெங்கும்
கிழித்துப் பார்த்தேன்
எங்கும் காணவில்லை

   கையினை விட்டு
   தென்பட்ட இடமெங்கும்
   துழாவிப் பார்த்தேன்
   எங்கும் இருட்டு
   மற்றெதுவும் இல்லை

காலடிச் சத்தம் கேட்டு
கண்களை நிமிர்த்திப் பார்த்தேன்
கன்னிகை ஒருத்தி நின்றாள்
புன்னகை புரியச் சொன்னாள்
உன் இதயம் என்னிடம் என்று

   இதயத்தை திருப்பிக் கேட்டால்
   முகத்தைத் திருப்பிக் கொண்டு
   தலையை குனிந்து கொண்டு
   தனிமை என்னை வாட்ட
   தவிக்க விட்டே சென்றாள்


குருவி

கொழுகொழுக் குருவி கொழுகொழுக் குருவி
குஞ்சுகள் கூட்டில் அழகுவாய்த் திறந்து
அன்புடன் அன்னையை உணவுக்கெனப் பார்க்கையில்
சின்னவாய் திறந்த தனதருமைக் குஞ்சுக்கு
தனதலகைக் குவித்து அன்புடன் ஊட்டியே
மகிழ்வுறும் காட்சியை காணநீர் வாரீரோ

சிறுபறவை அறிவேனும் சிந்தையிலே இல்லாது
தனது மகன் உண்கையிலே எதிர்கால எண்ணம் கொண்டு
தன்னை நீயும் காத்திடுவாய் வயதான பொழுதினிலே
என்றெண்ணி வளர்த்திடும் மானிடப் பெற்றோரே
கடமை என்றெண்ணி இதை தயங்காமல் புரிந்திட்டால்
தன் கடமை தான் செய்வான் உங்கள் மகன் எந்நாளும்


கனவுகள் எனது ஊன்றுகோல்கள்

நான் ஒர் உயிரை காதலிக்கிறேன்
ஆனால் நான் காதலிக்கப்படவில்லை
எனக்கு ஒரு மனைவி இருக்கிறாள்
ஆனால் நான் அவளுக்குக் கணவன் இல்லை
எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது
ஆனால் நான் அதற்குத் தந்தை இல்லை
இல்லாத உறவுகளுடன் உறவாடியே
தனிமை எனக்கு இல்லாமல் இருக்கிறது

உங்களைத் தனியே தவிக்க விட்டு
உங்கள் காதலி செல்லலாம்
உங்கள் மனைவி செல்லலாம்
உங்கள் மகவும் செல்லலாம்
என்னை விட்டு இயலாது

கனவுகள், எனது சேற்றுப் பாதையில்
உயிருக்குக் கை கொடுக்கும் ஊன்றுகோல்கள்

பிறப்புக்கு இறப்பு உண்டு
இணைவதற்கு பிரிவு உண்டு
ஆனால் என் வாழ்வில்
பிரிவதற்கு மட்டுமே பிரிவு

வாழ்க்கையின் பின் பக்கங்கள்
காற்றின் வேகத்தில் கலைக்கப் படுகின்றன
நாட்குறிப்பில் கடந்த நாட்கள்
நினைவுகளில் மட்டும் நகர மறுக்கின்றன
வாழ்க்கைப் பாதையில் நடக்கையிலே
திடீர் என்று சூரியன் மறைந்தது
சூரியனும் இருட்டில் அன்று நடப்பான் போலும்
அதனால்தான் சந்திரன் துணைக்குப் போனான்

இருட்டில் நடக்க அன்று எனக்கு
ஊன்றுகோல் இல்லை, வெறும் ஊனக்கால்கள்தான்
எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும்
உடலின் தோலைக் கிழித்து இரணப்படுத்தியது

எனது பாதை மாமிச உண்ணி போலும்
தடுக்கி விழுந்த எனது உடம்பில்
இப்பொழுது தழும்புகள் உண்டு
ஆனால் இனி காயங்கள் இல்லை
இப்பொழுது எனது கையில் ஊன்றுகோல் உண்டு
இனி இருட்டைப் பற்றிக் கவலை இல்லை


என்னையும் நீ அறிவாய் உன்
தன்மையை நான் அறிவேன்
இம்மையின் உறவு தொடர்ந்து
எம்மை என்றும் காத்திட நீ வருவாய்

சிந்தனை செய்வ துணர வைத்தாய்
நிந்தனை தன்னைத் துறக்கச் செய்தாய்
சதியினை கனவில் சுமக்க வைத்தாய்
மதியினில் எங்கும் நீயே நிறைந்தாய்

சீரமைத்து என்னை வாழ்வில் உயர்த்தி
பரமதைக் காட்டி உன் ஒளியைக் கூட்டி
மற்றுமொரு உயிரை எனக்குக் கொடுத்து
பற்றதை மேலும் வளர்த்து விட்டாய்

குழந்தை எனக்குக் கொடுத்துப் பற்பல
மழலைகளை இரசிக்க வைத்து உந்தன்
காலடிகள் தேடிடவே முன்னே வந்து
நாலடிகள் கொடுத்த எனது இறைவா

சிற்றின்ப கோபதாப குற்றமற்ற நெஞ்சும்
மற்றெந்த அரக்க குணங்களும் அகற்றி
உன்னையே சரண் அடைய என்று நீ
என்னைக் காப்பாய் செப்பிடு இறைவா


தட்டுங்கள் திறக்கப்படும்
கேள்விப்பட்டேன்
தட்டினேன், தட்டினேன்
திறக்கவில்லை கதவு
ஆனால் பிளந்தது கைகள்
இன்று சிந்தனையின் ஆரம்பம்
தட்டினால் திறக்கப்படுவது
மரக்கதவுகள் அல்ல, மனக்கதவுகள்

வாசல்களும், சன்னல்களும் இல்லாத
எனது இதயத்தைப் பூட்டி வைத்தேன்

உள்ளே இருந்தது இருட்டு மட்டுமே
சுவற்றை நானே உடைத்தேன்
இனி இதயம் வெட்டவெளி
மழையும் வரலாம், வெம்மையும் வரலாம்
தட்டாமல் திறந்து வழிவிட்டது
எனக்கு மட்டுமல்ல, உனக்கும்தான்
எனது இதயமும் பாகுபாடற்றதுதான்


நிலவே

நிலவே எல்லோரையும் போல்
நானும் உன்னை
களங்கமானவள் என்று
இயம்பவில்லை

நீ வெண்மைத் துணியில்
வரையப்பட்ட ஓவியம்

நீ வெண்ணிற வட்டமல்ல
கண், மூக்கு, வாய்
நிறைந்த கன்னி

நீ தலை கோதும் பொழுது
உதிர்ந்த குழல்கள்தான்
மேகங்களாக அலைகின்றனவோ

நீ கொண்ட முகமே இவ்வளவு
வெண்மை என்றால்
உன் உடல், கூந்தல் மூடிய
சல்லடைத் துளைபோன்று
தெரியும் நட்சத்திரங்களோ

நீ கொண்ட கூந்தலே
உன் கண்களை மூடிட
அதை விலக்க முயல்வதே
உன் மின்னல் கைகளோ

நீ வளர்ந்த கூந்தலை
வாரிப் பின்னலிட
உடல் களைத்துக்
கை சோர்ந்து வருவதுதான்
மழைத்துளிகள் எனும் வியர்வையோ

நீ அழகுக்கு மட்டுமா
உயிர் கொடுத்துள்ளாய்
மேலும் எங்கள் உயிருக்கும் அல்லவா

நீ குழந்தையின் சோறு முதல்
காதலின் சோர்வு வரை
இருட்டில் வெளிச்சம் போல்
உடன் நடக்கும் தோழியோ

நீ காதலின் தோல்வி கண்ட
காதலியைப் பிரிந்து நின்ற
காதலனுக்கு ஆறுதல் கூறும்
அன்புத் தாயோ

நீ மாதம் ஒருமுறைதான்
உடல் சேரும் உறவு
என்று காட்டிடத்தான்
திங்கள் ஒருமுறை
கதிரவன் என்ற கணவனுடன்
கை கோர்த்து பவனி வருகிறாயோ

நீ கொண்ட நாணத்தினால்
கணவரை விட்டு
விலகி நின்று
வெட்கம் கொண்டு
முகத்தை மெதுவாய்த் திருப்பி
தலைகுனிந்து நிற்கும்
நாளுக்குத்தான் முன்னோர்
பௌர்ணமி என்று
பெயர் இட்டனரா

நீ உன் கணவருக்கு
விருந்தோம்பலில் துணை நிற்கவோ
உன் வீடு என்ற உலகின்
விருந்துக்கு வந்த எங்களை
அன்புடன் காக்கிறாய்

நீ கரும்பலகையில்
எழுதிய எழுத்துக்களாய்
எங்களை சிந்திக்க வைக்கிறாய்

நான் இவ்வளவு கொடுக்கும் உனக்கு
வெறும் நன்றியை மட்டுமே
கூற இயலுவதற்கு வருந்துகிறேன்


காதலியால் நான் கருவுற்றேன்
ஆம் - என்னைக் கற்பழித்துவிட்டாள்
விளைவு
பிறந்தது ஒரு மகவு
பிறந்ததும் பேசியது
ஆம் - தனது பெயர் கவிதை என்று

என்னை, எனது குழந்தையை
கைவிட்டு விட்டாள் காதலி
மறந்தேன், காதலியை அல்ல
அவள் திரும்புவாள் என்பதை

எடுத்து வளர்த்தேன்
இனி - எனக்கு இன்னொரு குழந்தை
எடுத்து வளர்த்தவள்
எனது கவிதையை வளர்த்தாள்

எனக்கு மணம் பேசி முடித்து
என் மகவுகளுக்கு
சித்தியை கொடுக்காதீர்
மரணமும், மணமும்
மனிதனுக்கு ஒருமுறைதான்


நெஞ்சைக் கிழித்து
அனுமன் இராமனை
இதயத்தில் காட்டினான்
நானும் கிழித்தேன்
அங்கு என்
இதயமே இல்லை

உதிரம் ஓட
இதயத் துடிப்பு எதற்கு
என் நினைவுத் துடிப்பு
போதும் என நினைத்தாயோ

இருப்பதை விட்டு
பறப்பதைப் பிடிக்கும்
மானிடனல்ல நான்
எனக்கு உன்
நினைவுத் துடிப்பு போதும்


எனது காதல் உன்மீது உள்ள காதல்
தமிழ் இலக்கணத்தின்
வினைத்தொகைக்கு
எடுத்துக்காட்டு

அழிவது எழுத்தாயிருக்கலாம்
சிதைவது சிற்பமாயிருக்கலாம்
உதிப்பது மறைந்து விடலாம்
வளர்வது கரைந்து விடலாம்
கரையது கல்லரையாயிருக்கலாம்
ஆனால் தொடர்வது -
நிச்சயமாக எனது காதலே

கல்லூரி வாசலில்
கண்ணசைத்துக் காட்டிடும்
காளையல்ல நான்
என் உறக்கத்தில்
இதயத்திற்குள் இருக்கும் உன்னை
எழுப்பி இரசிக்கும்
அன்புள்ள இரசிகன் நான்

உனது காதலுக்காக
காத்திருப்பேன் என
நான் கூறவில்லை
எனது காதலை
நான் எதற்கும்
விலைபேச விரும்பவில்லை

காதலால் கரைவது
என் மனமல்ல
கனக்கிறது என் மனம்
ஆம், இழப்பினால்
இதயம் இரும்பாகிவிட்டது


வாழ்க்கையினை வெறுத்தவன்
வாழ்க்கையில் அடிபட்டவன்
வாழ்க்கையை விரும்பாதவன்
வாழ்க்கையை விட்டு
ஒதுங்கி விடுகிறான்

இன்பமும் துன்பமும்
இகழ்ச்சியும் புகழ்ச்சியும்
லாபமும் நஷ்டமும்
நண்பனும் பகைவனும்
பெற்றவரும் உற்றவரும்
எவையுமே பாதிப்பதில்லை

கடலில் விழுவதை
கடல் ஏற்பது போல்
வருவதும் போவதும்
இவனுக்கு சாதாரணம்
கல்லினைக் காற்று கரைக்கலாம்
ஆனால் இந்தக் கடலினை ....


துக்கங்கள் கண்களைக் கரைத்தது
தூக்கங்கள் பிறக்க மறுத்தது
நாட்கள் நகர மறந்தது
நினைவுகள் மட்டும் நிலைத்து நின்றது

நினைவுகளில் இன்பம் கலந்தது
உன் நீழலைக் காண நினைத்தது
சொர்கங்கள் சுழன்று வந்தது
தஞ்சம் என உன் காலில் விழுந்தது

எண்ணங்கள் சிறகை அடித்தது
கனவுகள் பின்னே நகர்ந்தது
காலங்கள் மாறி விட்டது
கனவுகளில் நின்று நிலைத்து விட்டது

இன்பம் நினைவுகளில் அல்ல, கனவுகளில்
குடும்பமும், குழந்தையும், ஏன்?
மரணமும் கூட மனதளவில்
முடிந்து விட்டவைதான்
தொடர்பவை அல்ல

உனக்குப் புரியவேண்டும் என
எனது எழுத்துக்கள் பிறப்பதில்லை
உள்ளத்தின் உணர்ச்சிகள்தான்
வெறும் உணர்ச்சிகள்தான்!
சிந்திக்க வைத்தது நீ
சிந்தனைகள் என்னோடு உறங்கிக் கிடக்கிறது
உறக்கம் கலைய வெகு நேரமில்லை

எனது சிந்தனைகள்
உனது எண்ணங்களை விழிக்க வைக்கலாம் -
இல்லை என்றாலும் கவலையில்லை - அது
எனது உயிரை உரப்படுத்துகிறது
எனது சிந்தனையின் தாயே
உனக்கு எனது
வாழ்க்கையை விட நெடிய
நன்றியைக் கூறிக் கொள்கிறேன்

உயிரை உடல் சுமக்கிறதா
அல்ல
உடலை உயிர் சுமக்கிறது
உடலால் நடக்க வேண்டியவை
நடந்தபின் உடலை உயிர் பிரிகிறது

இந்த நன்றி கெட்ட உயிர்
ஏன் என் உடலை விட்டுப் பிரியவில்லை
என்றோ ஒருநாள்
என்னை சிந்திக்க வைத்த நீயும்
சிந்திப்பாய் என்றுதானோ?

வருத்தப்படுகிறேன் - என் உயிர்
உடலை விட்டுப் பிரிய தாமதிப்பதற்கு
என் உயிரும்
ஏமாற்றத்தில் விழப்போவதற்கு


உனது நிஜங்கள் அகலலாம்
நிழல்கள் - அது நிலைத்துவிட்டன
அழியாத எழுத்தாய், உடையாத சிற்பமாய்
மறையாத சூரியனாய், தேயாத சந்திரனாய்
நிழல்கள் நிலைத்து விட்டன
நிஜங்கள் மறைந்து விட்டன

சின்னச் சின்னச் சோலை
காதல் பூக்கள் பூக்கும் வேளை
புயல் என்ற தடையது பிறந்ததம்மா
அன்பு கொண்ட அகங்களும் கலைந்தே சிதைந்ததம்மா

பூக்கள் சிதைந்து போனால்
மீண்டும் பூக்கள் மலர்ந்திடுமே
காதல் சோலை சிதைந்து விட்டால்
அதனைத் தாங்க உயிரிருக்காது


ஒரு துளி

உன்னை சுற்றி
வெறுப்பவர்கள் யாருமில்லை
உன்னை -
பகை கொள்ள நினைவுமில்லை
மற்றவரே மகிழ்ச்சியுற்றால்
எனக்கு
ஆம், சந்தோஷம்
அதற்கு அளவில்லை

சற்றே நான் வருத்தமுற்றால்
அது
உன்னுடன் பேச இயலாமைக்கு
பிரித்துவிட்டது
விதியல்ல, சதி
ஆம்
உன் தந்தையின் சதி

நினைத்துப் பார்க்கிறேன்
நான் மட்டற்ற மகிழ்ச்சியுற்றேன்
என்னை நினைத்து
என் பாசம், உன் மேலுள்ள பாசம்
எதிர்பார்ப்பது -
நிச்சயமாக எதுவுமில்லை
ஏன்?
உனதன்பைக் கூட

எனதன்பை நீ
மறந்திருப்பாய் என்றால்
நம்பிட மாட்டேன்
நான் என்ன மடையனா
மேற்கில் சூரியன் உதிக்கின்றது என்றால்
அதனை உடனே நம்பிவிட

என்னை மறந்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை
இன்று என்னுடன் பழகாமலிருக்கலாம்

ஆனால் அன்று
நாம் நண்பர்களாயிருந்தது
அது என்றும் பொய்க்காதது
அது நான் மரணத்தில் விழும்போது
உன் கண்ணில் வடியும்
ஒரு துளி நீரில் தெரியும்


சிறுமி

பருவம் நிறைந்த மங்கை என்றோ
பார்த்துக் களிக்கும் உருவம் என்றோ
கனவில் நிற்கும் கன்னி என்றோ
கனியே உனை நான் கூறவும் இல்லை

தவழ்ந்து வரும் குழந்தை போன்று
தாவி அணைக்கும் மழலை போன்று
வெட்கிச் சிரிக்கும் சிறுமி போன்று
என்னுள் நீயும் நிலைத்து விட்டாய்


மீண்டும் பிறந்த நாள்

பாசத்தை நெஞ்சில் வைத்து
   நேசத்தை உன்னிடம் காட்டி
உந்தன் வீடு தேடி உன்
   சொந்த ஊர் ஓடி வந்தேன்
நிந்தன் அகம் கண்டேன்
   முகவாயில் மலைத்து நின்றேன்
நெஞ்சம் துடித்திட நின்றேன்
   துணிந்து முன்னடி வைத்தேன்
கதவினைத் தட்டி நின்றேன்
   இதயத்தை இழந்து நின்றேன்

தாயவள் கதவைத் திறந்தாள்
   முகத்தில் வெறுப்புடன் நின்றாள்
"எதுக்கு நீ இங்கு வந்தாய்"
   என்றவள் வெறுப்புடன் கேட்டாள்
தவிப்புடன் நின்றேன் நான்
   பதில் சொல்ல விழித்தேன் நான்
வந்தது தவறு என்றாள் தன்வீடு
   வருவது வேண்டாம் என்றாள்
முகவரி கொடுத்த தாயே
   முகத்தினை சுளித்துக் கொண்டாள்

பரிசுகள் கொடுத்த அன்னை
   பரிதவிக்க வைத்தாள் என்னை
கொடுத்ததை திருப்பிக் கொடுத்தாள்
   என் இதயமதைக் கொடுத்திடுவாளோ
கண்கலங்கி நின்றேன் நானே
   கவலையுடன் தவித்தேன் நானே
பதில் சொல்ல வார்த்தை தேடி
   பலமுறை நினைத்துப் பார்த்தேன்
"மன்னித்து விடுங்கள் என்னை"
   இதுதான் தெரிந்தது எனக்கு

உன்னை நான் பார்ப்பதற்கு
   வாராது போனேன் என்று
என்றும் நீ எண்ணிடாதே
   என்னை நீ மறந்திடாதே
நான் கொடுத்த பொருளை நீயும்
   தேடிடும் பொழுதேயானும்
உன் அன்னை கூறிடுவாள், "அந்தத்
   தறுதலை வந்தான்" என்று

தவறு என்மீதுதான் குழந்தாய்
   அடுத்தவன் கிணற்று நீர் நீ
உன்னிடம் நான் பாசம் வைத்தால்
   உன் அன்னை விரும்பிட மாட்டாள்
பின் ஏன் தூண்டி விட்டாள்?
   முகவரி எனக்குக் கொடுத்தாள்
வீட்டிற்கு வந்திடச் சொன்னாள்
   பரிசினைத் திருபிக் கொடுத்தாள்
நஞ்சினை வாயினில் சுரந்து
   என் செவியினில் நிரப்பி விட்டாள்

"எல்லாம் நன்மைக்கே" என்பது
   இறைவன் திருவருளாம்
இனிமேல் நான் என்றும்
   யார் மேலும் பாசம் வைய்யேன்
இதயத்தை இழந்து விட்டேன்
   இன்னலதைச் சுமந்து விட்டேன்
உன் தாய்திரு நாட்டில் இனிநான்
   தங்கிடவும் நினைக்கவில்லை
வேதனையை முறையிடவே எனக்கு
   இங்கு யாருமில்லை

நண்பரிடம் சொன்னால் அவரும்
   முன்னமே தெரியும் என்பார்
வீட்டினிலே சொன்னால் என்னை
   இழுக்காகப் பார்த்திடுவார்
மனதினிலே சாந்தி இல்லை
   நினைவினிலே ஓய்வு இல்லை
இனியும் உன்னைப் பாராது
   இருந்திடவும் நினைக்கவில்லை
பார்த்திடவும் மனதிற்கு துணிவு
   தர நீயும் இல்லை

காதலில் தோல்வியினை
   இருமுறையாய்த் தழுவி விட்டேன்
இந்த முறைக் கற்றுக் கொண்டேன்
   பாசம் வைப்பது பாவம் என்று


பிள்ளைப் பிராயத்திலே நிந்தன்
   மேனியழகைக் கண்டேன்
இன்னும் சற்று நாட்கள் சென்றதும்
   என்னுள்ளம் உருகக் கண்டேன்
உன்னுறவை நினைத்த நாட்கள்
   எப்பொழுதும் நெருப்பினில் தீயக்கண்டேன்
உன்னைச் சரணடைந்தேன், என்
   வாழ்க்கை உன்பாத மண்ணில் கண்டேன்
என்னுயிர் என்றானபின் நீயும்
   விலகுவதேனடியோ?

சற்றே உனை மனதில் கொண்டேன்
   என்னுடலும் வானத்தில் நீந்தக் கண்டேன்
இற்றுப் போகாமல் என் மனதில்
   இணைந்து நிற்பவளே
என் மனக் கங்கைக்குள்ளே உன்னை
   நான் ஊற்றாய் நிறுத்திடுவேன்
பண்புடன் பேசிடுவேன் உன்னுயிரைப்
   பகலிரவாய்க் காப்பேன்
எண்ணமுறைத்து விட்டேன் நீயும்
   விலகுவதேனடியோ?


காதலர்கள்

பெற்றவரை வெறுத்துவிட்டு
எதிர்பாலினரோடு ஓடும்
மிருக சாதிகள்
அர்த்தமற்ற காமங்கள்
ஆடிமாதத்தின் தெருவோர
நாய்கள்

உற்றவரை பகைத்துக்கொண்டு
உடலுறவில் உவகை கொண்டு
பின் விளைவில் மனதில் உருகி
வீடு திரும்பும்
ஓடுகாலிகள்

ஊரைச் சுற்றி வந்து
இன்பத்தை வயிற்றில் சுமந்து
பரம்பரை மானத்தைப் போக்க
பண்பாட்டில் புரட்சி ஏற்படுத்தும்
புரட்சிப் பூக்கள்


பகலில் ஏற்றிய மெழுகுவர்த்தி

நான் பகலில் ஏற்றிய
மெழுகுவர்த்தி
எரிவதும் நான்
உருகுவதும் நான்
பயன் யாருக்கு
எனக்குத் தெரியவில்லை

என்னை ஏற்றியது யார்
நினைத்துப் பார்க்கிறேன்
காதலியே, நீயேதான்

விளக்கு ஒன்று
விழும் விட்டில் பூச்சி
ஒன்றா?
ஒன்றாகவே இருக்க
விரும்புவேன் நான்


காதல் ஆத்திச்சூடி

அன்புள்ளம் இங்கு உண்டு
   அணைப்பதற்கு ஆளில்லை
ஆசை கொண்ட நெஞ்சமுண்டு
   ஆள்வதற்கு நேரமுண்டு
இருப்பதற்கு இடமும் உண்டு
   இன்பத்திற்கு உறவும் உண்டு
ஈரிரண்டு ஆண்டுகளாய் இதயத்தை
   ஈதலுக்கு காத்து இருந்தேன்
உன்னையே எண்ணி நானும்
   உயிரையே சுமந்து உள்ளேன்
ஊனதை வெறுத்து நின்றேன்
   ஊடலுக்குக் காத்திருப்பேன்
எட்டி நீயும் சென்றாலும்
   என்னை விலக்கி விட்டாலும்
ஏனென்ற கேள்வி எழும்
   ஏனோ உனை உயிர் நாடும்
ஐயம் என்மேல் கொள்ளாதே
   ஐம்புலனை நான் தருவேன்
ஒன்று பட்டென்றும் நாமும்
   ஒற்றுமையாய் உயிர் வாழ்வோம்
ஓடாமல் இங்கு வந்து
   ஓருயிராய் இணைத்துவிடு


கண்டவுடன் காதலாம் கருத்துதனைத் தவறென்பேன்
காண்கின்றோம் இருவருடம், காதலென்பது வரவில்லை
கண்ணுற்றேன் கருத்தில் கொண்டேன் காதலென்பதை
கட்டாயத்தில் வருவது காதலென்பது அல்ல



பழையன
்ளைப் பிராயத்திலே நிந்தன்
   மேனியழகைக் கண்டேன்
இன்னும் சற்று நாட்கள் சென்றதும்
   என்னுள்ளம் உருகக் கண்டேன்
உன்னுறவை நினைத்த நாட்கள்
   எப்பொழுதும் நெருப்பினில் தீயக்கண்டேன்
உன்னைச் சரணடைந்தேன், என்
   வாழ்க்கை உன்பாத மண்ணில் கண்டேன்
என்னுயிர் என்றானபின் நீயும்
   விலகுவதேனடியோ?

சற்றே உனை மனதில் கொண்டேன்
   என்னுடலும் வானத்தில் நீந்தக் கண்டேன்
இற்றுப் போகாமல் என் மனதில்
   இணைந்து நிற்பவளே
என் மனக் கங்கைக்குள்ளே உன்னை
   நான் ஊற்றாய் நிறுத்திடுவேன்
பண்புடன் பேசிடுவேன் உன்னுயிரைப்
   பகலிரவாய்க் காப்பேன்
எண்ணமுறைத்து விட்டேன் நீயும்
   விலகுவதேனடியோ?


காதலர்கள்

பெற்றவரை வெறுத்துவிட்டு
எதிர்பாலினரோடு ஓடும்
மிருக சாதிகள்
அர்த்தமற்ற காமங்கள்
ஆடிமாதத்தின் தெருவோர
நாய்கள்

உற்றவரை பகைத்துக்கொண்டு
உடலுறவில் உவகை கொண்டு
பின் விளைவில் மனதில் உருகி
வீடு திரும்பும்
ஓடுகாலிகள்

ஊரைச் சுற்றி வந்து
இன்பத்தை வயிற்றில் சுமந்து
பரம்பரை மானத்தைப் போக்க
பண்பாட்டில் புரட்சி ஏற்படுத்தும்
புரட்சிப் பூக்கள்


பகலில் ஏற்றிய மெழுகுவர்த்தி

நான் பகலில் ஏற்றிய
மெழுகுவர்த்தி
எரிவதும் நான்
உருகுவதும் நான்
பயன் யாருக்கு
எனக்குத் தெரியவில்லை

என்னை ஏற்றியது யார்
நினைத்துப் பார்க்கிறேன்
காதலியே, நீயேதான்

விளக்கு ஒன்று
விழும் விட்டில் பூச்சி
ஒன்றா?
ஒன்றாகவே இருக்க
விரும்புவேன் நான்


காதல் ஆத்திச்சூடி

அன்புள்ளம் இங்கு உண்டு
   அணைப்பதற்கு ஆளில்லை
ஆசை கொண்ட நெஞ்சமுண்டு
   ஆள்வதற்கு நேரமுண்டு
இருப்பதற்கு இடமும் உண்டு
   இன்பத்திற்கு உறவும் உண்டு
ஈரிரண்டு ஆண்டுகளாய் இதயத்தை
   ஈதலுக்கு காத்து இருந்தேன்
உன்னையே எண்ணி நானும்
   உயிரையே சுமந்து உள்ளேன்
ஊனதை வெறுத்து நின்றேன்
   ஊடலுக்குக் காத்திருப்பேன்
எட்டி நீயும் சென்றாலும்
   என்னை விலக்கி விட்டாலும்
ஏனென்ற கேள்வி எழும்
   ஏனோ உனை உயிர் நாடும்
ஐயம் என்மேல் கொள்ளாதே
   ஐம்புலனை நான் தருவேன்
ஒன்று பட்டென்றும் நாமும்
   ஒற்றுமையாய் உயிர் வாழ்வோம்
ஓடாமல் இங்கு வந்து
   ஓருயிராய் இணைத்துவிடு


கண்டவுடன் காதலாம் கருத்துதனைத் தவறென்பேன்
காண்கின்றோம் இருவருடம், காதலென்பது வரவில்லை
கண்ணுற்றேன் கருத்தில் கொண்டேன் காதலென்பதை
கட்டாயத்தில் வருவது காதலென்பது அல்ல



பழையன